• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பெருசு.. நைட்டி திருடன்.. கொளுத்தி! பிரியங்காகிட்ட இருந்து பிக் பாஸ் நிறைய கத்துக்கணும்!

பெருசு.. நைட்டி திருடன்.. கொளுத்தி! பிரியங்காகிட்ட இருந்து பிக் பாஸ் நிறைய கத்துக்கணும்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 - Day 4 Review : பிரியங்காவின் வாக்குமூலங்கள் கேமிராவில் பதிவாகி கொண்டிருந்தன.

 • Share this:
  பிக் பாஸ் சீசனின் வரலாற்றையே மாற்றி எழுதுகிறார் பிரியங்கா.அவரின் கலாய் எதுவரை போகிறது என்றால் பிக் பாஸை ’நைட்டி திருடன்’ என்று சொல்லிவிட்டார். கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி மொத்த வீட்டையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். (நம்மளையும் தான்)

  நான்காம் நாள் காலை 8 மணிக்கு வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கிறது. மாஸ்டர் புகழ் சிபி பயங்கரமா ஆடுவார் என பார்த்தால் வழக்கம் போல் லைட்டா பாடி ஷேக் தான். பாத்ரூமில் சின்ன பொண்ணு நைட்டியில் நிற்க, பிரியங்கா பிக் பாஸை ஓட்ட தொடங்குகிறார். “பெரிய மனிஷனா நீ? பெருசு உன் கேர்ள் ஃபிரண்டுக்கு நைட்டி வேணும் அப்படின்னா யாரு வீட்டு மாடில வேணாம் போய் திருடு, இல்லை நைட்டி கம்பெனிய ஸ்பான்சர் செய்ய சொல்ல, அத விட்டுட்டு சின்ன பொண்ணு அக்கா நைட்டிய திருடறா” அப்படின்னு பிரியங்கா அடித்த லூட்டி பயங்கர நாட்டி. கூடவே வருணும் பிக் பாஸை திட்ட சின்ன பொண்ணு அக்கா பதறிட்டு “நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை முதலாளி”ன்னு சரண்டர் ஆகிட்டாங்க.

  வழக்கம் போல் அபிஷேக் டைனிங் ஹாலில் பிரியங்காவை வம்புக்கு இழுக்க பதிலுக்கு பிரியங்கா, “ பிக் பாஸ் சீசன் 5 உடைய கொளுத்தி” அப்படின்னு அபிக்கு பேரு வைக்கிறாங்க. அதோடு பிக் பாஸ் செலபிரேஷனில் உனக்கு இந்த அவார்டும் கொடுப்பாங்க வாங்கிக்கோன்னு ரிஜீஸ்டரும் பண்ணிடுறாங்க. ஆக்டிவிட்டி ஏரியாவில் “கத சொல்லட்டுமா டாஸ்க்” தொடர்ந்தது. இமான் அண்ணாச்சி தனது கதை சொல்ல தொடங்கினார். கலகலப்பாக அவருடைய ஸ்டைலில் அவரின் கெரியர் பற்றி பேசினார். பேசுன அவருக்கும் போர் அடிக்கல, பார்த்த நமக்கும் போர் அடிக்கல. அங்கிருந்த ஹவுஸ் மேட்ஸூம் ஜாலியாக தான் அண்ணாச்சியின் கதையை கேட்டனர். கடைசியாக அவர் கொடுத்த டச் செம்ம செம்ம. இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை நகைச்சுவை நடிகர் வாங்க வேண்டும் என்றார். அதற்கு இப்பவே மக்களிடன் ஓட்டும் கேட்டுவிட்டார். அவர் கதையை முடித்ததும் லைக்ஸ், ஹார்ட், டிஸ்லைக்ஸ் வழங்கப்பட்டது.இதில் நமீதாவுக்கு என்ன குழப்பம் என்று தெரியவில்லை.

  முதலில் லைக் கொடுத்தார். அடுத்த சில நொடிகளில் அவரே போய் அதை டிஸ் லைக்காக மாற்றிவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் கூட பரவாயில்லை. அதற்கு போய் ஏன் முகத்தை அவ்வளவு கடு கடுத்தார். ஒருவேளை இமான் அண்ணாச்சி நமீதா பத்தி ஏதாவது பேசி இருப்பாரா? அன் சீனில் பார்த்தா தெரியும். (பார்த்துடுவோம்) சினிமா கதை போல் இருப்பதாக நமீதா கூற, அதையே ஜாலியாக மாற்றி முடித்தார் அண்ணாச்சி. இதற்கு சிபி ஏன் கோபப்பட்டார் என்றால், அந்நியாயத்தை கண்டு பொங்கியது தான் காரணம். அண்ணாச்சி கதை சொல்லும் போது அவரே சிரிச்சிகிட்டு தான் சொன்னாரு, ஆனா டார்ஸன் சிரிக்கும் போது அபிஷேக் “உச்” என்று சொல்ல அதை பற்றி டார்ஸன் கேட்க, அபிக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்று சிபி பொங்கினார். அதற்கு வந்த சின்ன சண்டை புரமோவில் கொஞ்சம் மசாலா தூவி சீரியஸாக காட்டப்பட்டது.

  சாப்பிட்டு முடிச்சதும் பொழுது போகாத அபி, போன சீசனில் அனிதா செய்த அதே வேலையை செய்கிறார். அவர் போட்டியாளர்களை வைத்து நியூஸ் வாசித்தார். இங்கு அபி மூவி ரிவியூ செய்தார். ஐக்கி முடி, உடையை பற்றி சொல்லிவிட்டு சிபி பக்கம் போனார். ரஜினியை வைத்து சிபி பற்றி புகழ்ந்து, கூடவே சிபியின் மனைவி கர்நாடகாவை சேர்ந்தவர், அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற எக்ஸ்ட்ரா இன்ஃபர்மெஷனையும் கொடுத்தார். அடுத்தது தாமரை செல்வி பட்டை பற்றி கலாய்க்க அவர் நாக் கூசா பட்டை பற்றி பேசுனா பிடிக்காது என்று சொல்லிவிட்டார். ஆனாலும் அபி விடுவதாக இல்லை. பின்பு ஸ்ருதி கதை சொல்ல தொடங்கினார். தனது குடும்பத்தை பற்றி பேசினார். ஆனால் அவரின் வாழ்க்கையில் அவ்வளவு வலிகளும் கஷ்டங்களும் இருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்து விட்டது. அப்பாவுக்கு வேண்டாத பெண்ணாய் பிறந்து கஷ்டப்பட்டு நன்றாக படித்து நல்ல வேலைக்கு போய் இப்போது பிக் பாஸ் வரை வந்துள்ளார். வாழ்த்துக்கள் ஸ்ருதி.

  ”3 வேளை சாப்பாடு கிடைக்குது, ஏஸி இருக்கு, ராத்திரியில் நல்லா தூக்கம் வருது, சிரிச்சிகிட்டே இருக்கேன் இங்கிருந்து போக மாட்டேன்” என்று அடம் பிடித்து கொண்டிருந்தார் தாமரை செல்வி. அவரை சொல்வதை கேட்டு இசைவாணி, அண்ணாச்சி, ஐக்கி எல்லோரும் சிரித்து கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் சிரிக்க வேண்டியது நாங்க தான். அடுத்தது பிரியங்கா பிக் பாஸிடம் வேலையை ஆரம்பித்தார். நடுவில் விஜய் டிவி பற்றிய உண்மைகளையும் அவர் வாயாலே உலறினார். “ இனி 1 வருஷக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது.பிக் பாஸ் வரும் போதே எனக்கு தெரிந்து விட்டது. வேற சேனலுக்கு போக கூடாதுன்னு அகிரிமெண்டுல சைன் வாங்கீட்டாங்க”ன்னு பிரியங்காவின் வாக்குமூலங்கள் கேமிராவில் பதிவாகி கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து நமீதா வர, கேமரா அவரை ஃபோக்கஸ் செய்ய, பிக் பாஸை கடலை போடும் பிளே பாய் போல தாளிச்சி எடுத்தார் பிரியங்கா. அவரின் பேச்சால் கிச்சன் ஏரியா சிரிப்பலையால் வெடித்தது.

  முதல் நாள் விவாகரத்து.. அடுத்த நாள் அம்மா.. அழு மூஞ்சி குமாரான அபிஷேக்!

  இதுவரை பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட எல்லோருமே டார்லிங், செல்லம், ஸ்வீட்டி என பிக் பாஸை கொஞ்சி தான் பேசி இருக்கிறார்கள். ஆனால் பிரியங்காவோ பெருசு, நைட்டி திருடன்னு பிக் பாஸை வேற லெவலில் வெச்சி செய்கிறார். கத்துக்கோங்க பிக் பாஸ், வளர்த்த கெடா மார்ல பாயுது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: