• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • செருப்பால அடிக்கணும்.. குறட்டை விடாத.. விட்டுகொடுத்தேன்! முதல் நாமினேஷனில் கிழிந்த முகமூடிகள்

செருப்பால அடிக்கணும்.. குறட்டை விடாத.. விட்டுகொடுத்தேன்! முதல் நாமினேஷனில் கிழிந்த முகமூடிகள்

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

தாமரை செல்வி தலைவர் ஆனது எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் சின்ன பொண்ணுக்கு அது பிடிக்கவில்லை

 • Share this:
  நல்லவர்கள்.. அன்போடு பழகுகிறார்கள் என நினைத்த அனைத்து போட்டியாளர்களின் நிஜ முகங்கள் முதல் நாமினேஷனில் வெட்ட வெளிச்சமானது.

  பிக் பாஸ் இல்லத்தில் 9 ஆம் நாள் “வலி மாங்கா வலிப்பு” சாங்குடன் தொடங்கியது. பாட்டை கேட்டு தான் ஹவுஸ்மேட்ஸ் கண்விழித்தனர். பிரியங்கா நின்ற இடத்தில் இருந்து கொண்டே ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார். அடுத்த சில மணி நேரத்திலே கிச்சன் டீம் குக்கிங் வொர்கை தொடங்கினர்.பிரியங்கா அண்ணாச்சிக்கு ஆங்கில பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆங்கரிங்க விட்டாலும் பிரியங்கா பொளச்சிக் கொள்ள இங்கிலீஷ் டீச்சர் வேலை ரெடியா இருக்கு. மார்னிங் பிரேக் ஃபாஸ்டை அண்ணாச்சி ஒரு கைப்பார்த்து கொண்டிருக்க பாவனி, இசைவாணியிடம் புலம்பி கொண்டிருந்தார். (நீ புலம்பிட்டு இருக்குற இசைக்கும் அதே நிலைமை தான்மா) அக்‌ஷரா ஆடிடூயட் பிக் பாஸ் வீட்டில் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை வெளியில் இருந்து பார்த்த அண்ணாச்சி, பிரியங்கா- பாவனி மற்றும் இசையை கூப்பிடுகிறார்கள்.

  ஐக்கி, பெட்ரூமில் வந்து இருவரையும் அழைக்க, பாவனி சிரித்துக் கொண்டே வரேன் என்றார். உடடேன் ஐக்கி, எல்லா குரூப்பிடமும் நானே சென்று பேசுவதாக வருத்தப்பட ,இசை உன் கேள்வியிலேயே பதில் இருக்கு. நாங்களும் குரூப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கோம் என்றார். அடுத்தது டைனிங் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் சாப்பிட தொடங்கினர். பிரியங்கா தட்டில் இருந்த சாப்பாட்டை இசை எடுத்து சாப்பிட்டார் (அப்போது பிரியங்கா கொடுத்த லுக்க யாரெல்லாம் நோட் பண்ணீங்க). பாத்ரூமில் அண்ணாச்சி தாமரை செல்வியை தெளிவாக குழப்பி கொண்டிருந்தார்.பிரியங்கா பண்ண அட்வைஸ் தன்னை மாற்றி இருப்பதாக இனிமே வேற மாதிரி நடந்து கொள்ள போவதாக தாமரை சொல்ல, “நீ நீயா இரு” என்றார் அண்ணாச்சி. கடைசி வரை தாமரை அவருக்கு தோணிய படி இருந்தாலே போதும். ஏற்கெனவே அடுத்த ஜூலி தாமரையா? இசைவாணியா? என்ற சலசலப்பு சோஷியல் மீடியாவில் சென்று கொண்டிருக்கிறது.

  ராஜாவுக்கு ராஜா டாஸ்க் தொடங்கியது. தலைவருக்கான இந்த வார டாஸ்கில் முதல் போட்டியிலே ரூல்ஸ் பிரச்சனை வந்தது. பலூன் உடைக்கப்பட்டவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என பிக் பாஸ் கொட்டை எழுத்தில் குறிப்பிட்டிருந்தும் அபிநவ் புது ரூல்ஸை கையில் எடுத்து விளையாட தொடங்கினார். இதனால் நிரூப்க்கு அபிநவ் மீது எரிச்சல் வர, “நீ விளையாட்டை கெடுக்குற” அப்படின்னு சொல்லும் போது கோபப்படாத அபிநவ், அண்ணாச்சி இவங்க ஜெயிக்கணும், அவங்க ஜெயிக்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா?ன்னு கேட்டதுக்கு சூடாகி பொங்குகிறார். அபிநவ்வுக்கு வருண் சப்போர்ட் செய்து பேசுகிறார். கடைசியில் ஐக்கி ரூல்ஸ் புக்கை படித்து பிரச்சனையை முடிக்கிறார். சின்ன பொண்ணா? தாமரை செல்வியா? என இருமுனை போட்டி நிலவ, சின்ன பொண்ணு தனது பலூனை உடைத்துவிட தாமரை செல்வி இந்த வார தலைவர் ஆகுகிறார். அதனால் தான் அவரின் பெயர் நாமினேஷனில் தப்பித்தது.

  தாமரை செல்வி தலைவர் ஆனது எல்லோருக்கும் சந்தோஷம் என்றாலும் சின்ன பொண்ணுக்கு அது பிடிக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. பாய்ஸ் டீம் வழக்கம் போல் தாமரையை கலாய்க்க, அக்‌ஷ்ரா நெகட்டிவாக இந்த வீட்டில் வேலை செயய்வில்லை என்றால் உங்களை தான் திட்டுவார்கள் என்கிறார். சின்ன பொண்ணு பிரியங்காவிடம் விட்டு கொடுத்ததை பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். தாமரை பேச்சு, நடைமுறை மாறியதால் சண்டை வர வேண்டாம்ன்னு விட்டு கொடுத்ததாக கூறுகிறார். அதற்கு பிரியங்கா தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார். தாமரை வழக்கம் போல் சின்ன பொண்ணுவிடம் வந்து பேச, “நான் விட்டு கொடுத்ததால் தான் நீ ஜெயித்த” என்று தாமரையை அசிங்கப்படுத்த அவரின் முகம் மாறுகிறது. உடனே தாமரை உங்கள கஷ்டப்படுத்தி இருந்தா சாரி என்கிறார். இதை இசைவாணியும் நோட் செய்கிறார். (எங்க போய் பத்த வைப்பாருன்னு தெரியல)

  வீட்டு தலைவர் தாமரை குக்கிங், கிளீனிங், வாஷிங், பாத்ரூம் டீமை பிரித்தார். தமிழில் பேச வேண்டும், பகலில் தூங்க கூடாதுன்னு ரூல்ஸையும் போட்டார். அடுத்தது முதல் வார நாமினேஷன் தொடங்கியது முதல் ஆளாக உள்ளே போன அக்‌ஷரா, இசைவாணி மற்றும் தாமரை மீது இருக்கும் வெறுப்பை கொட்டி தீர்த்தார். தாமரையை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அடுத்தது அவருக்கு டிஸ் லைக் கொடுத்த ஸ்ருதியை தேர்வு செய்தார். இப்படியே 17 போட்டியாளர்களும் ஒவ்வொருவரை நாமினேட் செய்தனர். பிக் பாஸ் அண்ணாச்சி, சிபி பேச்சை பற்றி விமர்சித்தார். அபிஷேக் ராஜன் அக்‌ஷ்ரா ஆடிடூயூட் பற்றி தெளிவாக விளக்கினார். பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் இசைவாணி பெயரை சொல்லினர். அதற்கு அவர்கள் சொன்ன முக்கியமான காரணம், அவர் யாருடனும் ஜெல் ஆக மாட்டுகிறார் என்பது தான்.

  அதே இசைவாணி பேசும் போதும், தன்னை பலரும் ஒதுக்குவதாக, மனதளவில் துன்புறுத்தியாக இரண்டு விஷயங்களை குறிப்பிடுகிறார். இசைவாணி பாடியதால் தான், சின்ன பொண்ணு வீடில் பாடுவதை குறைத்து விட்டதாக அவர் சொல்லியதாக கூறினார். அடுத்தது இமான் அண்ணாசி, இசை குறட்டை விட்டதை குறிப்பிட்டு பேசியதாக கூறுகிறார். இதனாலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக இசை பதிவு செய்கிறார். அதே போல் தாமரையும் சின்ன பொண்ணு பேசியது, மதுமிதா “வாடி போடி பேசுபவர்களை செருப்பால் அடிக்கணும்” என்பதை நாமினேஷனில் பதிவு செய்கிறார். (இதெல்லாம் எப்ப நடந்தது? மிஸ் பண்ணாம இனி அன் சீன்களையும் பார்க்கணும் போல) எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் 1 ஓட்டு வாங்கியவர்களை கூட நாமினேஷன் லிஸ்ட்டில் சேர்த்தார் பிக் பாஸ். இது முடிந்தவுடன் நீரூப் ரொம்ப நல்ல பிள்லை போல் யாரை நாமினேஷன் செய்தேன் என்று அவரிடமே கூற போவதாக உருட்டு உருட்டினார். ஆனால் பிரியங்காவை அதை அசால்ட்டாக ஆண்டில் செய்தார்.

  மளிகை கடையில் வேலை.. பனகல் பார்க்கில் தூக்கம்! இமானுவேல் இமான் அண்ணாச்சியானது இப்படி தான்!

  ஸ்ருதி யதர்ச்சியாக ஒருவார்த்தை சொல்ல, அதுக்கும் சின்ன பொண்ணுவின் முகம் மாறுகிறது, (ரொம்ப ரொம்ப டெம்பர் கேரக்டராக இருக்காங்க). அடுத்தது அபிஷேக்கும் பிரியஙிகாவும் டாஸ்க் பத்தி பேச, “நானும் அண்ணாச்சியும் நிரூப் தான் ஜெயிப்பான் என நினைத்தோம். தாமரை வரும்ன்னும் எதிர்பார்க்கல” அப்படின்னு சின்ன பொண்ணும் சொல்லும் போது ”திறமை இருப்பவர்கள் ஜெயிப்பார்கள். நிரூப் தான் ஜெயிக்கணும் அப்படின்னு சட்டம் இல்லைன்னு” சவுக்கடி கொடுத்தார். ஆல்வேஸ் பிரியங்காஅல்டிமேட் தான். ஒருவழியாக மதுமிதாவும் இசைவாணியும் பேசி இருவருக்கும் இடையேயான விரிச்சலை சரி செய்தனர். இசைவாணி தன்னை ஹவுஸ் மேட்ஸ் ஒதுக்குவதாக கூறி வருத்தப்பட்டார். இரவு 11 மணியளவில் பாவனா வீட்டில் குரூப்ஹிசம் இருப்பதாக மதுமிதாவுடன் புலம்பி கொண்டிருந்தார். இந்த வார நமினேஷனில் வராத பெயர் பாவனி தான். அதை அப்படியே கேரி பண்ணிக்கலாம் என பிளான் செய்து விட்டாரா? என தெரியவில்லை ஒரே செண்டிமெண்ட், சிம்பத்தி ரோலா பிளே செய்து கொண்டிருக்கிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: