• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • bigg boss isaivani : லந்து கொடுக்கும் தாமரை.. சாமி சத்தியமா சொன்ன கதையெல்லாம் பொய்யா?

bigg boss isaivani : லந்து கொடுக்கும் தாமரை.. சாமி சத்தியமா சொன்ன கதையெல்லாம் பொய்யா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss tamil 5 day 46 review : தாமரையும் இசையும் தலையை பிச்சிக்கிட்டு சண்டை போடுற வரைக்கும் பிக் பாஸ் இரண்டு பேரையும் வெளியெ துரத்த மாட்டாரு போல.

 • Share this:
  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசனில் தாமரையின் லந்தால் மொத்த ஹவுஸ்மேட்ஸூம் ஆடி போயுள்ளனர். போற போக்க பார்த்தா தாமரை பிக் பாஸ் ஃபைனலிஸ்ட் லிஸ்டில் இருப்பாரு போல.

  திருநெல்வேலிக்கே அல்வாவா? தாமரைகிட்டேயே லந்தா? என்பதை போல் தான் இருந்தது நேற்றைய எபிசோடு. தாமரையை தொட்டா எவிக்‌ஷன் தான் என்பது போல் ஆகிவிட்டது நிலை. தாமரையுடன் சண்டை போட்ட நமீதா, ஸ்ருதி, சின்ன பொண்ணு அடுத்தடுத்து வெளியேறியது போல இந்த வாரம் இசைவாணி பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிவிடுவார் போல. அந்த அளவுக்கு அவர் நிதானத்தை இழந்து விட்டார். சமாளிக்க முடியாமல் இசை திணற, அதனால் அவரின் கோபம் வெடிக்க, வெளியில் பெயர் டேமேஜ் ஆகுகிறது. 46 ஆவது நாள் மேயாத மான் திரைப்படத்தில் இருந்து ஒலிக்கப்பட்ட ‘எங்க வீட்டு குத்து விளக்கு’சாங்குடன் தொடங்கியது. மார்னிங்கே முட்டிக் கொண்டனர் வருணும் நிரூப்பும். ஆனால் அந்த அளவுக்கு அது ஒர்த்தான சண்டை கூட இல்லை. (புரமோவை காட்டியே ஏமாத்துறாங்கப்பா)

  தண்ணீர் குடிப்பது தான் டாஸ்க். இதைப்பற்றி வருண் ஏற்கெனவே சொல்லி இருக்கிறார் போல. மார்னிங் நோ டீ, காபி என்றும் ஆர்டர் போடப்பட்டிருக்கிறது. ஆனால் நிரூப் அதை என்னன்னு கூட சட்டப்பண்ணாமல் தண்ணீரை குடித்து விட்டு வாட்டர் பாட்டில் இல்லாமல் கார்டன் ஏரியாவுக்கு போனார். வாட்டர் பாட்டிலுடன் வருமாறு வருண் சொல்ல, நான் தண்ணீ குடிச்சிட்டேன் என்னால் இந்த டாஸ்க் பண்ண முடியாதுன்னு நிரூப் சொல்ல இருவருக்கும் இடையில் வாக்குவாதம். குடிக்க கூட தேவையில்லை சும்மா, வாட்டர் பாட்டிலுடன் போய் உட்கார்ந்து இருந்தால் கூட போதும் நீருப் அதை செய்யாததால் வருண் ஆற்றல் சக்தி பற்றி பேசி கத்த ,நீருப் டாஸ்கில் இருந்து வெளியேறினார்.

  பிரியங்கா எவ்வளவு சொல்லியும் நிரூப் கண்டுகொள்ளவில்லை. கிச்சன் ஏரியாவில் நீ செய்தது தப்பு என்று அட்வைஸ் செய்தார் பிரியங்கா. நீருப்பிடம் பதிலே இல்லை. பஸர் அடித்தது, கண்ணாடி டாஸ்க் மீண்டும் தொடர்ந்தது. பாவனி செய்வதை எல்லாம் அக்‌ஷரா செய்தார். அதே போல் பிரியங்கா செய்வதை எல்லாம் ராஜூ பிரதிபலித்துக் கொண்டிருந்தார். பிரியங்கா ராஜூவை டெஸ்ட் செய்ய, பாவனியை கட்டிப்பிடித்து பேசுமாறு சொன்னார். ஆனால் ராஜூ பாவனியை தொடாமலே பிரியங்கா செய்ததை பிரதிபலித்தார். உடனே பிரியங்கா, அக்‌ஷராவை கட்டிப்பிடித்து பேச சொன்னார். ஆனால் ராஜூ செய்தார். இதை ரகசியமாக பிரியங்கா, “ராஜூ யூ ஆர் டூ பேட்” என்று பதிவு செய்தார்.

  இசை செய்வது போலவே தாமரையும் சிபியின் பிரதிபலிப்பான அபிநவ் மீது தண்ணீர் ஊற்றுவது, உப்பை வாயில் திணிப்பது என டாஸ்கை தொடர்ந்தார். இமான் அண்ணாச்சி இந்த வாரம் முழுவது ரொம்ப சைலண்டாக இருக்கிறார். ஐக்கி பெர்ரியை போல் பெரியதாக ஆர்வம் எடுத்து அவர் எதும் செய்யவில்லை. பஸர் அடித்ததும் அண்ணாச்சியும் ஐக்கியும் கைகோர்த்து நின்றனர். ஐக்கி பற்றி தான் கணித்ததை அண்ணாசி சொன்னார், எமோஷனில் ஐக்கி அழுதார்..கையை அடிக்கடி விட்டு கண்களை துடைத்தார். இதனால் அவரிடம் இருந்து ஒரு பேட்ஜை பிக் பாஸ் பறித்தார்.

  அடுத்தது, அக்‌ஷராவும் பாவனியும் கைக்கோர்த்து நின்றனர். பாவனி பற்றி சிரித்து கொண்டே அக்‌ஷரா வைத்த பாயிண்டுகள் ரசிக்கும் வகையில் இருந்தது. ராஜூவுக்கு அடுத்து சிரித்துக் கொண்டே இந்த டாஸ்கை செய்தது பரம எதிரிகளான அக்‌ஷராவும், பாவனியும் தான். அடுத்த கொஞ்ச நேரம் கேப் விடப்பட்டது. ராஜூவை வச்சி செய்ய முடிவு எடுத்த பிரியங்கா பயங்கர அட்ராசிட்டி செய்தார். ராஜூ பிரியங்கா போலவே பிரதிபலித்து டாஸ்கை சுவாரசியம் ஆக்கினார். அடுத்தது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிரூப்பும் வருணும் கைக்கோர்த்து நின்றனர். வருண், 3 பக்கம் அளவில் மிரட்டல் செய்தியை நிரூப்புக்காக வாசித்துக் கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் வில்லனை பார்த்து ஹீரோ பேடும் அனைத்து பஞ்ச் டயலாக்குகளும் அதில் இருந்தது.”நீ பெரிய இவனா? அவனா? என்ன தொட்டா நீ செத்த, உன்னை நான் செஞ்சிடுவேன். அப்பாடக்கரா நீ? முடிஞ்சா மோதி பாரு, சிறுத்தையை சீண்டாத.” இப்படி ஏகப்பட்ட மசாலா பட வசனங்கள். இந்த டாஸ்க் முடிந்த உடனே, வருண் அய்யையோ அதிகமா பேசிட்டோமோ, கேமிராவில் எப்படி தெரியுமோ? என பயந்து கொண்டே ராஜூவிடம் கருத்து கேட்டது பச்சையாக தெரிந்தது. நிரூப்பும் பிரியங்காவிடம் வருண் பேசியதை ரீவைண்ட் செய்தார்.

  அடுத்தது சண்டைக்கோழிகள் தாமரையும், இசையும் மேடை ஏறினர். இசையை பற்றி 4 வரி மட்டுமே தாமரை பேசினார். அப்புறம் பேச எதுவே இல்லை என்று சினிமா பாடல்களை பாடினார். எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை பாடும் போது அமைதி காத்த இசை, சிரிச்சி சிரிச்சி மயக்கினாய் என்ற பாடலை பாடும் போது நெருப்பை விழிங்கியது போல் முறைத்தார். உடனே தாமரை அதற்கு விளக்கம் கொடுத்தார். கடைசி வரை தாமரையின் முகத்தை கூட இசைவாணி பார்க்கவில்லை. தாமரை 5 நிமிடம் பாடல் பாடி பொழுதை கழித்தார். பஸர் அடிக்கப்பட்டது டாஸ்க் முடிந்தது இருவரும் சோஃபாவில் வந்து அமர்ந்தனர். இந்த நேரத்தில் தான் அண்ணாச்சி சாதுர்யமாக கொளுத்தி போட்டார். இசைவாணி எதுக்கு அழுற என கேட்க, இசைவாணி நக்கலா பாடியது அவங்க நான் ஏன் அழு போறேன்னு சொல்ல லிவிங் ஏரியா சந்தை கடையானது.

  தாமரை எனக்கு தோணுச்சி பாடுன, அப்படின்னு விடாப்பிடியாக பேச, இசை ,நீ என்னை பார்த்து நக்கலா தான் பாடினாய் என்றார். இசைக்கு தாமரை தன்னை நக்கலாக பாடி கலாய்ப்பதாக தோன்றி விட்டது. இசைக்கு ஆதரவாக ராஜூ ஒரு வார்த்தை தாமரையை கேட்க, உடனே பொங்கிய தாமரை ராஜூவுக்கும் நோஸ் கட் கொடுத்தார். பேய்க்கும் பேய்க்கும் சண்டை அத  பிக் பாஸ் வீடே வேடிக்கை பாக்குது. இப்படி ராஜூவும் சும்மா இருந்து இருக்கலாம். வாயைவிட்டு தாமரையிடம் சிக்கி கொண்டார். நடுவில் பேசிய பிரியங்காவையும் தாமரை மூஞ்சை காட்டினார். இந்த வீட்டில் கேம்மை புரிஞ்சி ஆடுறது தாமரை தான்.. உனக்கா தாமரை எதும் தெரியாது? என்றப்படியே இருந்தது பிரியங்காவின் மூஞ்சி.

  அண்ணாச்சி, வழக்கம் போல் இசை மீது தான் தப்பு என்று தன்னுடைய குழுவை நம்ப வைத்தார். இசை அபிநவ்விடம் இதுக்கு மேலே நான் இறங்குவேன் ஷோ-ன்னு பாக்குறேன்னு தனியாக பேசி கொண்டிருந்தார். ஆக மொத்தத்தில் தாமரையும் இசையும் தலையை பிசிக்கிட்டு சண்டை போடுற வரைக்கும் பிக் பாஸ் இரண்டு பேரையும் வெளியெ துரத்த மாட்டாரு போல. கண்ணாடி டாஸ்கின் மூன்றாவது கட்டம். 4 பேட்ஜ்களை பெற மீண்டும் 2 டீம்களுக்கு ஒரு சந்தர்ப்பம். முதல் ரவுண்டில் வைக்கப்பட்ட போட்டியில் அக்‌ஷரா vs பாவனி. இதில் பாவனி ஜெயித்தார். அதே போல் நிரூப் vs வருண் டாஸ்கில் வருண் ஜெயித்தார் (சாரி சாரி அக்‌ஷரா மற்றும் அண்ணாச்சியால் வருண் ஜெயிக்க வைக்கப்பட்டார்)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: