• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • bigg boss 5 : கடைசி வரை புரமோ பார்த்து ஏமாற வேண்டியது தான்.. தொடர்ந்து ஏமாற்றும் பிக் பாஸ் 5!

bigg boss 5 : கடைசி வரை புரமோ பார்த்து ஏமாற வேண்டியது தான்.. தொடர்ந்து ஏமாற்றும் பிக் பாஸ் 5!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

bigg boss tamil 5 Day 30 review vijay television live streaming : புரமோவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது மதுமிதா, தாமரை சண்டை தான். ஆனால் அது நிரூப் தலைமையில் நடந்த மொக்க பிராங்க்.

 • Share this:
  பிக் பாஸ் சீசன் 5 புரமோவை பார்த்து எபிசோடை பார்க்க நினைப்பவர்களுக்கு கடைசி வரை ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.

  புரமோலாம் நல்லா தான் இருக்கு எபிசோடு சரியில்லையே கதை தான். 29 ஆம் நாள் இரவு 2 மணியளில் அக்‌ஷரா, பாவனி மற்றும் ஸ்ருதியின் காயினை வலை வீசி தேடிக் கொண்டிருந்தார். ஆனால் கடைசி வரை அக்‌ஷராவின் கைக்கு அது சிக்கவில்லை. 30 ஆம் நாள் காலை பொழுது விடிந்தது“மாரி...தர லோக்கல்’ பாடல் இசைக்கப்பட்டது. நிரூப்பின் தண்டனைகளுக்கு பயந்து ஹவுஸ்மேட்ஸ் அவசர அவசரமாக ரெடி ஆகி கொண்டிருந்தனர். ஆனாலும் பாவனி, பிரியங்கா, ஸ்ருதி, மதுமிதா ஆகியோர் நிரூப் கொடுத்த நேரத்தை தாண்டி பெட்ரூமில் இருந்ததால் பனிஷ்மெண்டுக்கு ஆளாகினர்.

  கொடுமை பிளஸ் ஆரோக்கியம் என்ற முறையில் பாகற்காய் , பச்சை மிளகாய் சாப்பிடும் தண்டனை அளிக்கப்பட்டது. முகத்தை சுளித்துக் கொண்டே தண்டனையை நிறைவு செய்தனர். இசைவாணி நிரூப் சொன்னா மட்டும் செய்றீங்க, நான் என்ன தொக்கா? என்பது போல் லுக்கு விட்டார். இதை பற்றி பாவனி, மதுமிதா, ஸ்ருதியுடன் புலம்பி கொண்டிருந்தார். நிரூப்புக்கு கொடுத்தது போலவே இசைக்கும் அனைத்து முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அதை எப்படி யூஸ் செய்வது என்பதில் இசைக்கு அவ்வளவு தெளிவு இல்லை. அதே போல், நம்ம சொன்னா இதையெல்லாம் செய்வார்களா? என்ற சந்தேகம் வேறு. இதை சிறப்பாக கோடிட்டு காட்டினார் ஸ்ருதி. அதை வழிமொழிந்த இசை இந்த வீட்ல இருந்து இன்னும் நிரை செஞ்சி காட்டுவேன் என்றார். (30 நாள் ஆகியும், இதுவரை ஹவுஸ்மேட்ஸ் எதுவும் பண்ணல)

  பாவனி தன்னுடைய படுக்கையை யாரோ கலைத்து காயினை தேடி இருக்கிறார்கள் என்று நிரூப்பிடம் கூறி கொண்டிருந்தார். இந்த விஷயத்தை தாமரை மூலம் அக்‌ஷரா கேட்டு அறிந்து கொள்கிறார். இது இப்படி இருக்க, இந்த வார லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பமானது சினிமா சினிமா டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரும் கொடுக்கப்படும் கதாபாத்திரமாக மாறி பிளே செய்யும் பாடலுக்கு ஆட வேண்டும். பஸ்சர் அடித்த உடனே டாஸ்க் தொடங்கும். அடுத்த அறிவிப்பு வரும் வரை போட்டியாளர்கள் அந்த கதாப்பாத்திரமாகவே இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை. டாஸ்க் ஆரம்பமானது பிள்ளையார் சுழி போட்டார் தாமரை செல்வி. கரக்காட்டக்காரன் கோவை சரளா கதாப்பாத்திரம். தாமரை ஆடி முடிக்கும் போது இன்னும் கூட கொஞ்சம் நல்லா ஆடி இருக்கலாம் என தோன்றியது. ஆனால் அடுத்தடுத்து வந்த போட்டியாளர்களின் நடனத்தை பார்த்ததும் இதற்கே தாமரையே மேல் என்றது மனசு. அடுத்து இசைவாணி, சந்திரமுகி ஜோதிகாவாக மாறி சிறப்பாக ஆடினார். பின்பு மேடை ஏறிய சிபி நன்கு நடந்தார். ரஜினி படையப்பா கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. பாடிலேங்வேஜில் மேட்ச் செய்ய முடிந்த சிபியால் ரஜினி மாறி ஒரு ஸ்டெப் கூட போட முடியல. (இப்ப தான் தெரியுது வாத்தி கம்மிங் பாடலில் ஏன் சிபி ஆடவில்லை என்று)

  இந்த வார தலைவர் வருண், ரூல்ஸை பின்பற்றாததால் பிக் பாஸிடம் தோப்பு கரணம் பனிஷ்மெண்ட் வாங்கினார். ஆற்றல் நாயகன் நிரூப்பும் மைக்கை போடாததால் அவருக்கும் பனிஷ்மெண்ட் வழங்கப்பட்டது. வருணுக்கு எந்திரன் சிட்டி ரோல் கொடுக்கப்பட்டது. சும்மா சொல்ல கூடாது இந்த வாரம் வருண் ஒரு முடிவுல தான் இருக்காரு போல. சிட்டியாகவே தனது கதாபாத்திரத்தை தொடர்ந்தார். ஆனால் அபிநவ் அப்படியில்லை அடிக்கடி அவரின் ரோல் அவருக்கே மறந்து போனது. இதை அண்ணாச்சி நோட் பண்ணி சொல்ல, கூட்டத்துல கட்டு சோத்த அவுக்காத..கதையா அபிநவ் சீரியஸ் மூடுக்கு போனார். பாவம் பாவனிக்கு கஜினி சூர்யா ரோல். அவருக்கு பஸ்சர் அடிக்கும் போது வீட்டில் இருக்கும் யாராவது இரண்டு பேரை சிரிக்க வைக்க வேண்டும் என்பது டாஸ்க். ஆனால் அது நடக்கல. (யாரையாவது அழ வைக்கணும் சொல்லி இருந்தா கண்டிப்பா பண்ணி இருப்பாங்க) அதனால் பாவனிக்கு முதல் பிக் பாஸ் சீசனில் ஓவியாவுக்கு கொடுக்கப்பட்ட அதே தண்டனை. போட்டியாளர்களுக்கு சிவப்பு கம்பளத்தை போட வேண்டும்.

  ரூல் பிரேக்கர் அண்ணாச்சி.. திடீர் வில்லன் வருண்! கன்டென்ட்டுக்கு இப்படி இறங்கிட்டாங்களே?

  புரமோவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது மதுமிதா, தாமரை சண்டை தான். ஆனால் அது நிரூப் தலைமையில் நடந்த மொக்க பிராங்க். தாமரை நன்றாக ஸ்கோர் செய்தார், ஆனால் மதுமிதா சிரித்து சொதப்பி விட்டார். (புரமோ எடிட்டர் கவனத்திற்கு கத்துகிட்ட மொத்த வித்தையையும் நல்லா இறக்குறப்பா). பின்பு டாஸ்க் சில மணி நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. தங்களது நடன திறமையை காட்ட மற்ற போட்டியாளர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். இரவு, கேர்ள்ஸ் ஹாஸ்டல் வார்டன் போல தூங்காமல் இருந்தவர்களை விரட்டி அடித்துக் கொண்டிருந்தார் நிரூப். பாவனி, ஸ்ருதி, மதுமிதா வசமாக மாட்டிக் கொண்டனர். ஆனால் இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி, அண்ணாச்சி, அக்‌ஷரா, சிபி, ராஜூ குழு கார்டன் ஏரியாவில் கடலை போட்டு கொண்டிருந்தனர். அக்‌ஷராவும் நிரூப்பும் அவ்வளவு தீவிரமாக என்ன பேசினார்கள் என்பதை அண்ணாச்சி அக்‌ஷராவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல் புரமோவை பார்த்து நம்பி எபிசோடு பார்த்தவர்களை ஹவுஸ்மேட்ஸ், பிக் பாஸ் கூட்டு சேர்ந்து ஏமாற்றினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: