• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • bigg boss tamil : அபிஷேக்கின் ரீஎன்ட்ரி.. பாவனிக்கும் பிரியங்காவுக்கும் செம்ம ஹாப்பி! எங்கள பத்தி யோசிச்சீங்களா பாஸூ?

bigg boss tamil : அபிஷேக்கின் ரீஎன்ட்ரி.. பாவனிக்கும் பிரியங்காவுக்கும் செம்ம ஹாப்பி! எங்கள பத்தி யோசிச்சீங்களா பாஸூ?

பிக் பாஸ் அபிஷேக்

பிக் பாஸ் அபிஷேக்

bigg boss tamil 5 day 47 review abhishek raja : பாவனிக்கு தம்பி கிடைத்துவிட்டார், பிர்யங்காவுக்கு நண்பன் கிடைத்து விட்டார், பிக் பாஸூக்கு கண்டெண்ட் கிடைத்து விட்டது.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5ல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து இருக்கிறார் சினிமா பையன் அபிஷேக் ராஜா. மறுபடியும் முதல்ல இருந்தா என்பது போலவே இருக்கிறது பிக் பாஸின் இந்த ட்விஸ்ட்.

  46 ஆவது நாள் ராத்திரி நடந்த ராஜூ vs பிரியங்கா கச்சேரி பெரிய வாய் தகராறில் முடிந்தது. அதனை நாம் பார்க்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் டெலிகாஸ்ட் செய்தார். இதுவரை ராஜூ பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ஒரு முகத்தை பிரியங்கா வெளிச்சம் போட்டு காட்டினார். வீட்டில் ராஜூ எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக பொழுதை கழிப்பார் போல். அவர் சாப்பிட்ட தட்டை கூட பல நேரங்களில் தாமரை தான் கழுவி இருக்கிறாராம். இதுக் கூட சண்டையில் பிரியங்கா சொல்லி தான் நமக்கும் தெரிந்தது. ஒரு கேப்டனாக பிரியங்கா ராஜூவை திட்டம் செய்ய, தன்னுடைய பெயர் டேமேஜ் ஆவதை உணர்ந்த ராஜூ பிரியங்காவை பீப் போடும் வார்த்தையில் திட்டி விடுகிறார். இதுதான் சண்டையா? இல்லை இதைவிட ராஜூ பயங்கரமாக கத்தி சண்டை போட்டாரான்னு தெரியல.

  பிரியங்கா அழுது கொட்டி விட்டார். வீட்டில் இதுவரை யாரையும் நீ அப்படி பேசியதில்லை, முதன் முறையாக என்னை இந்த வார்த்தை சொல்லி எல்லோர் முன்னாடியும் திட்டிவிட்டாய் என அழுகிறார். மனசு கேட்காமல் ராஜூவும் வந்து சாரி சொல்லி பிரியங்காவை சமாதானம் செய்கிரார். ”ஏங்க நான் உங்கள அப்படி திட்டலங்க.. கோபத்தில் பேசிட்டேன் ஏங்க அழாதீங்கன்னு ”ராஜூ கெஞ்சிய விதம் க்யூட்டு. பிரியங்காவும் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி ஒன்னு சேர்ந்தார்.

  47 ஆவது நாள் ‘சுடக்கு மேல சுடக்கு போடுது’ பாடலுடன் நாள் தொடங்கியது. விரட்டி விரட்டி வெளுக்க தோணுதுன்னு பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை பார்த்து பாடுவது போலவே இருந்தது. மார்னிங்கே கிச்சன் ஏரியாவில் பிரியங்காவை ஹாப்பி ஆக்க, ராஜூ சமையல் பாத்திரங்களை கழுவினார். கண்ணாடி டாஸ்கின் மூன்றாவது கட்டம் தொடங்கியது. இதில் அண்ணாச்சியும் ஐக்கி பெர்ரியும் மோதினர். பிங் பாங் பாலை வைத்து போட்டி கார்டன் ஏரியவில் தொடங்கியது. இதில் அண்ணாச்ச்சி வெற்றி பெற்றார். அடுத்தது, என் கேள்விக்கு என்ன பதில்? என்ற டாஸ்கில் இசையும் தாமரையும் போட்டி போட்டனர். அது தான் புரமோவில் காட்டப்பட்ட முட்டை உடைக்கும் டாஸ்க். பிக் பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்லாதவர்கள், தப்பாக பதில் சொல்பவர்கள் எதிர் தரப்பில் இருப்பவர்கள் மீது முட்டையை உடைக்க வேண்டும்.

  இதில் இசையே வெற்றி பெற்றார். தாமரை 1 கேள்விக்கு மட்டும் தான் சரியாக பதில் சொன்னார். வேண்டுமென்றே தப்பாக பதில் சொல்லி முட்டையை இசை மீது உடைத்தாரான்னு கூட தெரியவில்லை. இதற்கு நடுவில் இசைக்கும் தாமரைக்கும் முட்டை உடைப்பதில் சண்டை வேற, இசை குறைந்தது எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல முயற்சி செய்தார். ஆனால் தாமரை தெரியல சாமியை விடவே இல்லை. இசைக்கு 1 பேட்ச் வழங்கப்பட்டது. அடுத்தது, அபிநவ்வும் சிபியும் மோதினர். இதில் சிபி வெற்றி பெற்றார். ஆண்கள் முட்டையை கூட சந்தோஷமாக தலையில் உடைத்துக் கொண்டனர். இறுதியில் லக்‌ஷரி டாஸ்க் முடிவில் பீ டீம் வெற்றி பெற்றது. அதாவது வருண் டீம் 15 பேட்ஜ்களை வைத்து முன்னிலை வகித்தனர். இத்துடன் லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்கான கண்ணாடி டாஸ்க் முடிந்தது.

  வந்த கொஞ்ச நாளிலே இப்படியா? விஜய் டிவி பிரனிகா டாக்டர் ஆக வேண்டிய பொண்ணாம்!

  பின்பு கார்டன் ஏரியாவில் இந்த முறை லக்‌ஷரி பட்ஜெட் பொருட்களை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வித்யாசமாக நடைப்பெற்றது. தாய கட்டைகளை உருட்ட, அதில் வரும் நம்பர் படி பெரிய பெரிய அட்டை பெடிகளை திறக்க வேண்டும். தாமரையும் அக்‌ஷராவும் தாயத்தை உருட்ட, அண்ணாச்சி பெட்டிகளை ஓபன் செய்தார். அப்போது தான் அபிஷேக் ராஜாவின் ரீ என்ட்ரி. அபியை பார்த்ததும் பாவனி வேகமாக ஓடி கட்டி பிடித்தார். பிரியங்கா ஷாக்கில் அப்படியே நின்றார். ஹவுஸ்மேட்ஸ்எல்லோரும் அபியை கட்டிப்பிடித்தனர். தாமரை மற்றும் நீரூப்பை கடமைக்கு அபி விசாரித்தது போல் இருந்தது. உண்மையில் அபியின் ரீ என்ட்ரி பாவனி மற்றும் பிரியங்காவுக்கு செம்ம ஹாப்பி. வந்த முதல் நாளே செண்டிமெண்ட் உருட்டை ஆரம்பித்தார் அபிஷேக். அதுசரி பாவனிக்கு தம்பி கிடைத்துவிட்டார், பிரியங்காவுக்கு நண்பன் கிடைத்து விட்டார், பிக் பாஸூக்கு கண்டெண்ட் கிடைத்து விட்டது. ஆனா ஓட்டு போட்டு வெளியே அனுப்பிய ரசிகர்கள் பற்றி யோசிச்சீங்களா பாஸூ?  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: