• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • BIGG BOSS : ஒரே நாளில் ஹீரோவான அபினவ்.. வில்லனான நிரூப்!

BIGG BOSS : ஒரே நாளில் ஹீரோவான அபினவ்.. வில்லனான நிரூப்!

பிக் பாஸ் நிரூப், அபிநவ்

பிக் பாஸ் நிரூப், அபிநவ்

அபினவ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை மனசு நோகும் படி அடுக்கினார் நீரூப். மனசு தாங்காமல் கண்ணீர் வீட்டு அழுதார் அபினவ்.

 • Share this:
  பிக் பாஸ் 5 சீசனில் எதுவும் நடக்கக்கூடும். இதுவும் நடக்கக்கூடும் என்பது போல தான் ஒவ்வொரு நாளின் எபிசோடும் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய 43 ஆவது நாள் எபிசோடில் அபினவ் ஹீரோவானார். வெற்றியாளர் லிஸ்டில் இருந்த நிரூப் வில்லாதி வில்லனானார்.

  இந்த வார ஹவுஸின் தலைவர் பிரியங்கா செம்ம சுறு சுறுப்பாக தூங்கி கொண்டிருந்த ஹவுஸ்மேட்ஸை எழுப்பிக் கொண்டிருந்தார். அவரின் எனர்ஜிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ’கலாசலா கலசல’ பாடலை பிளே செய்தார் பிக் பாஸ். தாமரையும் அண்ணாச்சியும் ஒரு குத்து குத்தினார்கள். ஐக்கி பெர்ரி கேமராவுடன் டூயட் ஆடினார். டான்ஸ் கிளாஸ் முடிச்சதும் கிச்சன் ஏரியாவில் தவம் கிடந்தவர்களை விரட்டி குளிக்க அனுப்பினார் வருண். லேட்டாக போனவர்களுக்கு வெளியில் இருக்கும் குழாயில் குளிக்கும் டாஸ்க்.ராஜூ குளிக்க, யாரோ யாரோடி பாடலை பாடி ரேகிங் செய்தார் பிரியங்கா. (ஆத்தாடி பாவாடை காத்தாட பாடி இருந்தா இன்னும் அமர்களமாக இருந்து இருக்கும்) வருணின் டாஸ்குகள் முடிந்தது நிஜமான டாஸ்க் தொடங்கியது.

  இந்த வார லக்‌ஷரி பட்ஜெட்டுக்கான டாஸ்க். ஒருவரை போல் மற்றொருவர் பிரதிபலிக்கும் கண்ணாடி டாஸ்க். கொளுத்தி போட பிளான் செய்த பிக் பாஸ், அவரே 2 டீம்களை பிரித்து யார் யாரைப்போல் பிரதிபலிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்து இருந்தார். அக்‌ஷரா போல் சிபி, அண்ணாச்சி போல் இசைவாணி, வருண் போல் ஐக்கி பெர்ரி, ராஜூ போல் பாவனி. தாமரை போல் பிரியங்கா. பலத்த கைத்தட்டலுடன் டாஸ்க் தொடங்கியது. சிபி என்றதுமே அக்‌ஷரா முகம் மாறியது. சிபிக்கும் கடுப்பு தான் ஆனால் வெளியில் காட்ட முடியவில்லை. என்னை பிரதிபலிக்க சிபி தகுதியில்லாதவர் என்றார் அக்‌ஷரா. (அப்ப பெரிய கை யாராச்சும் அனுப்பி வைங்க பாஸூ)

  ஒருவழியாக டாஸ்க் தொடங்கியது. ராஜூவின் அட்டகாசம் தொடங்கியது. அவரை போலவே பாவனி தாவி குதித்து, ஆடி, பாடி, ஓடி, கலக்கினர். பார்க்கவும் நல்ல எண்டர்டெயிண்மெண்ட் இந்த ஜோடி தான். அடுத்தது இசைவாணி, அண்ணாச்சி செய்த அனைத்தையும் அப்படியே பிரதிபலித்தார். அவரை போலவே தொப்பை எல்லாம் கூட தலையணை வைத்து செட் செய்தார். ஆனால் அண்ணாச்சி தான் கடைசி வரை எதுவும் செய்யவில்லை. அதனால் இசைக்கு பெரியதாக எந்த ரோலும் இல்லை. அக்‌ஷரா கதை பற்றி கேட்டகவே வேண்டாம். சுத்தம். அதிலும் சிபி என்பதால் அவர் வேண்டா வெறுப்பா அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார் அவ்வளவு தான். அக்‌ஷரா பக்கத்தில் நிற்க கூட சிபி கூச்சப்பட்டார். அடுத்தது பிரியங்கா - தாமரை காம்போ வெற லெவல். தாமரை செய்த அனைத்தையும் பிரியங்கா அசால்ட்டாக செய்து ஸ்கோர் செய்தார். தாமரையின் பேச்சு, நடை, உடை, பாவனை என பின்னி பெடலெடுத்தார்.

  இந்த டாஸ்கில் அதிகம் முட்டிக் கொண்டது நிரூப் - அபினவ் ஜோடி தான். அபினவ் டாஸ்க்கை நல்ல முறையில் எடுத்து செல்ல பல பல வித்தைகளை கையாண்டார். அதில் ஒன்று தான் இந்த முடி வெட்ட வைத்தது. முடி வெட்ட கூட இல்லை ட்ரிம் செய்ய வைத்தார் அபினவ். அதற்கு நிரூப் கொடுத்த ஓவர் ஃபார்மன்ஸ் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். நீரூப் அந்த நீண்ட முடியை கேன்சர் நோயாளிகளுக்கு டோனேட் செய்ய வளர்க்கிறாராம். அது வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியுமாம். அது தெரிந்து கூட என் முடியை வெட்ட வைத்த கேவலமானவன் நீ என்று, அபினவ்வை பார்த்து நீருப் வார்த்தைகளை கொட்ட சண்டை வெடித்தது. நிரூப், அபினவ்வை பார்த்து ஃபேக், கருத்து இல்லாதவன்,  ஜால்ரா, பிரியங்கா கூட சேர்ந்து ஃபிரேம் தேட நினைக்குற என ஏகப்பட்ட வார்த்தைகளை வீச, உனக்கு விருப்பமில்லை என்றால் செய்து இருக்க வேண்டாம் அது கட்டாயம் இல்லை என்று பாயிண்ட்டாக பேசினர் பிரியங்காவும் அக்‌ஷராவும். ஆனால் நீருப் அதை பற்றி எல்லாம் காதில் கூட வாங்கவில்லை. தொடர்ந்து அபினவ் மனசை கஷ்டப்படுத்தும் வகையிலே பேசினார்.

  டாஸ்கின் இறுதியில் லிங்கிங் எரியாவில் ஜோடிகளாக பிரிக்கப்பட்ட இருவரும் கைக்கோர்த்து சேர்ந்து நின்று ஒருவர் பற்றிய கருத்துக்களை சொல்ல வேண்டும் என்றும் டாஸ்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் முதலில் நின்ற அபினவ்வும், நிரூப்பும் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு எடுத்துக் கொண்டர். அபினவ் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை மனசு நோகும் படி அடுக்கினார் நீரூப். மனசு தாங்காமல் கண்ணீர் வீட்டு அழுதார் அபினவ். கடைசியில் சகுனியை குறிக்கும் வகையில் தாயக்கட்டயை நிரூப்பிடம் கொடுத்து என ஞாபகமாக வைத்துக் கொள் என்றார் அபினவ். இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய தலைவராக பிரியங்காவும் முயற்சி எடுத்தார். ஆனால் நிரூப்பின் கோபம் கேமராவுக்காக மட்டுமே இருந்தது.

  மேடை ஏறிய அண்ணாச்சியும் இசையும் கைக்கோர்த்து நின்றனர். பார்க்கவும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதுதான் வாய்ப்பு என்று இசை மனதில் பட்ட அனைத்தையும் கொட்டி தீர்த்து இருக்கலாம். ஆனால் சிலவற்றை பற்றி மட்டுமே பேசிவிட்டு பலவற்றை மறைத்தார். கடைசியில் அண்ணாச்சி மீது வெறுப்பு இல்லை, கோபம் இல்லை என்பதை அண்டர்லைன் செய்தார். அடுத்தது சிபியும் அக்‌ஷராவும். சிபி அக்‌ஷராவிடம் பேச தொடங்கியதில் இருந்து தற்போது வரை என்ன நடந்தது என்பதை முகத்தில் அடிப்பது பளீச் என்று சொன்னார். அக்‌ஷரா பற்றிய புரிதல் அவருக்கு நன்கு இருந்தது. ஆனால் அது எதுவும் உண்மை இல்ல என்பது போலவே அக்‌ஷராவின் ஃபேஸ் இருந்தது.

  அது எப்படி சாத்தியம்? கர்ப்பமாக இல்லாமல் கர்ப்பகால ஃபோட்டோ ஷூட் நடத்திய ஷகீலா மகள் மிளா!

  மீண்டும் பஸ்ஸர் அடிக்க கண்ணாடி டாஸ்க் தொடங்கியது. தாமரை பிரியங்காவிடம் தப்பித்து ஓடி மறைந்து விளையாடினார். வருண் தலையில் தண்ணீர் ஊற்றி கொள்வது, பெல்டி அடிப்பது என ஐக்கியை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். இன்னிக்கு இது போதும் மீதி நாளைக்கு பார்த்துக்கலாம் என்ற முடிவில் பிக் பாஸ் லைட்டை ஆஃப் செய்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: