• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • விளையாட்டு வில்லங்கமானது... எல்லை மீறிய நமீதாவின் வார்த்தைகள்! கண்ணீர் விட்ட தாமரை

விளையாட்டு வில்லங்கமானது... எல்லை மீறிய நமீதாவின் வார்த்தைகள்! கண்ணீர் விட்ட தாமரை

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 6 Review : இதற்கு நடுவில் கொளுத்தி வேலை பார்த்தது பிரியங்கா தான்

 • Share this:
  பிக் பாஸ் வீட்டில் விளையாட்டு வினையாவது பலமுறை பார்த்த ஒன்று. அதுப்போல தான் நேற்று நமீதாவுக்கும் தாமரை செல்விக்கும் இடையில் நடந்த வார்த்தை போர்.

  ஐந்தாவது நாள் தொடர்ச்சியாக 12 மணியளவில் லிவிங்கி ஏரியாவில் தாமரை செல்வி மாடல் போல் கேட் வாக் நடந்து கொண்டிருந்தார். ஐக்கி, ஸ்ருதி, நமீதா எல்லோருமே அவரை உற்சாகப்படுத்தி எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தனர். (லைட்டாக ஜூலி ஞாபகம் தான் வந்தது. )போற போக்கில் இமான் அண்ணாச்சி தாமரையை கலாய்க்க, நமீதா சென்று மூன் வாக் பற்றி கிளாஸ் எடுத்தார். அதன் பின்பு ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் சேர்ந்து மாஃபியா கேம் விளையாட தொடங்கினர். இசைவாணிக்கு பயங்கர தூக்கம் இருந்தாலும் தாக்கு பிடித்து ஆடினார். சத்தம் ஓவரா போக, தூங்குபவர்களை தொல்லை செய்ய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் விளையாடுபவர்கள் மட்டும் டைனிங் ஏரியாவுக்கு வந்து விளையாட்டை தொடர்ந்தனர். நமீதா vs பிரியங்கா என இருக்க, கடைசியாக பிரியங்கா தான் விளையாட்டில் ஜெயித்தார்.

  இந்த விளையாட்டில் தாமரை செல்வியை நம்பியதால் நமீதா தோற்றார் போல, இதனால் சிரிப்பை அடக்க முடியாமல் தாமரை செல்வி சிரிக்க, விளையாட்டாக ”இன்னும் 400 பிள்ளைகளை கொடுத்தால் கூட இந்த பொண்ணு வளர்க்கும்” அவ்வளவு அப்பாவி நமீதா, யார் என்ன சொன்னாலும் நம்புகிறார் என்ற அர்த்தத்தில் முதன் முறையாக டைனிங் ஏரியாவில் தாமரை அந்த கருத்தை பதிவு செய்கிறார். ஆனால் அதை நமீதா கவனிக்கவில்லை. இதோடு விட்டு இருந்தா முடிஞ்சி இருக்கும். நெக்ஸ்ட் பாத்ரூம் ஏரியாவில் போய் பிரியங்கா, இசைவாணி, தாமரை, நமீதா நான்கு பேரும் இதை பற்றி மறுபடியும் பேசி சிரித்தனர். அப்போது விளையாட்டாக நமீதா “பயங்கரமா சிரிக்கிற தாமரை நாளைக்கு உன்ன எப்படி அழவிடுறேன் பாரு. உனக்கு எனக்கும் தான் முதல் சண்டையே நாளைக்கு நாம ரெண்டு பேரும் தான் புரமோவில் வர போகிறோம்” என முதலில் விளையாட்டாக பேச தொடங்குகிறார். பிரியங்கா உடனே சீரியஸா சொல்லுறீயா என நமீதாவிடம் கேட்க, அதற்கு நமீதா கேமராவை பார்த்து கண்ணும் அடிக்கிறார். நமீதாவும் விளையாட்டாக தான் இதை தொடங்கினார்.

  அப்போது தான் தாமரை மறுபடியும் சிரித்து கொண்டே ”40 இல்லை இன்னும் 400 குழந்தைகளை கூட நீ வளர்ப்ப ராசாத்தி” ன்னு சொல்ல நமீதாவுக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால் அதுக்கூட தெரியாமல் தாமரை சிரித்துக் கொண்டே இருந்தார். மறுநாள் அழ போவது தாமரைக்கு அப்போது புரியவில்லை. இதற்கு நடுவில் கொளுத்தி வேலை பார்த்தது பிரியங்கா தான். தாமரை சிரிக்க சிரிகக், “நீ நமீதாவை வெறுப்பு ஏத்தாத.. எதுக்கு இப்படி சிரிக்கிற.. கேம் அதோட முடிஞ்சி போச்சி” ன்னு மசாலா தூவ தூவ நமீதாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது. பெட்ரூமில் கத்த தொடங்கி விட்டார். தாமரையின் முகமும் மாறிவிட்டது. உடனே பாய்ஸ் டீமில் இருந்து நிரூப், அபிநவ் கேர்ள்ஸ் பெட்ரூமூக்கு வர, சின்ன வாய்கால் தகராறு பெரிய பிரச்சனை ஆனது. நமீதாவும் “அசிங்க அசிங்கமா கேட்பேன். வயசு வித்யாசம் பார்க்க மாட்டேன் . என்னை பத்தி பேசு என் குழந்தைகள் பத்தி பேசாத”ன்னு தாமரை முகத்தை பார்த்து சொன்னதும் அவரின் கண்ணில் கண்ணீர் கொட்ட தொடங்கி விட்டது. இடம், பொருள், ஏவல் ரொம்ப முக்கியம் என்பது இப்போது அவருக்கு புரிந்து இருக்கும்.

  அடுத்த சில நிமிடங்களிலே நமீதாவிடம் தாமரை மனதார மன்னிப்பும் கேட்டார். ஆனால் நமீதா இப்போது பேச மாட்டேன், எனக்கு தோணும் போது பேசுகிறேன் என்று மூஞ்சில் அடித்த மாதிரி சொல்லிவிடுகிறார். (மன்னிப்பு கேட்குறவன் மனிஷன் என்றால் மன்னிக்கிறவன் பெரிய மனிஷன் என்பதை நமீதா அந்த இடத்தில் மறந்துவிட்டார் போல) கிச்சன் எரியாவில் நிரூப் மற்றும் பிரியங்காவிடம் நமீதா தாமரை பற்றி கம்ப்ளைண்ட் செய்தார். “மயக்குறவ” என்ற வார்த்தையை தாமரை சொல்லியதாக நமீதா குறிப்பிடுகிறார். ஆறாம் நாள் காலை வடிவேல் பாடலுன் பொழுது விடிகிறது. நிரூப் அம்மி கல்லை தூக்கி உடற்பயிற்சி செய்கிறார். சின்ன கொசு கடியை வைத்து பிரியங்கா அலப்பறை கொடுக்கிறார். தாமரை செல்வி நைட் நடந்த பிரச்சனை பற்றி அண்ணாச்சியிடம் முறையிடுகிறார். இமான் அண்ணாச்சி இருவரையும் சமாதானம் செய்ய நமீதாவை அழைக்கிறார். ஆனால் நமீதா வேண்டாம் பெரியப்பா என்கிறார். இந்த பக்கம் சினிமா பையன் அபி, வீட்டில் யாரெல்லாம் அவருக்கு அக்கா, தங்கச்சி என லிஸ்டு போட்டார். பிரியங்கா தான் அபிக்கு அத்தை பொண்ணாம். இதை கேட்டதும் பிரியங்கா கொடுத்த ரியாக்‌ஷன் தான் ஹைலைட். ஒரு கதை சொல்லட்டுமா டாக்ஸ் தொடங்குகிறது. ஐக்கி 8 வருடங்களாக அம்மா, அப்பாவை பிரிந்து இருக்கும் கதையை தமிழில் பேசி லைக்ஸ் வாங்குகிறார். தமிழில் அவர் பாடி ரேப் கைத்தட்ட வைக்கிறது. வீட்டுக்கு திரும்பும் ஹவுஸ்மேட்ஸ் அன்றைய நாளுக்கான பணிகளை செய்கின்றனர்.

  எங்களுக்கு கல்வி கொடுங்க ப்ளீஸ்.. திருநங்கைகளுக்காக கண்ணீருடன் பிக் பாஸில் ஒலித்த குரல்!

  இமான் அண்ணாச்சி பாவனி மற்றும் மதுமிதாவுடன் கடலை போட, ஒருபக்கம் பிஸியாக குக்கிங் பணிகள் நடக்கிறது. திரும்பவும் கதை சொல்லட்டுமா டாஸ்க் தொடங்க, பாவனி தனது வாழ்க்கை கதையை சொல்கிறார். வீட்டை எதிர்த்து காதல் திருமணம், கணவரின் தற்கொலை, மீடியாவில் தகாத உறவு என எழுதியது, சின்ன தம்பி சீரியல் கைக்கொடுத்தது, கணவரின் குடும்பம் ஆறுதலாக இருப்பது, கைக்கொடுக்காத மறுமணம், மீண்டும் பிக் பாஸ் வாய்ப்பு என கண்ணீருடன் நெகிழ வைத்தார் பாவனி. “கடைசி வரை தனி மரம் தான்.. எனக்கு கல்யாணம் ராசியில்லை” என அவர் பதிவு செய்த விதம் அவரின் தனிமையை காட்டுகிறது.

  பின்பு பாவனியை ஹைவுஸ் மேட்ஸ் அனைவரும் தேற்றி ஆறுதல் கூறினர். லிவ்விங் ஏரியாவில் அமர்ந்து கொண்டு தாமரை செல்வி, ஸ்ருதி மற்றும் மதுமிதாவிடம் நமீதா சண்டை போட்டு பேசாமல் இருப்பதை சொல்லி வருத்தப்படுகிறார். சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல் சார் சொன்னால் நமீதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதாகவும் கூறுகிறார். தூக்கம் வராததால் பிரியங்கா மற்றும் அண்ணாச்சி மைக்கை வைத்து விளையாடி கொண்டிருந்தனர். தாமரை செல்வி கார்டனில் இருக்கும் சோஃபாவில் படுத்துக் கொண்டிருந்தார். மனசு கேட்காத நமீதா அவராகவே சென்று தாமரையை எழுப்பி பேசினார். நடந்ததை மறந்து விட்டதாக கூறி காபி குடிக்க கூப்பிடுகிறார். முந்தைய நாள் இரவு தொடங்கிய சண்டை அடுத்த நாள் விடியற்காலை முடிகிறது. ஆனால் இனிமே தாமரை செல்வி சற்று கவனமாக பேசுவார் என்பது தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: