• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil : அன்றே கணித்தார் பிரியங்கா.. வெளி வரும் தாமரையின் உண்மை முகம்!

Bigg Boss Tamil : அன்றே கணித்தார் பிரியங்கா.. வெளி வரும் தாமரையின் உண்மை முகம்!

பிக் பாஸ் 5 தாமரை

பிக் பாஸ் 5 தாமரை

Bigg Boss Tamil 5 Day 26 review: இந்த டாஸ்கில் தாமரையின் பேச்சால், அவரின் பெயர் டேமேஜ் ஆனது

  • Share this:
    பிக் பாஸ் 5 சீசனில் தாமரையின் திடீர் மாற்றம் ஹவுஸ்மேட்ஸ்-க்கு மட்டுமில்லை பிக் பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.

    பிக் பாஸ் வீட்டில் தற்போது கிராமமா? நகரமா? டாஸ் தொடர்ந்து கொண்டிருப்பதால், 24 ஆம் நாள் இரவு எபிசோடுடன் ஒளிப்பரப்பு தொடங்குகிறது. இந்த டாஸ்கில் முழு ஈடுபாடு இல்லாத போட்டியாளர்களாக அபிநனவ் மற்றும் வருண் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கும் இரவு முழுவதும் தூங்காமல் இருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. இவர்களை கண்காணிக்க, அண்ணாச்சியை நியமித்தார் இசைவாணி. மொத்த ஹவுஸ்மேட்ஸூம் கைத்தட்டி சிரித்தனர். இவர்களுடன் ராஜூ பாயும் சேர்ந்து இரவு முழுவது அரட்டை அடித்தார். இவர்களின் டாப்பிக் தாமரை செல்வி பற்றி தான் இருந்தது. அதே போல் பிரியங்காவின் கட்டிப்பிடி வைத்தியத்தை பற்றி ஐக்கி பெர்ரி சொன்னதை கேமிராவில் தவறு என்று பதிவு செய்தார் அண்ணாச்சி.

    26 ஆம் நாள் காலை ‘அய்யோ பத்திகிட்ச்சி’ தத்துவ பாடலுடன் நாள் தொடங்கியது. காலையிலேயே கிச்சன் ஏரியாவில் பஞ்சாயத்து. தாமரை -சின்ன பொண்னு கத்தி கத்தி கத்தியை கேட்க, டென்ஷன் ஆனார் அபிநனவ். கத்தி கத்தி கத்தி என கத்தியை கத்தி கேட்டதால் (ஸ்வ்ப்ப்பா முடியல) . டைனிங் ஏரியாவில் லக்‌ஷரி பட்ஜெட்டை பற்றி ஹவுஸ்மேட்ஸ் பட்ஜெட் போட்டு டிஸ்கஸ் செய்தனர். அடுத்து, ஆக்டிவிட்டி ஏரியாவில் பட்டிமன்றம் டாஸ்க் தொடங்கியது. வழக்கம் போல் இசைவாணி நடுவராகி தீர்ப்பு வழங்கினார். முதல் டாப்பிக் கிராம சமையலா? நகர சமையலா? இதில் தாமரையின் கலக்கல் பேச்சால் கிராமம் டீம் வெற்றி பெற்றது.

    அடுத்து, பிக் பாஸ் கேமை புரிந்து விளையாடுபவர்கள் கிராமமா? நகரமா? என டாப்பில் பிரியங்கா வாதத்தை தொடங்கினார். பிரியங்கா எங்களிடம் 4 காயின் இருக்கு என சொல்ல, தாமரை செல்விக்கு மண்டை சூடாகி பட படவென வார்த்தைகளை விட்டார். அவரின் மொத்த தாக்குதலும் ஸ்ருதி மீது தான் இருந்தது. பேச்சில் அப்படி ஒரு வன்மம். இதை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் நோட் செய்தனர். கடையில் தாமரையின் பேச்சால் எதிர் டீம்மான நகரம் டீம் வெற்றி பெற்றது இத்துடன் பட்டிமன்றம் டாஸ்கும் முடிந்தது. கடைசியில் பெஸ்ட் டீம் என்ற அவார்ட் நகர மக்களுக்கு கொடுக்கப்பட்டது. பெஸ்ட் பேச்சாளராக ராஜூ பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த டாஸ்கில் தாமரையின் பேச்சால், அவரின் பெயர் டேமேஜ் ஆனது. வெளியில் வந்த ராஜு பாய், தாமரைக்கு அட்வைஸ் செய்தார். ஆனால் அது தாமரைக்கு புரிந்ததான்னு கூட தெரியல. ஸ்ருதியும் பாவனியும் தாமரையில் குத்தல் பேச்சை பற்றி புலம்பினர். பாத்ரூம் கேமிராவில் அழ தொடங்கினார் ஐக்கி பெர்ரி. அந்த கட்டிப்பிடி வைத்தியம் பற்றி அவர் பேசியது பிக் பாஸ் வீட்டில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருப்பது அவருக்கு தெரிந்தது. அதைப்பற்றி பிக் பாஸிடம் பெர்சனலாக பேசினார். அவருடன் அக்‌ஷராவும் சேர்ந்து கொண்டு இசைவாணி பாரபட்சமாக நடந்து கொண்டதாக கூறினார். சிறிது நேரத்தில் ஐக்கி பெர்ரி, அந்த கட்டிப்பிடி வைத்தியம் பற்றி அண்ணாச்சியிடம் ஏன் அப்படி பேசினேன் என்று விளக்கம் தந்தார்., அவருக்கு ஆதரவாக தாமரையும் சின்ன பொண்ணுவும் நின்றனர்.

    சாப்பிடும் போது கூட சீரியஸாக முகத்தை வைத்து கொண்டிருந்த தாமரை பற்றி பிரியங்காவும் ராஜூ பாயும் ரகசியம் பேசினர். தாமரையின் திடீர் மாற்றம் பற்றி தான் அவர்களின் பேச்சும் இருந்தது. ஆரம்பத்தில் தாமரையை காப்பாற்ற நினைத்தது உண்மை தான், ஆனால் இனிமே இல்லை. அவளுடைய கேம்மை அவள் விளையாட தொடங்கிவிட்டாள் என்றார் பிரியங்கா. (தாமரையை பற்றி சரியாக கணித்தவர் பிரியங்கா தான். பிக் பாஸ் வீட்டில் முதல் வாரமே தாமரை இன்னஸண்ட் இல்லை என உறுதியாக சொன்னார்) . 4வது வாரம் கழித்து அந்த உண்மை இப்போது ரசிகர்களுக்கும் தெரிந்து விட்டது. எல்லோருரையும் பாப்பா பாப்பா என்று பேசிய அவரின் பேச்சில் அப்படி ஒரு மாற்றம். அடுத்தது ஸ்பான்ஸர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் நிரூப் அணி வெற்றி பெற்றது. அவர்களுக்கு ஸ்பான்ஸர் கிஃப்டுகளும் வழங்கப்பட்டன. 2 நாட்களாக நடந்து வந்த ‘ஊரு விடு ஊரு வந்து ‘ டாஸ்கும் முடித்து வைக்கப்பட்டது.  சிபி மற்றும் ராஜூ சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் அடுத்த வாரம் தலைவர் போட்டியில் நேரடியாக களம் இறங்குவார்கள் என பிக் பாஸ் அறிவித்தார்.

    இதுக்கு பேரு தான் அடக்க ஒடுக்கமா? தாமரையிடம் சினம் கொண்ட சிபி!

    இந்த டாஸ்க் முடிந்த உடனே, பாத்ரூமில் கச்சேரி தொடங்கியது. ஷேவிங் கிரீமை வைத்து நிரூப், பிரியங்கா, மதுமிதா விளையாடினர்கள். இதில் ஜெர்மனியை சேர்ந்த நம்ம மதுமிதா துடப்பத்தை எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினார். இவர்களின் விளையாட்டு எல்லை மீற, உடனே பிக் பாஸ் கேமரா மூலம் உங்களுக்கு எந்த சேதாரம் வேண்டுமானாலும் ஆகலாம் மைக்குக்கு எதும் ஆக கூடாது என எச்சரிக்கை விடுத்தார். அவரின் குரலுடன் நேற்றைய எபிசோடு முடிந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: