• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • BIGG BOSS :முழுசா சந்திரமுகியா மாறுன அக்‌ஷரா... பீப் போட வைத்த நிரூப் - வருணின் சண்டைகள்!

BIGG BOSS :முழுசா சந்திரமுகியா மாறுன அக்‌ஷரா... பீப் போட வைத்த நிரூப் - வருணின் சண்டைகள்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

BIGG BOSS tamil 5 Day 37 review full episode : அக்‌ஷராவை பார்க்கும் போது தாமரையும், பாவனியும் தேவலாம் என்றே தோன்றியது.

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்றைய தினம் தான் முதன் முறையாக எபிசோடு இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதே என ரசிகர்களை கவலையடைய செய்தது. அந்த அளவுக்கு பொம்மை டாஸ்க் அட்டகாசமாக இருந்தது.

    பிக் பாஸ் வீட்டில் 37 ஆம் நாள் காலை ’ஒத்த சொல்லால’ பாடலுடன் நாள் தொடங்கியது. ஆகாயம் சக்தியை சொந்தமாக்கிய பாவனி வழக்கம் போல் சில சில டாஸ்குகளை ஹவுஸ்மேட்ஸ்-க்கு கொடுத்து கொண்டிருந்தார். இந்த வாரம் வீட்டின் தலைவரான இசைவாணி சங்கத்தை கூட்டி, தன்னுடைய சர்வர் வேலைக்கான அர்த்ததை தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். சில மணி நேரத்திலே பிக் பாஸ் டைம் வேஸ்ட் பண்ணாமல் “நீயும் பொம்மை நானும் பொம்மை” டாஸ்குக்கு போட்டியாளர்களை அழைத்து சென்றார். போட்டியின் முழு விதிமுறைகளை இமான் அண்ணாச்சி படித்து காட்டினார். ஆனாலும் ஹவுஸ்மேட்ஸ் மூஞ்சில் அப்படி ஒரு குழப்பம்.

    கார்டன் ஏரியாவில் கூடாரம் போடட்டப்பட்டிருந்தது. போட்டியாளர்களில் யார் பொம்மையுடன் கடைசியாக கூடாரத்தின் உள்ளே செல்கிறாரா? அவரின் கையில் இருக்கும் பொம்மையில் ஒட்டப்பட்டிருக்கும் பெயருடைய நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது தான் டாஸ். பொம்மைகளை ஸ்டோர் ரூமில் இருந்து எடுத்து அதை அலங்காரம் செய்து வெளியே கார்டன் ஏரியாவில் இருந்த ஸ்டாண்டில் போட்டியாளர்கள் அடுக்கினர். அதே போல் போட்டியாளர்களும் பொம்மைகளை போல் அழகாக மேக்கப் போட்டு இருந்தனர். ராஜூ பாய், செம்ம கியூட்டாக இருந்தார். போட்டி தொடங்கியது.

    ஹவுஸ்மேட்ஸ், போட்டியில் நிலைத்து நிற்க, தனக்கு நெருக்கமான ஹவுஸ்மேட்ஸ் உடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். பிரியங்காவும் தாமரையும் ஒப்பந்தம் போட்டனர். முதல் ரவுண்டு வெற்றிக்கரமாக முடிந்தது. ஆனால் விதிமுறைகளை மீறி ராஜூ பாய், தனது பெயர் உடைய பொம்மையை கூடாரத்தின் உள்ளே கொண்டு சென்றதால் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் விதிமுறையை விளக்கினார். அடுத்த ரவுண்டு ஓடும் போது தாமரையை வழி மறித்தார் நிரூப். தாமரையின் கையில் இருந்தது பிரியங்காவின் பொம்மை இதனால் முதல் ஆளாக பிரியங்கா வெளியேறினார். அவரின் முகம் மாறியது. நிரூப் விளையாட்டு என்று வந்த உடன், பெஸ்டி என்று கூட பார்க்காமல் பிரியங்காவை அவுட் ஆக்கினார். தாமரையின் கையில் இருந்தது உன்னுடைய பொம்மை தான் எனக்கு தெரியாது, நான் என்னுடைய கேம் தான் விளையாடினேன் என்றார் நிரூப். ஆனால் பிரியங்கா அதை நம்பவில்லை. ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இருவருக்கும் இடையில் வழக்கம் போல் நீண்ட விவாதம் தொடர்ந்தது.

    ராஜூ பாய், பிரியங்காவிடம் உண்மையில் நீங்க ரெண்டு பேரும் யாரு? என்று ரசிகர்கள் மனதில் இருந்த கேள்வியை அப்படியே கேட்டார்., தெரியாது என பதில் சொன்னார் பிரியங்கா. மீண்டும் டாஸ்க் தொடங்கியது, கடைசியாக ராஜூவும் அண்ணாச்சியும் போட்டி போட, அண்ணாச்சி தான் கடைசியில் கூடாரத்தினுள் நுழைந்ததால் அவரின் கையில் இருந்த பொம்மையில் சிபி பெயர் இருந்தது. இதனால் 2 ஆவது நபராக சிபி போட்டியில் இருந்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிபிக்கு இந்த வெளியேற்றம் வருத்தமும் ஏமாற்றமும் அளித்தது. ஆனால் அண்ணாச்சியை எதுவும் சொல்ல முடியாது என்பதால் அமைதியாக இருந்தார்.

    இமான் அண்ணாச்சியை பிளான் பண்ணி வெளியேற்றினாரா இசை?

    இதற்கு நடுவில் அக்‌ஷராவும் வருணும் மற்ற போட்டியாளர்களுடன் டீல் போட பார்த்தனர். ஆனால் யாரும் அவர்களுடன் உடன்படவில்லை. வேறு வழியில்லாமல் இருவரும் சேர்ந்து விளையாடினர். இதில் தான் சண்டை வெடித்தது. நிரூப்பும், வருணும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். அகஷ்ராவை நிரூப் பிடித்து கொண்டு தடுத்தது தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் என்றார் வருண். நிரூப் பெரிய மாடு, அது இதுன்னு கொச்சையாக பேசினார். பதிலுக்கு நீருப்பும் பொம்பளைய வச்சி ஆடுறேன்னு கேட்க, சண்டைக்குள் அக்‌ஷரா நுழைய மிகப் பெரிய களேபரம் வெடித்தது.

    பாவம், சிபி தனக்கு செண்பகமே செண்பகமே டாஸ்கில் நடந்ததை பற்றி கருத்து சொல்ல, அது பெரிய சண்டையாக வெடிக்க, அக்‌ஷரா முழு சந்திரமுகியாக மாறி தனது நிஜ முகத்தை காட்டினார். (எனக்கு சண்டை போடவே வராது.. தெரியாது. கத்திட்டே இருக்க மாட்டேன்னு சொன்ன ஆளு தான்மா நீ) அக்‌ஷராவை பார்க்கும் போது தாமரையும், பாவனியும் தேவலாம் என்று தோன்றியது. அடுத்த ரவுண்டில் விதிமுறையை ஃபாலோ செய்யாததால் வருணும், அக்‌ஷராவும் நேரடியாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

    வருண் - அக்‌ஷரா நடிக்கும் படத்தில் வில்லனாகும் சிபி! பிக் பாஸ் ஆட்டம் ஆரம்பம்!

    சிபி, அக்‌ஷராவை பார்த்து பேசியது பற்றி பிரியங்கா ஆண்டில் செய்த விதம் அவரின் முதிர்ச்சியை காட்டியது. எனக்கு தூனையாக நின்றார் மதுமிதா என வருண் கூறியதற்கு பஞ்சாயத்தை கூட்டினார் அக்‌ஷரா. வருண்- அக்‌ஷரா லவ் டிராக் ஒருபக்கம் சத்தம் இல்லாமல் போய் கொண்டிருந்து. இரவு 10 மணி வரை டாஸ்க் தொடர்ந்தது. தற்போது வரை பொம்மை டாஸ்கில் ஐக்கி பெர்ரி, இசைவாணி, தாமரை, நிரூப், அபிநவ், அண்ணாச்சி, பாவனி ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றியாளர். அது யார் என்பது இன்று தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: