• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • Bigg Boss 5 : முதல் நாளே கன்டெண்ட் நாயகன் அபிஷேக் இல்லாமல் தவிக்கும் பிக் பாஸ் வீடு!

Bigg Boss 5 : முதல் நாளே கன்டெண்ட் நாயகன் அபிஷேக் இல்லாமல் தவிக்கும் பிக் பாஸ் வீடு!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 22 review : அண்ணாச்சி மற்றும் அக்‌ஷரா போன்றவர்களை எப்படி சமாளிக்க போறேன்னு இசையின் மரண பீதி கண்ணில் தெரிந்தது.

 • Share this:
  பிக் பாஸ் 5 சீசனில் ஞாயிற்றுக்கிழமை நடந்த எவிக்ஷனில் வெளியே போன கன்டெண்ட் நாயகன் அபிஷேக் இல்லாமல், முதல் நாளே பிக் பாஸ் வீடு களை இழந்தது,

  பிக் பாஸ் வீட்டில் 22 ஆம் நாள் காலை ‘நெருப்பு கூத்தடிக்குது’ பாடலுடன் தொடங்கியது. இந்த பாடலை பிக் பாஸ் பிளே செய்ததற்கான காரணம், அடுத்த சில நிமிடங்களில் தெரிய வந்தது. ராஜூ பாய் மாஸ்டராக மாறி ஒரு டான்ச் குழுவை தயார் செய்து கொண்டிருந்தார். எந்த பாடல் போட்டாலுமே அக்‌ஷரா நிக்குற இடத்தை விட்டு ஒரு அடி கூட நகரமாட்டார். நேற்றும் அப்படி தான். பாத்ரூமில் முகத்தை கழுவி கொண்டிருந்த இசைக்கு புது அறிவிப்பை வெளியிட்டார் பிக் பாஸ். அதாவது நெருப்பு சக்தி கொண்ட நாணயம் இசையிடம் இருப்பதால் இந்த வாரம் இசைக்கு கிச்சன் ஏரியாவில் அவருக்கு முன்னுரிமை தரப்படும் என்றார். அதுமட்டுமில்லை இந்த வாரம் நெருப்பு வாரம். (அதற்கு தான் நெருப்பு கூத்தடிக்குது பாடல்) இந்த வாரம் முழுவது நெருப்பு சக்தியை குறிப்பிடும் வகையில் டாஸ்க்குகள் நடைபெறும் என்றார். இசைக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் ஆத்தாடி ஆத்தி இந்த அண்ணாச்சி மற்றும் அக்‌ஷரா போன்றவர்களை எப்படி சமாளிக்க போறேன்னு அவரின் மரண பீதி கண்ணில் தெரிந்தது.

  பாத்ரூமில் இருந்தவர் வேக வேகமாக கிச்சன் ஏரியாவுக்கு போனார். அங்கு காயினை வைத்து தனது பணியை தொடங்கினார். அதற்குள் அண்ணாச்சி பெட்ரூமில் புரளி பேச தொடங்கினார். இசையுடன் அண்ணாச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே செட் ஆகவில்லை என்பதால் எப்போதுமே இருவரும் எலியும் பூனையுமாய் நிற்கிறார்கள். பதவி வந்தவுடன் இசையின் நடையில் மாற்றம் தெரியும், அதிகார தோனியில் பேசுவார், ஜோக் சொன்னா கூட சிரிக்க மாட்டார் என்று இசையை பற்றி இமான் அண்ணாச்சி, பிரியங்கா, சிபி, ராஜூ பாயுடன் ஷேர் செய்தார்.

  கிச்சன் ஏரியாவில் பிக் பாஸ் அன்னபூரணி தாமரை செல்வி சமைக்க, கடலை பருப்பு குக்கரில் கருகி போனதை கண்டு இசை டென்ஷன் ஆனார். எண்ணெய்யும் அதிகளவில் செலவு செய்வதால் இனிமேல் என்னை கேட்காமல் எண்ணெய்யை யாரும் தொட கூடாது என ஆர்டர் போட்டார். சில மணி நேரத்தில் ஹவுஸ்மேட்ஸ் லிவிங் ஏரியாவில் ஒன்று கூட இந்த வார தலைவருக்கான டாஸ்க் குறித்து அறிவிப்பு வந்தது. ’நேம் கேம்’ டைனிங் ஏரியாவில் நடைபெறும் இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மற்றொருவரின் பெயரை ஆனால் வேறு நபரை பார்த்து சொல்ல வேண்டும். கடைசி வரை யார் நிலைத்து நிற்கிறார்களோ அவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு செல்வார்கள். பிரியங்காவும் , மதுமிதாவும் இறுதி கட்டத்திற்கு தேர்வானார்கள். இருவருக்கும் கார்டன் ஏரியாவில் மற்றொரு போட்டி நடைப்பெற்றது. போட்டியில் மதுமிதா தான் வெற்றி பெறுவார் என்பது முன்பே தெரிந்து விட்டது. (காரணம், புரமோவில் எவிக்‌ஷன் லிஸ்டில் பிரியங்கா பெயர் இருந்ததால் அவர் இந்த வார தலைவர் இல்லை என்பது தெரிந்து கொள்ள முடிந்தது) 1 பால் வித்யாசத்தில் மதுமிதா வெற்றி வாகை சூடி இந்த வார தலைவரானார். பின்பு கிச்சன் டீம், பாத்ரூம் டீம், கிளினிங் டீம்மை தேர்ந்தெடுத்தார். கூடுதலாக முடிந்த வரை எல்லோரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடலாம் என்றார். அதே போல் வெள்ளிக்கிழமை வர போகும் லக்‌ஷரி பட்ஜெட் டாஸ்க்கு வியாக்கிழமையே பிளான் செய்வோம் என்றார். (அப்படியே பிரியங்காவுக்காக இந்த வாரம் எதாவது பார்த்து வாங்கலாம் என்று சைடு கேப்பில் பிட்டு போட்டார்)

  தொடர்ந்து, இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் புராஸஸூம் தொடங்கியது. நெருப்பு வாரம் என்பதால் அதை சார்ந்த நமினேஷன் நடந்தது. போன முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளான போட்டியாளர்களின் புகைப்படங்களை நெருப்பில் போட்டு எரிப்பது. ஆனால் இந்த முறை சர்ச்சைக்கு புள்ளி வைக்கும்படி போட்டியாளர்களின் பெயர்கள் அடங்கிய காகிதத்தை ஹவுஸ்மேட்ஸ் நெருப்பில் போட்டனர்.

  நீ பண்ணினது துரோகம்’ - கண்ணீர் விடும் தாமரைச்செல்வி

  முதல் ஆளாக ராஜூ பாய் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு அழைக்கப்பட்டார். குழப்பத்தில் ராஜு பாய் அங்கும் இங்கும் ஓடி கடைசியில் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு போய் முதல் நாமினேஷனை தொடங்கி வைத்தார். இப்படியே 15 போட்டியாளர்களும் ஒரு ஒரு காரணத்தை கூறி நாமினேஷனை முடித்தனர். இந்த வார எவிக்‌ஷனுக்கான நாமினேஷனில் இசை, அண்ணாச்சி, பிரியங்கா, சின்ன பொண்ணு, அபிநவ், பாவனி, அக்‌ஷரா, ஸ்ருதி , வருண் தேர்வு செய்யப்பட்டனர். இதில் வருண், இசை, பாவனியிடம் பிக் பாஸ் நாணய சக்தியை பயன்படுத்த போறீங்களா? என கேட்டார். மூவரும் இல்லை என்றனர். பிக் பாஸிடம் பதில் வராததால் இசை மீண்டும் அந்த பதிலை பதிவு செய்ய இமான் அண்ணாச்சி அதற்கு கவுண்டர் கொடுத்தார். இசை கடுப்பாவது அண்ணாச்சிக்கு புரிய அதை அவரே முடித்தும் வைத்தார். (இசையை ஈஸியாக எது வேண்டுமானாலும் சொல்லி விடலாம் ஆனால் அக்‌ஷரா, பாவனி, பிரியங்காவை அண்ணாச்சியால் எளிதில் எதுவும் சொல்லிவிட முடியாது. அதனால் தான் அவர்களிடம் அடங்கி போவார் , இசையை அடக்க பார்ப்பார்)

  இப்படியே போனா பிரியங்காவுக்கு பைத்தியம் தான் பிடிக்கும்! வேலையை காட்டும் நிரூப்

  இந்த பிக் பாஸ் வீட்டில் பிரிலியண்ட் கேர்ள் என்றால் அது பாவனி தான். தன்னை ராஜு நாமினேட் செய்து இருப்பார், அவர் அண்ணாச்சிக்காக தான் அதை செய்து இருப்பார் என்றும் கரக்ட்டாக யோகித்து அதை நிரூப்பிடம் ஷேர் செய்தார். இந்த பக்கம் அக்‌ஷரா சின்ன பொண்ணுவிடம் நிரூப்பின் காயினை நான் எடுக்க முயற்சி செய்வேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருந்தார். இசை மற்றும் தாமரை செல்வி மீது பாவம் பார்த்து அந்த காயினை எடுக்க மாட்டேன் என்றார். சின்ன பொண்ணும் அதை வழி மொழிந்து கொண்டிருந்தார். நெருப்பு ஆற்றல் பயன்படுத்த பயமாக இருப்பதாகவும் யாராவது தப்பா எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என பாவனியிடம் புலம்பினார் இசை. அவர் மனதில் வைத்து பேசுவது அண்ணாச்சியை மட்டும் தான்.. சாப்பாடு வேஸ்ட் ஆக கூடாது என்பதில் உறுதியாக இருந்த இசை அதற்கான காரணத்தை குறிப்பிட்டார். (இதற்கு கமலிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்) மொத்தத்தில் அபிஷேக் இல்லாததால் முதல் நாளே பிக் பாஸ் வீடு உப்பு சப்பு இல்லாமல் நகர்ந்தது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: