Home /News /entertainment /

பிக் பாஸ் 5 : இதுக்கு பேரு தான் அடக்க ஒடுக்கமா? தாமரையிடம் சினம் கொண்ட சிபி!

பிக் பாஸ் 5 : இதுக்கு பேரு தான் அடக்க ஒடுக்கமா? தாமரையிடம் சினம் கொண்ட சிபி!

பிக் பாஸ் 5 சிபி

பிக் பாஸ் 5 சிபி

Bigg Boss Tamil 5 Day 25 review ; தாமரை மீண்டும் சந்திரமுகி அவதாரம் எடுத்தார் ...ஆனால் நோ யூஸ்

  பிக் பாஸ் சீசன் 5ல் இது தாமரை வாரம் போலிருக்கு.. அழுகை.. கோபம்.. ஆதங்கம்.. ஆட்டம் பாட்டம் என நவசரங்களை காண்பித்து கொண்டிருக்கிறார் தாமரை செல்வி.

  ரூல்ஸ் புக் இசைவாணியிடம் நெருப்பு ஆற்றல் சிக்கி கொண்டு சின்னாபின்னமாகிறது. ஒருபக்கம் நெருப்பு தலைவி இசை, மறுபக்கம் பிக் பாஸ் ஹவுஸ் தலைவி மதுமிதா. ஆனால் இரண்டு பேரும் ஹவுஸ்மேட்ஸ் எங்களை மதிக்கவில்லை என கண்ணீர் விடுகின்றனர். இவர்களின் தீராத பிரச்சனை 24 நாள் இரவு 2 மணி வரை தொடர்கிறது. பெட்ரூமில் தாமரை செல்வி, அக்‌ஷரா, வருண் ஆகியோர் அடுத்த வாரம் நீர் சக்தி வந்தால் என்ன நடக்கும் என பேசிக் கொண்டிருந்தனர். பனிஷ்மெண்ட் வாங்கி இருக்கும் லாஸ்ட் பென்ச் ஸ்டூண்ட்டான பாவனியும் மதுமிதாவும் தூங்காமல் விழித்து கொண்டிருக்க, இசைவாணி வாயை பிளந்து ஒருபக்கம் தூங்கி கொண்டிருந்தார். விடியற்காலை 6 மணிக்கு பிக் பாஸ், பாவனி மற்றும் மதுமிதாவை வீட்டுக்குள் போக சொன்னார்.

  25 ஆம் நாள் காலை ஃபாஸ்ட் பீட்டான ‘யாக்கை திரி’ பாடலை பிளே செய்து ஹவுஸ் மேட்ஸை எழுப்பினார் பிக் பாஸ். சின்ன பொண்ணு அக்கா, காபி போட போக “நான் காயினை வைத்த பிறகு காபி போடுங்க அக்கா” என்றார் இசை. சாரி சாரி நான் மறந்துட்டேன் என்றார் சின்ன பொண்ணு. முதல் முறை என்பதால் எஸ்கியூஸ் கொடுத்தார் இசைவாணி. (நல்லது இல்லனா மூத்த கலைஞரை மதிக்கலன்னு அவபெயர் இசைக்கு வந்து இருக்கும்). திடீரென்று அண்ணாச்சி இசையை பார்த்து ஒரு மாதிரி முறைக்கிறார். இதற்கு அர்த்தம் அடுத்த சில மணி நேரங்களில் நமக்கு தெரியவரும்.

  இசைவாணி வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற கான்ஷியசில் சிரிக்க கூட மறந்து விட்டார். ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு வீட்டை சுற்றி வருகிறார். பாத்ரூம் டோரை அவர் மூட, பாவனி, ஸ்ருதி அதை திறக்க சொல்ல,  இசை நான் மூடினால் மட்டும் தப்பா? என கோபித்து கொள்கிறார். உடனே மதுமிதா பாத்ரூமில் பொங்கி, இசையின் பாத்ரூம் கதவை தட்டி உள்ளே போய், “நீ சொன்னா நாங்க கேட்கணும் ..நாங்க சொன்னா நீ கேட்க மாட்டியா” என கேப்டன் பவரை காட்டினார். (இந்த முறை ஹர்ட் ஆகுது டயால்கை உரிமை கூறினார் மதுமிதா)

  அன்னபூரணி தாமரை கிச்சன் ஏரியாவில் போய் சமைக்க, இசை இனிமேல் என்னை கேட்காமல் கிச்சனில் யாரும் சமைக்க கூடாது, எந்த பொருளையும் தொட கூடாது. மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன் என்றார். தாமரை செல்வி உடனே டென்ஷன் ஆகி, பட படவென வார்த்தைகளை விட்டார். இசைவாணி தண்டனை தருவேன் என சொல்லியதும் அண்ணாச்சியை கை காட்டினார் தாமரை. ஏற்கெனவே அண்ணாசிக்கும் இசைக்கும் ஆகாது. இசை சொல்வதற்கு ஏறுக்கு மாறாகவே அண்ணாச்சி பேசினார். ஒன்றுக்கு பத்து முறை சொல்லியும் அண்ணாச்சி இசையின் ரூஸ்லை ஃபாலோ செய்யவில்லை என்பது அவரின் பதிலில் தெரிந்தது.

  பட்டிமன்றம் டாஸ்கில் பற்றி எரியும் பிக் பாஸ் வீடு.. கோபத்தின் உச்சத்தில் தாமரை!

  இதைப் பற்றி சிபி மற்றும் அபிநனவிடம் புலம்பினார் இசை. அடுத்த கொஞ்ச நேரத்தில் கார்டன் ஏரியாவில் இசை தூங்க நாய் குரைத்தது. இதனால் மதுமிதா ‘நான் கேப்டன் நான் சொல்லுறத கேளு” என்று மறுபடியும் ஒருமுறை ஞாபகப்படுத்தினார். (பாவம்யா அந்த பொண்ணு) . டைனிங் ஏரியாவில் மறுபடியும் தனக்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க், ரூல்ஸ் பற்றி விளக்கி கொண்டிருந்தார் இசை. அண்ணாச்சிக்கு இசை அதிகாரம் செய்வது சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இசைக்கும் மதுமிதாவுக்கும் இடையில் கொளுத்தி போட்டார். நீ அதிகாரம் பண்ற, அப்ப மதுமிதா யாரு? உன்கிட்ட பிக் பாஸ் என்ன சொன்னாரு? நீ தப்பா எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டு அதிகாரம் பண்றியா? நீ கேப்டன் என்றால் அப்ப மதுமிதா யாரு? என அண்ணாச்சியின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு வன்மம் வெடித்தது. (பெண் அதிகாரம் செய்யலாமா? என்ற தோனியிலே இருந்தது அண்ணாச்சியின் பேச்சு)

  போதாத குறைக்கு தாமரை நீ மாறிட்டா? ரொம்ப ரூடா பேசுறன்னு இசையை பற்றி கருத்து சொல்ல, இசையோ பிக் பாஸ் கொடுத்த வேலையை தான் நான் செய்றேன்னு திரும்ப திரும்ப பதிவு செய்தார். இடையில் புகுந்த அக்‌ஷரா, நீங்க மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறீங்கன்னு கொளுத்தி போட்டார். கடைசியில் அண்ணாச்சி, இசையை சர்வதிகாரி என்றார். இந்த பக்கம், மதுமிதாவை தாமரை செல்வி ஏற்றிவிட்டார். நீ யாரு பாப்பா? கேப்டனா நீ என்ன செஞ்ச? நீயும் ரூல்ஸ் போடுன்னு அப்பாவி பொண்ணு மதுமிதாவை மூளை சலவை செய்தார். இந்த வாக்குவாதத்தில் இசை மற்றும் மதுமிதா தனித்தனியாக அழ தொடங்கினர். பாத்ரூமில் அழுத இசையை பிரியங்கா தேற்றினார். (அண்ணாச்சி போக வேண்டாம் என சொல்லியும் பிரியங்கா எழுந்து போனார் வெரி குட் )

  ஒருவழியாக இன்றைய நாளின் டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் தொடங்கியது பட்டிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டது. கிராமம், நகரம் அணிகள் பிரிந்தனர். இசைவாணி டாஸ்கின் நடுவரானார். தலைப்பை பிக் பாஸ் எழுதி கண்ணாடி பவுலில் போட்டு வைத்திருந்தார். பட்டிமன்றம் ஆரம்பமானது ராஜூ பாய், நகரத்தை சேர்ந்தவர்கள் அடையாளத்தை மறக்கின்றனர் எனும் தலைப்பில் 3 நிமிடம் பேசினார். சேலத்தை சேர்ந்த ஸ்ருதி, வட்டார மொழியில் பேசுவதை தவிர்ப்பதாக அவரின் வாதம் இருந்தது. அதற்கு ஸ்ருதியும் பதில் கொடுத்தார். முதல் சுற்றில் நகரம் அணி வெற்றி பெற்றது.

  பாவனிக்கு பிக்பாஸ் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது யார்?

  அடுத்தது, ஐக்கி பெர்ரி பிரியங்காவின் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி பேச, ஆங்கர் பிரியங்கா சும்மா இருப்பாரா என்ன? கட்டிபிடி வைத்தியத்தை சொல்லி கொடுத்தவரே கமல்ஹாசன் என்றார். ஐக்கியிடம் பதிலே இல்லை. 2 வது சுற்றிலும் நகரம் வெற்றி பெற்றது. அடுத்தது, தாமரை செல்வி ஆடை மற்றும் அடக்க ஒடுக்கம் பற்றி பேசி, பிரியங்கா மற்றும் ஸ்ருதியை குறிப்பிட்டு பேசினார். இதனால் கடுப்பான சிபி, ஆடை குறித்த விமர்சனம் தப்பு என்றும், பெண்கள் ஏன் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்? நீங்க அடக்க ஒடுக்கமா இருக்கீங்களா என்றார். (தாமரை மீண்டும் சந்திரமுகி அவதாரம் எடுத்தார் ஆனால் நோ யூஸ்) ஆடை விமர்சனத்திற்கு மொத்த பிக் பாஸ் வீடும் எதிர்ப்பு தெரிவிக்க 3 வது சுற்றிலும் நகரம் அணி வெற்றி பெற்றது.

  கடத்தல் வழக்கு... ஃபேஸ் சர்ஜரி! பிக் பாஸ் அக்‌ஷராவை சுற்றும் சர்ச்சைகளுக்கு என்ன காரணம்?

  டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தாமரைக்கு சிபி சொன்ன வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. டைனிங் ஏரியாவில் போய் அவரே வாய் கொடுத்தார். ஒரே கேள்வி தான் தாமரையை ஆஃப் செய்தார் சிபி. அடக்க ஒடுக்கம் என்றால் என்ன அக்கா? என்றார். தாமரை எவ்வளவோ பதில் சொல்லியும் சிபி ஒரே கேள்வியை ரிபிட் செய்தார். இதுதான் அடக்க ஒடுக்கமா? ஓ இதுதான் அடக்க ஒடுக்கமா? கடுப்பான தாமரை அங்கிருந்து எழுந்து விட்டார். அக்‌ஷரா சிபியை கோபப்பட வேண்டாம் என்றார். ஆனால் உண்மையில் சிபி கூலாக தான் அதை ஆண்டில் செய்தார். கடையில் சிபி சொன்ன வார்த்தை தான் ரீகேப் செய்ய வேப்ண்டும். (அவுங்களுக்கே உறுத்து போல) அப்படியென்றால் சிபி ஏதோ ஒரு காரணத்தை குறிப்பிட்டு தான் அப்படி சொன்னார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த வாரம் கமல்ஹாசன் தீர்த்து வைக்க வேண்டிய பஞ்சாயத்துக்கள் ஏகப்பட்டது இருக்கு.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி