• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • bigg boss : பலி காடான ராஜூ - அண்ணாச்சி.. நேர்மையானவர்கள் பட்டியலில் சிபியும் பிரியங்காவும்!

bigg boss : பலி காடான ராஜூ - அண்ணாச்சி.. நேர்மையானவர்கள் பட்டியலில் சிபியும் பிரியங்காவும்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

bigg boss tamil 5 Day 40 review annachi raju: தாமரையிடம் ராஜூ செருப்ப கழட்டி அடிச்சிட்டு சொல்லு என பேசியது புரமோவில் தான் அவ்வளவு பில்டப்பாக காட்டப்பட்டது

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5 நேற்றைய எபிசோடில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரின் இறுதி தீர்ப்பாக ராஜூ பாயும், இமான் அண்ணாச்சியும் கடுமையான தண்டனைக்கு ஆளாகினர்.

  பிக் பாஸ் 5ல் முந்தைய நாள் தொடர்ச்சியாக 40 ஆவது நாளும் இரவு முழுவதும் பிக் பாஸ் அவார்ட்ஸ் டாஸ்க் நடைப்பெற்றது. நிகழ்ச்சியின் ஆங்கரான ராஜூவும், பிரியங்காவும் தொடர்ந்து விருதுகளை அறிவித்து நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு சென்றனர். முதல் சுற்றில் புன்னகையுடன் சந்தோஷமாக விருதுகளை வாங்கி கொண்ட ஹவுஸ்மேட்ஸ், 2ஆவது சுற்றில் நெகட்டிவாக கொடுப்பட்ட விருதுகளை வேண்டா வெறுப்பாக வாங்கி கொண்டு அதற்கு விளக்கவும் அளித்தனர். வருணுக்கு சகுனி பட்டம், அக்‌ஷராவுக்கு விஷ பாட்டல், நிரூப்புக்கு டைம் வேர்ஸ்ட் என பிக் பாஸ் சண்டைக்கு சாவி கொடுப்பது போலவே ஒவ்வொரு சீட்டையும் எழுதி இருந்தார். அண்ணாச்சி இசைக்கு, தொட்டால் சிணுங்கி பட்டம் கொடுக்க, கடுப்பான இசை கொஞ்சம் முரட்டு தனமாகவே நடந்து கொண்டார்.

  வேறு யாராவது அதை கொடுத்து இருந்தால் கூட அவர் அதை ஜாலியாக ஏற்று கொண்டு இருப்பார் போல, அவரின் பரம எதிரி அண்ணாச்சி கொடுக்க, சுடக்கு போட்டு பேசி, நான் மூஞ்சிக்கு நேரா பேசுறவன்னு பஞ்ச் டயலாக் வேற பேசினார். விருதை கொண்டு போய் தூக்கி எரிந்தார். மதுமிதா, அக்‌ஷரா கொடுத்த அழுமூஞ்சி பட்டத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார். நிரூப் , தனக்கும் பாவனிக்கும் இடையான சண்டையை ஸ்டேஜிலும் தொடர்ந்தார்.பிரியங்காவுக்கு ஏதோ சொல்லும்படியாகவும் இருந்தது அவரின் விளக்கம்.

  ஒருவழியாக பிக் பாஸ் அவார்டு விழா முடிவு பெற, ஹவுஸ்மேட்ஸ் செம்ம டையார்ட்டாக உடைகளை மாற்றிக் கொண்டு லிவிங்க் ஏரியாவுக்கு வந்தனர். ஆகாய சக்தியை சொந்தமாக்கிய பாவனி, சில டாஸ்குகள், தண்டனைகளை தந்தார். ஹாலை கிளீன் செய்வது, கிச்சன் ஏரியாவை சுத்தம் செய்வது, ஹாலில் படுத்து தூங்க சொன்னது என நேரம் கெட்ட நேரத்தில் பாவனியின் கடமை உணர்ச்சி ராஜூவுக்கு கடுப்பை ஏற்ற, தாமரையை சாக்கு சொல்லி பாவனியிடம் கருத்து மோதலில் ஈடுப்பட்டார். ஆரம்பத்தில் தாமரை பாவனி சொன்னதை கேட்டு வீட்டை சுத்தம் செய்தார். ராஜூ கொளுத்தி போட்ட உடனே, மறுநாள் காலை சமைக்க மாட்டேன் என்றார்.

  இதனால் கடுப்பான பாவனி, மதுமிதா, அபிநவ்விடம் ராஜூ பற்றியும் அவரின் நடவடிக்கை பற்றியும் டிஸ்கஸ் செய்தார். பாவனி vs ராஜூ முடியாமால் தொடர் கதையாக செல்கிறது. அடுத்த சில மணி நேரத்திலே டாஸ்க் தொடங்கியது. கடந்த 2 நாட்கள் நடைப்பெற்ற டாஸ்கை மையமாக கொண்டு யார் இந்த பிக் பாஸ் வீட்டில் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், மனதில் பட்டதை மூஞ்சிக்கு நேரா சொல்பவர்கள் என 3 பேரை ஹவுஸ் மேட்ஸ் கூற வேண்டும் என்றார் பிக் பாஸ். ஹவுஸ்மேட்ஸ் 14 பேரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தனர். இதில் ராஜூ கவனிக்க வைத்தார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் யாருமே நேர்மையானவர்கள் இல்லை என நெத்தி அடி அடித்தார். ஒரு பேச்சுக்கு சொல்ல வேண்டும் என்றால் மதுமிதா, அக்‌ஷரா, பிரியங்கா என 3 பெண்களை தேர்வு செய்தார். இதில் அதிக ஓட்டு வாங்கி சிபி மற்றும் பிரியங்கா அடுத்த வார தலைவர் போட்டிக்கு தேர்வானர்கள்.

  கைவிடாத விஜய் டிவி.. போராளி பிரஜினுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

  அடுத்து தான் முக்கியமான கட்டம், பிக் பாஸ் வீட்டில் தனியாக விளையாடாமல், இன்னும் நிஜ முகத்தை காட்டாமல் மற்றவர்களை சார்ந்து விளையாடுபவர்கள் யார்? என 2 பேரின் பெயரை ஹவுஸ்மேட்ஸ் கூற வேண்டும் என்றார் பிக் பாஸ். சொல்லி வச்சது போல் ராஜுவும் அண்ணாச்சியும் அதிக ஓட்டுக்களை வாங்கினர். தாமரை தனது கருத்தை கூறும் போது அண்ணாச்சி பேசிய விதம் நம்மளையும் கடுப்பாக்கியது. ஒருவரின் கருத்துக்கு பதில் கருத்து சொல்வது ஒருவிதம், ஒரு கருத்தை மட்டமாக்கி அசிங்கப்படுத்துவது ஒரு விதம். இதில் அண்னாச்சி இரண்டாவது ரகம். கடைசியில் அண்ணாச்சியும் ராஜுவுக்கும் கொடுமையான தண்டனை,  ஐஸ்கட்டி போல் இருக்கும் பச்சை தண்ணீரை அவர்கள் தலையில் ஊற்ற வேண்டும். ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸூம் வரிசையாக இதை செய்ய வேண்டும். வெளியே கார்டன் ஏரியாவில் மழை கொட்ட முதல் ஆளாக ராஜூ இந்த டாஸ்க்கை முடித்தார். தாமரையிடம் அவர் செருப்ப கழட்டி அடிச்சிட்டு சொல்லு என அவர் பேசியது புரமோவில் தான் அவ்வளவு பில்டப்பாக காட்டப்பட்டது. (பிக் பாஸ் புரமோ எடிட்டர் வேற லெவல் ) ஆனால் உண்மையில் எபிசோடில் அந்த சீன் உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: