• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • BIGG BOSS 5: வருண் - அக்‌ஷரா நடிக்கும் படத்தில் வில்லனாகும் சிபி! பிக் பாஸ் ஆட்டம் ஆரம்பம்!

BIGG BOSS 5: வருண் - அக்‌ஷரா நடிக்கும் படத்தில் வில்லனாகும் சிபி! பிக் பாஸ் ஆட்டம் ஆரம்பம்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

bigg boss tamil 5 Day 36 review varun akshara : இதனால் தான் சிபிக்கும் அக்‌ஷராவுக்கும் டிஸ்யூம் டிஸ்யூம் தொடங்கியது

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5ல் லவ் டிராக் இனிதே ஆரம்பமானது. இந்த படத்தில் சிபி வில்லனாகி விட்டார் (வில்லனாக்கப்பட்டார்) என்பதே நிதர்சனம்.

  பிக் பாஸ் சீசன்களில் லவ் டிராக்குக்கு பஞ்சமே இருக்காது. முதல் சீசன் ஓவியா - ஆரவ் தொடங்கி, மகத் - யாஷிகா, கவின் - லாஸ்லியா என பல்வேறு காதல் கதைகளை பிக் பாஸ் ரசிகர்கள் பார்த்துள்ளனர். அந்த வகையில் தற்போது வருண் - அக்‌ஷராவின் நண்பியே நண்பியே டிராக் தொடங்கியது. ஆனால் இதில் சிபியை வருணும் - அக்‌ஷராவும் வில்லனாக பார்ப்பது தான் ரசிகர்களை கோபமடைக்க வைக்கிறது மத்தப்படி அக்‌ஷரா, வருண் பெஸ்டி கோல் பார்க்க நல்லா தான் இருக்கு. 36 ஆவது நாள் காலை தொடங்கியது. இந்த வாரம் வானம் ஆற்றலுக்கான சக்தி. இந்த வாரம் முழுக்க பாவனிக்கு லிவ்விங் ஏரியாவில் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான விதிமுறைகளை பாவனி சார்பாக பிரியங்கா வாசித்தார். நிரூப்புக்கு தந்தது போலவே உதவியாளரை அப்பாயிண்மெண்ட் செய்யும் சலுகை தரப்பட்டது.

  தாமரையை தேர்வு செய்தார் பாவனி. அப்படி போடு இப்ப தான் பிக் பாஸ் ஆட்டம் ஆரம்பம் என்பது போலவே அண்ணாச்சி கொளுத்தி போட, ராஜூ பாய் தாமரைக்கு அட்வைஸ் செய்தார். (கோபப்படாத.. கோபம் வந்தாலும் கோபப்படாத)   லிவிங்கி ஏரியாவை கடந்து செல்ல வேண்டும் என்றால் சின்ன சின்ன டாஸ்க்குகளை கொடுத்தார். பாவனி முதலில் சிக்கியது நிரூப் தான் , அடுத்தது இசை. இப்படியே பாவனியின் தண்டனைகள், டாஸ்க்குகள் தொடர, இசையும் சில பல டிப்ஸ்களை பாவனிக்கு வாரி வழங்கினார்.

  ’பொம்மலாட்டாம்’ டாஸ்க் தொடங்கியது. இந்த வார தலைவருக்கான டாஸ்க். ‘செண்பகமே செண்பகமே’ டாஸ்கில் வெற்றி பெற்ற 7 போட்டியாளர்கள் சார்பாக அவர்களின் பெயர் பொதித்த பொம்மைகள் இடம்பெற்றன. யார் வீட்டுக்கு தலைவராக கூடாதோ அவர்களின் பொம்மைகளை மற்ற 7 போட்டியாளர்கள் உடைக்கலாம் என்பதே விதிமுறை. முதலில் உடைக்கப்பட்டது அக்‌ஷராவின் பொம்மை தலை தான். இதை செய்தவர் சிபி தான். ஆனால் அக்‌ஷரா இதை எதிர்பார்க்கவில்லை. உடனே வழக்கம் போல் அழ தொடங்கினார். நண்பி பின்னாடியே வந்த வருண் கிச்சன் ஏரியாவில் வைத்து அக்‌ஷராவை சமாதானம் செய்தார். அக்‌ஷரா, சிபியை பற்றி வருணிடம் கொட்டி தீர்த்தார். இதை சிபியும் கேட்டு கொண்டிருந்தார். ஆனால் அதை அக்‌ஷரா கவனிக்கவில்லை.

  வருணும் - சிபியும் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் வருண் , சிபியின் தலைவர் பதவியை பறித்ததில் இருந்து இரண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவில்லை. இதனால் அக்‌ஷராவுடன் வருண் சேர்ந்து கொண்டு சிபியை வில்லனாகவே கேமிராவில் காட்ட முயற்சி செய்கின்றனர். இதை சிபியும் நோட் செய்து விட்டார். அதனால் தனக்கான தனி கேம்மை சிபி ஆட தொடங்கி விட்டார். செண்பகமே செண்பகமே டாஸ்கில் சிபி இருக்கும் டீம், ஸ்ட்ராங் இல்லை என அக்‌ஷரா கமெண்ட் செய்துள்ளார். இதனால் தான் சிபிக்கும் அக்‌ஷராவுக்கும் டிஸ்யூம் டிஸ்யூம் தொடங்கியது. இப்போது தெளிவாக தெரிந்து விட்டது.

  ’பொம்மலாட்டம்’ டாஸ்கில் பரிதாப ஓட்டு பெற்று அபிநவ் இந்த வார தலைவரானார். ஆனால் இசை, நாணயத்தின் சக்தியை பயன்படுத்தி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரானார். அதே நேரம், வருணும், அண்ணாச்சியும் இசையின் முடிவை மாற்ற முயற்சி செய்தனர். அதனால் இசை ஆரம்பத்தில் பின் வாங்கினார். பின்பு நிரூப், பிரியங்கா கைட் செய்து, கடைசியில் இசையின் இறுதி முடிவு, நாணயத்தின் சக்தியை பயன்படுத்தினார்.இதற்கு நடுவில் பிரியங்காவும் - நிரூப்புக்கும் இடையில் வாய்க்கால் தகராறு அரங்கேறியது. இதில் கருத்து சொன்ன பாவத்துக்கு அபிநவ்வும் சண்டையில் சிக்கினார்.

  டாஸ்க்கில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரியங்கா

  ஆனால் ஒரு விஷயம் கன்ஃபார்ம், நிரூப் -பிரிய்ங்கா சண்டைக்கு இடையில் யாரு போனாலும் அவர்களுக்கு தான் நோஸ் கட். தலைவரான இசை, கிச்சன் டீம், கிளினீங் டீம்களை பிரித்தார். இந்த வாரம் வீட்டின் சர்வரும் இசை தான். பஸர் அடிக்கும் போதெல்லாம் போட்டியாளர்கள் கேட்ட உணவை கொண்டு போய் சர்வ் செய்ய வேண்டும். அடுத்தது இந்த வார நாமினேஷன். இசை பெயரை சொல்ல முடியாது என்பதால் அண்ணாச்சி இந்த பக்கம் பிரியங்கா பக்கம் பாய்ந்தார். அடுத்தது மதுமிதாவும் அந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டார். ராஜூ பாய், பிரிய்ங்காவின் பெயரை நாமினேட் செய்யும் போது அவருக்கு இருமல் வந்தது. கடைசியில் இந்த வாரம் பிரியங்கா, ராஜூ, அண்ணாச்சி, பாவனி, சிபி, மதுமிதா, அபிநவ் ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் வந்தனர். பெயர் லிஸ்டை பார்த்தால் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே போவது மதுமிதா அல்லத்கு அபிநவ் என்பது முதல் நாளே தெரிந்து விட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: