• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5 : ஸ்ருதியா? தாமரையா? நீதி யாருக்கு.. குறும்படம் யாருக்கு பிக் பாஸ்?

Bigg Boss Tamil 5 : ஸ்ருதியா? தாமரையா? நீதி யாருக்கு.. குறும்படம் யாருக்கு பிக் பாஸ்?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 23 review : மதுமிதா ஸ்ருதி பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுகிறார்

  • Share this:
    பிக் பாஸ் சீசன் 5ல் நேற்று நடந்த களேபரத்தின் உண்மையை அறிந்து கொள்ள பிக் பாஸிடம் குறும்படம் கேட்கின்றனர் ரசிகர்கள்.

    பிக் பாஸ் வீட்டில் அபிஷேக் ராஜாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, கன்டெண்ட் இல்லை என புலம்பி தீர்த்தவர்களுக்கு நேற்றைய தினம் பாவனி , ஸ்ருதி, தாமரை ஆகியோர் கன்டெண்டை வாரி வழங்கினர். இந்த வாரம் கமல்ஹாசன் எபிசோடு வரை இந்த சம்பவம் புகைத்துகொண்டே இருக்கும் போல. அப்படி ஒரு செய்கை செய்துள்ளனர் பாவனியும் ஸ்ருதியும். இதில் தாமரை தனக்கு மிகப் பெரிய அநீதி நடந்துவிட்டதாக சொல்கிறார். ஸ்ருதியும் பாவனியும் நாங்கள் கேமை தான் விளையாடினோம் என்கின்றனர். முடிவை இந்த வாரம் கமல்ஹாசன் அறிவிப்பார். அதுவரை காத்திருப்போம். ஆனால் நேற்று என்ன நடந்தது என்பதை ஒருமுறை பார்த்துவிடலாம்.

    இந்த வாரம் நெருப்பு ஆற்றலை குறிக்கும் வாரம் என்பதால் ’நெருப்புடா நெருங்குடா’ பாடலுடன் நாள் தொடங்கியது. காலையிலேயே கச்சேரி வெடித்தது. பாத்ரூமில் தாமரை செல்வி குளித்து முடித்துவிட்டு உடை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பாவனியிடம் ஸ்ருதி வந்து, காயினை எடுக்க உதவி பண்றியா? என கேட்கிறார். பாவனியும் அவங்களை நான் திசைதிருப்புறேன் நீ எடு என்று சொல்லிவிட்டு இருவரும் ட்ரெஸிங் ரூமூக்குள் சென்றனர். தாமரை செல்வி உடை மாற்றிக் கொண்டிருக்க, பாவனி டவலை வைத்து அவருக்கு முன்பு மறைத்துக் கொண்டார். அந்த கேப்பில் ஸ்ருதி துணியுடன் சேர்த்து காயினை எடுத்து வந்தார். அவர்கள் பேசியதை வைத்து மைக்கில் பதிவானது மட்டுமே காட்டப்பட்டது. ரூமில் கேமிரா இல்லை என்பதால் அவர்கள் மூவருக்கும் தவிர வேற யாருக்கும் அங்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

    உடனே அவசர அவசரமாக வெளியே வந்த தாமரை ஸ்ருதியிடம் ஏன் காயினை எடுத்த? இப்படியா எடுப்பது? கேட்டு இருந்தா நானே கொடுத்து இருப்பனே என்றார். அங்கிருந்த பாவனியிடம் நீ செய்தது துரோகம் என்றார். இதனால் பாவனிக்கு கோபம் வர, காயின் எடுத்தது ஸ்ருதி, நான் எந்த உதவியுடம் செய்யவில்லை என்றார். பாத்ரூமில் இருந்து வெளியே வந்த ஸ்ருதி, இது கேம், திருடுறது தான் விளையாட்டு என்றார். நீங்க ட்ரெஸிலே மறைச்சி வச்சி இருந்தா எப்படி விளையாடுறதுன்னு கேட்டார். அதற்குள் தாமரை வீட்டுகுள் சென்று ராஜூ, அண்ணாச்சி, சிபி, அக்‌ஷரா ஐக்கி, பிரியங்காவிடம் நான் ட்ரெஸ் மாத்தும் போது பிளான் செய்து ஸ்ருதியும், பாவனியும் காயினை எடுத்ததாக கூறினார். பாவனி டவலை வைத்து தன்னை மறைத்துக் கொண்டதாகவும், அவரின் உதவியால் ஸ்ருதி காயினை எடுத்தாக கூறுகிறார். இதை கேட்டு அனைவரும் தப்பு என்று தீர்ப்பை சொல்லி பாத்ரூம் சென்றனர்.

    ராஜூ பாய், சற்று வார்த்தையை விட, பாவனி அதற்கு உங்களுக்கு விளக்கம் தர முடியாது என எண்டு கார்டு போட்டார். சிபியும், அண்னாச்சியும் ராஜூ ஸ்ருதியிடம் விசாரிக்க, அதற்கு ஸ்ருதி இது கேம் அப்படிதான் விளையாடனும், ரூல்ஸ் புக்குல ட்ரெஸ் மாத்தும் போது எடுக்க கூடாதுன்னு போட்டு இருக்கான்னு ரூல்ஸ் பேசினார். அசறும் போது எடுக்கலாம் அப்படிதானே, அப்ப அவங்க கீழே போட்டு வச்சி இருந்தாங்க நான் எடுத்தேன் என்றார். அதற்கு ராஜூ பாய் ட்ரெஸ் மாத்தும் போது எப்படி கவனமாக இருப்பாங்க, அது அவங்க பிரைவசி ஏரியா, அதுல உங்களை உள்ள விட்டாங்க, நீங்க பண்ணது தப்பு என்றார்.

    தாமரை இந்த சம்பவத்தை விடுவதாக இல்லை, பெட்ரூமிலும் அதைப்பற்றி பேசி ஆர்பரித்தார். இப்படியா கேஎம் விளையாடுவீங்க, நான் வீட்டுக்கு போறேன் என்றார். (தாமரை செல்வி கவனத்திற்கு, கேம் விளையாட போகலனா எதுக்கு உங்களை உள்ள அனுப்பி இருக்காங்க?) இதுவரை தாமரை செல்வி இப்படி கோபப்பட்டு பிக் பாஸ் வீடு பார்க்கவில்லை, பிரியங்கா, ராஜு பாயிடமும் மூஞ்சை காட்டினார். இந்த கோபம், காயின் போனதுக்கா இல்லை பாவனியும் ஸ்ருதியும் ட்ரெஸ் மாத்தும் போது ஏமாற்றியதற்கா என்று முடிவு எடுக்க முடியவில்லை.

    நான் திரும்ப வருவேன் டா” ஹேட்டர்ஸ்-க்கு ரிப்ளை கொடுத்த பிக் பாஸ் அபிஷேக் ராஜா!

    இதில் மதுமிதா ஸ்ருதி பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுகிறார். இந்த வார தலைவராக மதுமிதா, ஸ்ருதி மற்றும் தாமரை செல்வியை பேச வைக்க முயற்சி எடுக்கிறார். ராஜூ பாயும் தாமரையிடம் போய் பேசும்படி ஸ்ருதியுடம் கூறுகிறார். ஆனால் தாமரை எதற்கும் அசந்து கொடுப்பது போல் தெரியவில்லை. காயின் போன கோபம் அவரின் பேச்சி, மூஞ்சில் தெரிந்தது. இதனால் வளர்ப்பு, குடும்பம், பாசம் என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசினார். தாமரை செல்வி, வேற மாதிரி திணித்து சொல்வதாக ஸ்ருதியும், பாவனியும் கோபப்பாட்டனர். தாமரை செல்வி பொய் சொல்வதாகவும், கேமரா முன்பு எங்களை அசிங்கப்படுத்துவதாகவும் ஸ்ருதியும் பாவனியும் கண்ணீர் விட்டனர். பிரியங்காவும் பாவனியை சமாதானம் செய்தார்.ஸ்ருதியும் கேமரா முன்பு நடந்ததை கமல் சாரிடம் முறையிடுவேன் என்றார்.

    மதுமிதாவை தவிர மொத்த ஹவுஸ்மேட்ஸூம் தாமரை செல்வி பக்கம் நின்றனர். இதனால் பாவனியும் ஸ்ருதியும் தனிமையை உணர்ந்தனர். சிறிது நேரத்தில் லிவிங் ஏரியாவில் கிரமமா? நகரமா? டாஸ்க் குறித்த அறிவிப்பு வந்தது. ராஜூ பாய், அக்‌ஷரா, நிரூப் தங்கள் குழு உறுப்பினர்களை தேர்வு செய்தனர். இமான் அண்ணாச்சி சிட்டி பக்கம் என்பதால் அவருக்கு ஹிப் ஹாப் ஸ்டைலில் தலையில் ஸ்பைக் வைக்கப்பட்டது. பாவனி அவருடன் ஜோடி சேர்ந்தார். பூனை தாடி ராஜூ பாய், உடனே சிங்கம் சூர்யா ஸ்டைலுக்கு மாறினார். அக்‌ஷரா, தாமரை செல்வி, ஐக்கி ஆகியோ கண்டாங்கி சேலையில் ஜொலிக்க தொடங்கினர். டாஸ்க் ஒருபக்கம் ஆரம்பமானது.

    இரவு 12மணியளவில் ராஜூ பாய், அக்‌ஷரா, ஐக்கி ஆகியோர் கிச்சனில் ஏதோ சமைத்தனர். நெருப்பு சக்தி கொண்ட இசையிடம் இதற்காக அவர்கள் அனுமதி பெறவில்லை./இதனால் கடுப்பான இசை, கார்டன் ஏரியாவில் கேமரா ஃபோக்கஸ் செய்யும் படி புலம்பி கொண்டிருந்தார். எல்லோரும் அவரை வந்து விசாரிக்க ராஜூ பாயிடம் சின்ன மீட்டிங் போட்டு மறுபடியும் ரூல்ஸ் பற்றி ஒருமுறை தெளிவுப்படுத்த போவதாக கூறுகிறார். 2 மணியளவில் அனைவரும் உறங்க, இசை மட்டும் மொத்த கிச்சனையும் தனி ஆளாக நின்று சுத்தம் செய்தார். பகலில் எல்லாம் இசையை ஃபோக்கஸ் செய்யாத கேமரா, இரவில் இசையை எல்லா திசையிலிருந்தும் படம் பிடித்தது. இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இசை இருக்கிறார். அதுவும் ஒரு காரணம் தான்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: