Home /News /entertainment /

Bigg Boss Tamil : கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லை.. ஹவுஸ்மேட்ஸை அசிங்கப்படுத்திய பிக் பாஸ்! ஏன் இப்படி?

Bigg Boss Tamil : கொஞ்சம் கூட சுவாரசியமே இல்லை.. ஹவுஸ்மேட்ஸை அசிங்கப்படுத்திய பிக் பாஸ்! ஏன் இப்படி?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 24 review : உடனே சங்கத்தை கூட்டுவோம் என்று உத்தரவிட்டார் அண்ணாச்சி.

  பிக் பாஸ் சீசன் 5 ,வரலாற்றில் இடம்பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளன போல. வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் விளையாடும் விளையாட்டை பார்த்து பிக் பாஸூக்கே மண்டை சூடாகிவிட்டது.

  எந்த டாஸ்க் கொடுத்தாலும் கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் கடமைக்கு என செய்து பிக் பாஸிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். இதுவரை எந்த சீசனிலும் இல்லாத ஒரு சிறப்பு பெயர் சீசன் 5 போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. நேற்றைய எபிசோடில் சொல்லும்படியாக சுவாரசியமான சம்பவங்களோ, சண்டைகளோ, குழாய் அடி சண்டையோ எதுவுமே நடக்கவில்லை. அதற்கு முந்தைய நாள் சந்திரமுகி அவதாரம் எடுத்த தாமரை செல்வி நேற்று முழு நேரமும் கும்மி பாட்டு, டான்ஸில் பிஸியானார். சோ, காற்று காயின் பறிப்போனது பற்றி எந்த பேச்சும் இல்லை. பிக் பாஸ் வீட்டில் 24 ஆம் நாள் (நேற்று) என்ன நடந்தது என்பதை சின்ன ரீக்கேப்பாக பார்த்து விடலாம்.

  தற்போது ‘ஊரு விட்டு ஊரு வந்து’ டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் அதை குறிக்கும் வகையில் பிக் பாஸ் கரக்காட்டக்காரன் படத்தில் இருந்து கவுண்டர்மணியின் மாஸ் பீட்டான ’ஊரு விட்டு ஊரு’ சாங்கை பிளே செய்தார். (என்னா மாதிரியான சாங்க் டா.. ஏன்னாடா இப்படி ஆடுறீங்க) ஹவுஸ்மேட்ஸின் நடனத்தை பார்த்து பலரின் மைண்ட் வாய்ஸூம் இதுதான். ஆடி முடிச்ச அப்புறம் பாவனியும், ஸ்ருதியும் பிக் பாஸின் பதிலுக்காக காத்திருந்தனர். அதுதான் காயின் எடுத்தது சரியா? தவறா? காயின் எங்ககிட்ட இருக்கணுமா? கொடுக்கணுமா? என்ற கேள்விக்கான விடை. கமல்ஹாசன் தான் அதற்கு தீர்ப்பு சொல்வார் என்பது பிக் பாஸின் அமைதியில் தெரிந்தது.

  நெருப்பு ஆற்றலை குறிக்கும் வாரம் என்பதால் இசைவாணி நெருப்பு காயினை கிச்சன் ஏரியாவில் வைத்த பின்னர் தான் சமைக்க வேண்டும். இதனை மறந்த ராஜூக்கு, மதுமிதா ஞாபகப்படுத்த, சிறு நேரத்திற்குள் இசைவாணி காயினை கிச்சன் ஏரியாவில் வைத்தார். பின்பு நிரூப், ராஜூ பாய் காபி போட தொடங்கினர். மதுமிதாவுக்கு நேற்று கண்டாங்கி சேலை கட்டியதே கடுப்பாக இருந்தது போல, இன்னிக்குமா டாஸ்க்? காலையிலேயே அப்படி ட்ரெஸ் பண்ணனுமா? என விசாரித்து கொண்டிருந்தார். ஊரு விட்டு ஊரு வந்து டாஸ்க் தொடங்கியது. ஹவுஸ்மேட்ஸ் கிராமமா? நகரமா? என இரண்டு அணிகளாக பிரிந்தனர்.

  பாவனி, ஸ்ருதி, மதுமிதா மூவரும் ஆங்கிலத்தில் பேச, பிக் பாஸ் எச்சரிக்கை விடுத்தார். அதிலும் தலைவரே இப்படி பண்ணலாமான்னு மதுமிதாவுக்கு வார்னிக் கொடுத்தார். இதனால் ஹர்ட் ஆன மதுமிதா ( இந்த ஹர்ட் வார்த்தையை நாம யூஸ் பண்ணலா வேண்டாமான்னு தெரியல இந்த சீசன் முழுவதும் இசைவாணி ஹர்ட் வார்த்தையை குத்தகைக்கு எடுத்து விட்டார். பிக் பாஸ் வீட்டுக்கு வந்து பிறகு அவர் அதிகம் பேசியது இரண்டு வார்த்தைகள் தான் ஒண்ணு அண்ணாச்சி, இன்னொன்னு ஹர்ட் ஆயிடுச்சி) . முகத்தை தொங்கப்போட்டு பெட்ரூமுக்கு வந்த மதுமிதாவை நிரூப் கலாய்த்தார். அப்போது தான் என்னை யாரும் மதிக்க மாட்றாங்க, சொன்னா கேட்க மாட்டாறாங்கன்னு தலைவரான மதுமிதா வருத்தப்பட, உடனே சங்கத்தை கூட்டுவோம் என்று உத்தரவிட்டார் அண்ணாச்சி.

  லிவிங் ஏரியாவில் அனைவரும் ஒன்று கூட, டாஸ்க் குறித்த அறிவிப்பை இசைவாணி படித்தார். இந்த வாரம் முழுவது நடைபெறும் டாஸ்க்குக்கு இசை தான் நடுவர். கார்டன் ஏரியாவில் நடந்த முதல் ’கொளுத்தி போடு’ என்ற மெழுகுவர்த்தி டாஸ்கில் நிரூப் வெற்றி பெற்று 3000 ரொக்கத்தை பெற்றார். அடுத்தடுத்த டாஸ்கில் கேஷ் மணி கிடைக்கும் என்ற தகவலையும் ஹவுஸ்மேட்ஸ் தெரிந்து கொண்டனர். பின்பு மதுமிதாவுக்கு லிவிங் ஏரியாவில் பிரியங்கா குரல் கொடுத்தார். பாவம் மதுமிதா சொல்ல வந்ததை கடைசி வரை ஒழுங்காக சொல்ல விடாமல் தாமரை பதிலுக்கு பதில் பேசி கொண்டிருந்தார். (அந்த பொண்ண பேசதான் விடுங்களேன் ) அதே சீனில் இசைவாணியும் ஸ்பீட்ச் கொடுக்க, ஹவுஸ்மேட்ஸ் கட்டுப்படுறோம் எஜமான் என்றனர். இசைக்கு நிறைய விதிமுறைகளை போட வேண்டும், நல்ல பெயர் வாங்க வேண்டும் என பல ஆசை. ஆனால் அதை செய்தால் ஹவுஸ்மேட்ஸ் கோபித்து கொள்வார்களோ, தப்பா கேமிராவில் தெரியுமோ என்ற பயத்தால் பாதி சொதப்பி விடுகிறார்.

  ஐக்கியும், அக்‌ஷராவும் பிரெட் பாக்கெட்டுகளை மறைத்து வைத்து கொஞ்ச நேரம் விளையாடினார்கள். (ஐக்கி நீ ஏமா அப்படி நடக்குற. புடவை கட்டி நடக்குறது அவ்வளவு கஷ்டம் இல்லை..யதார்த்தமாக நடந்தாலே பார்க்க நல்லா இருக்கும்) இதை வருண் கண்டுப்பிடிக்க சாப்பாடு பொருளை வைத்து மொத்த ஹவுஸ்மேட்ஸூம் அடித்து கொள்கிறார்கள். இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நெருப்பு தலைவர் இசையை அழைத்து பிக் பாஸ் லெஃப் ரைட் வாங்கினார். இதனால் இசை முகம் மாறியது. திரும்பவும் கார்டன் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸிடம் இசை கோரிக்கை வைத்தார். ரூலர் மாறி நடந்து கொள், நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் என்று சரண்டர் ஆனார் பிரியங்கா. (மத்தவங்க வாயை கூட திறக்கல)

  ஸ்ருதியா? தாமரையா? நீதி யாருக்கு.. குறும்படம் யாருக்கு பிக் பாஸ்?

  திரும்பவும் பிக் பாஸிடம் இருந்து அறிவிப்பு வந்தது. இந்த டாஸ்கை போட்டியாளர்கள் கொஞ்சம் கூட சுவாரசியமாக செய்யவில்லை. டாஸ்கை புரிந்து கொண்டு நன்றாக விளையாட வேண்டும் என்று ஆர்டர் போட்டார் பிக் பாஸ். (அதை நீங்க 18 போட்டியாளர்களை தேர்ந்தெடுக்கும் போதே யோசிச்சி இருக்கணும்) இப்ப பாருங்க எங்க விளையாட்டை என உற்சாகத்துடன் சென்ற போட்டியாளர்கள் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்த அடுத்தடுத்த டாஸ்கில் சுமாராக விளையாடினர். கடைசியில் இந்த டாஸ்கில் ஈடுப்பாடு குறைந்த போட்டியாளர் தலா ஒருவர் பெயரை கிராமம் டீமில் இருந்தும், நகரம் டீமிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கட்டளையிட்டார். சொல்லப்போனால் 15 போட்டியாளர்கள் பெயரும் தான் அதில் வந்திருக்க வேண்டும். ஆனால் தலைமை முடிவு தானே முக்கியம். பாவனி மற்றும் மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும். இவர்கள் தூங்காமல் இருக்கிறார்களா? என்பதை இசைவாணி கண்காணிக்க வேண்டும். அப்ப இந்த தண்டனை இசைவாணிக்கா? இல்லை பாவனி மற்றும் மதுமிதாவுக்கா? என்பதில் தான் சின்ன குழப்பம். (பாவம் பிக் பாஸே கண்ஃபியூஷன் ஆகிட்டாரு போல)  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி