Home /News /entertainment /

Bigg Boss 5 : இப்படியே போனா பிரியங்காவுக்கு பைத்தியம் தான் பிடிக்கும்! வேலையை காட்டும் நிரூப்

Bigg Boss 5 : இப்படியே போனா பிரியங்காவுக்கு பைத்தியம் தான் பிடிக்கும்! வேலையை காட்டும் நிரூப்

பிக் பஸ் 5

பிக் பஸ் 5

Bigg Boss Tamil 5 Day 19 review : நிரூப், பிரியங்காவை திட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினார். இதனால் கடுப்பான பிரியங்காவின் முகத்தை கேமராக்கள் ஜூம் செய்தனர்.

  பிக் பாஸ் வீட்டில் போற நிலைமையை பார்த்தால் பிரியங்காவுக்கு அன்பு கேங்கால் பைத்தியம் தான் பிடிக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

  பிக் பாஸ் வீட்டில் 19 ஆம் நாள் தளபதி பாடலுடன் நாள் தொடங்கியது. (நேற்று தல சாங்க், இன்று தளபதி .. நாளை சூர்யாவா பாஸூ?) வேண்டா வெருப்பாக ஹவுஸ்மேட்ஸ் ஆட, அபிஷேக்கின் முகத்தில் காலையிலேயே ஃபயர் தெரிந்தது. நேற்றைய பஞ்சந்திரம் டாஸ்கின் 3 ஆவது படியில் அபிஷேக் மீது வைக்கப்பட்ட கமெண்ட்ஸ் தான் அதற்கு காரணம். இதுதாண்டா நீ.. உன் கேம்மை நீ இப்படியே விளையாடு. நீ தனித்துவமானவன், நீ பிக் பாஸ் வீட்டில் இல்லையென்றால் கண்டெண்ட் கிடையாது என உண்மையை போட்டு உடைத்தார் பாவனி. அடுத்தது, வருணிடம் சென்ற அபிஷேக், அண்ணாச்சி பற்றி புறம் பேசி கொண்டிருந்தார். கடைசியில் அபி வைத்த கருத்து, பெருசு உனக்கு வயசு ஆயிடுச்சி நீ ஒதுங்கு நாங்க இளம் ரத்தம் என்பது தான். இதை வருணும் ஆதரித்தார். நேற்றைய எபிசோடில் வழக்கத்தை விட மதுமிதாவின் குரல் அதிகம் கேட்டது

  நேற்று இரவு ஷேவிங் க்ரீமை வைத்து விளையாடி கொண்டிருந்தவர், மார்னிங் அவரின் செல்ல தடி மாடு நிரூப் மற்றும் அபிஷேக்கிடம் வாய்கால் தகராறில் ஈடுப்பட்டு கொண்டிருந்தார். கொஞ்சம் நேரம் கழித்து, ராஜூவும் மதுமிதாவை கலாய்க்க தனது குரலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் மதுமிதா. ஜெர்மனி மொழியில் அவர் பேச, ராஜூ பாய் கூடவே எக்கோ அடிக்க இவர்களின் ரகளையுடன் மார்னிங் பிரேக் ஃபாஸ்ட் டைனிங் ஏரியாவில் முடிந்தது. பிரியங்காவுக்கு திடீரென்று வீட்டு ஞாபகம் வந்துவிட்டது போல கிச்சன் ஏரியாவில் அழ தொடங்கி விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், சாப்பிட ஏதாவது வேண்டும் என்று. இந்த வாரம் கிச்சன் ஏரியா பிரியங்கா கையில் தான் இருந்தது ஆனாலும் பிக் பாஸிடம் சாப்பிட ஏதாவது வேண்டும் என்று அடம் பிடித்தார். கிச்சனில் இந்த முறை சீக்கிரமாக  சர்க்கரை சீக்கிரமாக தீர்ந்து விட்டதாம். அதற்கும் ஒரு பஞ்சாயத்து நடந்து முடிந்தது.

  அடுத்தது பட்ஜெட் சவுந்தர்யாவா உருவெடுத்த பிரியங்கா லக்‌ஷரி பட்ஜெட் குறித்து ஹவுஸ்மேட்ஸ் உடன் டிஸ்கஸ் செய்தார். யாருக்கெல்லாம் மட்டன் வேண்டும், சிக்கன் வேணும், மீன் வேணும் என்று மெனு பறந்தது. சிறிது நேரத்தில் லிவிங் ஏரியாவில் அழைப்பு வர ஹவுஸ்மேட்ஸ் ஒன்று சேர்ந்தனர். “விளையாடு வெளியே ஓடு” டாஸ்க் விதிமுறைகளை ராஜூ பாய் படித்தார். இந்த பிக் பாஸ் வீட்டில் விளையாடமல் விதிமுறைகளை மீறுபவர்கள் யார் யார்? என்பதை போட்டியாளர்கள் ஒவ்வொருவராக சொல்ல வேண்டும். போட்டி முடிவில் ஓட்டு எண்ணிக்கையை வைத்து ரிசல்ட் சொல்லப்படும் என்று பிக் பாஸ் தெரிவித்தார். ரெடி , ஸ்டார்ட் என்பது போல் 16 போட்டியாளர்களும் ஒவ்வொரு காரணத்தை கூற, ஓட்டு முடிவில் பிக் பாஸ் சில வசனங்களை பெயர் போர்டில் ரெடி செய்து அதை யார் மாட்ட வேண்டும் என்று பெயரையும் குறிப்பிட்டு அனுப்பி வைத்தார். அதன்படி, அபிநவுக்கு “I don’t Know தமிழ் யா” பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த வீட்டில் அதிகம் ஆங்கிலத்தில் பேசுபவர் இவர் தான். பிரியங்கா மற்றும் நிரூப்-க்கு ”இரவினில் ஆட்டம் பகனில் தூக்கம் போர்டு கொடுக்கப்பட அதை அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். ஸ்ருதி மற்றும் ஐக்கிக்கு “நான் நானாக இருக்கேன் அதான் தனியா பொழுதை கழிக்கிறேன்” பட்டம் தரப்பட்டது.

  இதில் ஸ்ருதிக்கு சற்றும் விருப்பமில்லை. அதுமட்டுமில்லை ஐக்கி பெர்ரியுடன் கைவிலங்கை மாட்டிக் கொண்டு சுற்றவும் ஸ்ருதி விரும்பாதது அவர் முகத்தில் தெரிந்தது. போர்டு மாட்டிய 6 பேரும் ’break the rules’ பாடலை தேசிய கீதம் போல் கிச்சனில், பாத்ரூமில் பாடி கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் பிரியங்கா மார்னிங் யாரும் டான்ச் ஆடுவதில்லை அதற்கு ஏன் தண்டனை கொடுக்கவில்லை என பிக் பாஸிடம் போட்டு கொடுத்தார். அப்படி தண்டனை கொடுக்கப்பட்டால் முதலில் சிக்க போவது நிரூப் தான். அது அவருக்கே தெரியும் என்பதால் பிரியங்காவின் வாயை மூட சொன்னார்.

  இசையை அடையாளமாக மாற்றி கொண்ட மருத்துவர்.. பிக் பாஸில் ஒலிக்காமல் போன ஐக்கி பெர்ரியின் குரல்!

  திரும்பவும் பிரியங்காவுக்கு வீட்டு ஞாபகம் வர, பாத்ரூமில் அழ தொடங்கினார். இந்த முறை பிரியங்கா இமான் அண்ணாச்சியை கட்டிப்பிடித்து அழுதார். குழந்தையை தேற்றுவது போல் அண்ணாச்சி பிரியங்காவை சமாதானம் செய்தார். (அபிஷேக்கின் கவனத்திற்கு இப்ப இந்த இடத்தில் கண்டிப்பாக ஒரு பெருசு தான் தேவைப்படுகிறார்). கமல்ஹாசன் பிறந்த நாள் வரவுள்ளதால் அந்த கொண்டாட்டத்திற்கு என்னென்ன உணவுகள் வேண்டும் என்று போட்டியாளர்கள் பிக் பாஸிடம் லிஸ்டு கொடுத்தனர். லிவிங் ஏரியாவில் உள்ல டிவியில் பிரியா பவானி ஷங்கரும், ஹரிஷ் கல்யாணும் தோன்றினர். ஓ மணப்பெண்ணே படத்தின் பிரமோஷன். இருவரும் ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஹாய் சொல்லினர். ஹரிஷ் ஸ்பெஷலாக அபிஷேக்கின் ஃபேஸ் ரியாக்‌ஷனை நோட் செய்து கேட்டார். பின்னர், இறுதியில் அக்‌ஷரா மற்றும் நிரூப்புக்கு இருவரும் ஆம்லெட் டாஸ்க் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். 5 நிமிடத்தில் சூப்பரான ஆல்லெட் போட்டு உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.

  அக்‌ஷரா வழக்கம் போல் அவரின் லட்டு சின்ன பொண்ணுக்கு கொடுத்தார். அந்த இடத்தில் நீருப் தனது வேலையை காட்டினார். அதாவது அவர் பிரியங்காவுக்கு கொடுப்பார் என்று தான் போட்டியாளர் எதிர்பார்த்தனர். (பிரியங்கா உட்பட) ஆனால் நிரூப், அண்ணாசிக்கு அதை கொடுத்தார். இதை ஏற்றுக் கொள்ள முடியாத பிரியங்கா நிரூப்பை வெறுப்பு ஏற்ற அபிஷேக், சிபி, ராஜூ பாயுடன் ஜாம்பியா கேம் விளையாடி பொழுதை கழித்தார். பின்பு அன்பு கேங் மூவரும் கார்டன் ஏரியாவில் வழக்கம் போல் ரகசியம் பேச செல்ல, பிரியங்கா நிரூப்பிடம் ஆம்லெட் கதை கேட்டு சண்டை போட்டார். நிரூப் எவ்வளவு சமாதானம் செய்தும் பிரிய்ங்கா அதை ஏற்று கொள்லவில்லை. தொடர்ந்து மூவரும் பஞ்சந்திரம் டாஸ்கில் நாமினேஷனுக்கு வராம இருக்க செய்த சீக்ரெட் பிளானை பற்றி வாய் விட்டனர். உஷாரான நிரூப், பிரியங்காவை திட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகினார். இதனால் கடுப்பான பிரியங்காவின் முகத்தை கேமராக்கள் ஜூம் செய்தனர்.

  ஜாலியாக இருந்த பிரியங்காவை இப்படி பைத்தியம் போல் ஆக்கியது நிரூப்பும் அபிஷேக்கும் தான் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி