• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக் பாஸ் 5 : பிரியங்காவுக்கு வார்னிங் கொடுக்கும் ராஜூ பாய்.. ஓ கதை அப்படி போகுதா?

பிக் பாஸ் 5 : பிரியங்காவுக்கு வார்னிங் கொடுக்கும் ராஜூ பாய்.. ஓ கதை அப்படி போகுதா?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 18 review : ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரில் விஜய் டிவியின் சப்போர்ட் யாருக்கு என்பது கமல் எபிசோடில் தெரிந்து விடும்.

 • Share this:
  பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா வெர்சஸ் ராஜூ பாய் என இரு முனை போட்டி அதிகம் மேலோங்கி ,வெளிப்படையாகவே ஒருவரையொருவர் வார்னிங் செய்யும் அளவுக்கு வந்து விட்டது.

  17 ஆம் நாள் நடைப்பெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில், அக்‌ஷராவிடம் பிரியங்கா மற்றும் பாவனி ஆகியோர் கடுமையாக நடந்து கொள்ள, அதை நினைத்து கொண்டே அக்‌ஷரா சாப்பிடாமல் கவலையுடன் சுற்றி வந்தார். இதை நோட் செய்த பிக் பாஸ், எங்க அடுத்த போட்டியாளரும் கிளம்பிட போறாங்க என்ற பயத்தில் உடனே அக்‌ஷராவை வரவழைத்து பேசினார். அக்‌ஷரா முகத்தை பார்க்கவே பாவமாக இருந்த நிலையில் ”நான் வீட்டுக்கு போறேன். என்னால் இருக்க முடியவில்லை. இங்க எல்லோரும் என்னை கார்னட் செய்கின்றனர்” என வெடித்து அழுதார். அக்‌ஷராவை சமாதானம் செய்ய பிக் பாஸ், இது கேம் என்பதை புரிய வைத்து, உங்கள் ஸ்ட்ராங்கை காட்டுங்கள் என்றார். பிக் பாஸ் கொடுத்த எனர்ஜியுடன் சிரித்தப்படி வெளியே வந்தார் அக்‌ஷரா.

  18ஆம் நாள் காலை 8 மணி, தல பாடலுடன் நாள் விடிந்தது. ஆலுமா டோலுமா.. இந்த சீசனில் ஒலிக்கப்படும் முதல் தல பாடல். ஆனால் அபிஷேக் அந்த பாட்டுக்கு டி.ஆர். ஸ்டெப் போட்டுக்கொண்டிருந்தார். பிரியங்காவும் ராஜூ பாயும் பாத்ரூமில் ப்ராட்டிஸ் செய்துக் கொண்டிருந்தனர். ஆடி முடித்த உடனே லிவிங் ஏரியாவில், ராஜு பாயை புகழ்ந்து பேசி கொண்டிருந்தார் இமான் அண்ணாச்சி. இதை அபிஷேக்கும், பிரியங்காவும் நோட் செய்கிறார்கள்.நீண்ட யோசனைக்கு பிறகு சிபியை அழைத்து மனதில் பட்ட சந்தேகத்தை கேட்கிறார் பாவனி. அதாவது, தாமரை செல்வி, இசையை காப்பாற்ற நீங்க பேசி வைத்துக் கொண்டு காயினை எடுத்தீர்கள், அப்ப எங்களை காப்பாற்றி கொள்ள நாங்கள் எடுத்த போது மட்டும் ஏன் நீங்களும் வருணும் ஸ்ருதியை காட்டி கொடுத்தீர்கள் என்றார். அதே போல்  என்னை காப்பாற்ற வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோணவில்லை? என்று பாவனி கேட்க, அவங்க கேட்டாங்க செஞ்சோம், நீங்கள் கேட்கல என்று ஒரே வார்த்தையில் முடித்தார் சிபி.

  குக்கிங் வேலையில் பிரியங்கா பரபரப்பாக இருக்க, டைனிங் டேபில் இருந்த அண்ணாச்சி, ராஜு பாய் இருவரும் பிரியங்காவை கலாய்த்து கொண்டிருந்தனர். நாங்க கேமிராவில்தெரிய வேண்டாமா? பிரியங்கா என்றார் அண்ணாச்சி. அதற்கு பிரியங்காவும் நீங்கள் தான் போன வாரம் ஜொலித்த போட்டியாளர் ஆச்சே என நக்கலுடன் பேசி கொண்டிருந்தார். இதை பெட்ரூமில் இருந்தப்படியே பார்த்து கொண்டிருந்த அபிஷேக், உடனே மசாலாவை தூவ தொடங்கினார். அண்ணாச்சி பேசுவது பிரியங்காவுக்கு கோபம் வருவதாகவும், இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியங்கா வெடித்து சிதற போவதாக அபிஷேக் அளக்க, ’நீ ஏத்திவிடாத அவள, உன் வேலையை பாரு” என்று ஆஃப் செய்தார் நிரூப் (வா தலைவ வா) . ஆனாலும் அடங்காத அபிஷேக், இதை இப்படியே விட கூடாதுன்னு நிரூப்பின் காதை கடித்தான்.

  பஞ்சந்திரம் டாஸ்கின் இரண்டாவது படி தொடங்கியது. 5 காயின்களை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு 5 சக்தி கொடுக்கப்பட்டது. வருண், பாவனி, தாமரை செல்வி, இசை, நிரூப் அந்த 5 ஆற்றலுக்கு தகுதியானர்கள். ஆற்றலை அடிப்படையாக கொண்டு போட்டியாளர்களுக்கு சில இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அங்கு வைத்து தான் அவர்கள் அடுத்த சில மணி நேரத்திற்கு காயின்களை பாதுகாக்க வேண்டும். வருண் நீர் காயினை கைப்பற்றியதால் அவருக்கு பாத்ரூம் ஏரியா, தாமரை செல்விக்கு நிலம் என்பதால் கார்டன் ஏரியா, நிரூப்புக்கு காற்று என்பதால் பெட்ரூம் ஏரியா, பரந்து விரிந்த ஆகாயம் காயினை கைப்பற்றியதால் பாவனிக்கு லிவிங் ஏரியா, இசைக்கு நெருப்புயை குறிக்கும் கிச்சன் ஏரியா. இந்த ஏரியாவில் மற்ற போட்டியாளர்கள் செல்ல வேண்டும் என்றால் காயின் ஆற்றல் உடையவர்களுக்கு வேலை செய்துவிட்டு பின்பு தான் செல்ல வேண்டும்.

  இந்த டாஸ்கில் முதலில் சிக்கியவர் பிரியங்கா தான். பாத்ரூம் செல்ல தவித்த பிரியங்காவை நாய் போல் செய்துகாட்ட வருண் கட்டளையிட, அப்படியே செய்துவிட்டு பாத்ரூம் ஏரியாவை பிரியங்கா யூஸ் செய்தார். நிரூப்புக்கு மதுமிதா கிளினீங் செய்து கொடுத்தார். நிரூப் கூடவே அபிஷேக் இருந்தார். இந்த நேரத்தில் தான் பிரியங்கா பெட்ரூமில் பகல் நேரத்தில் தூங்க செய்தார். அதுவும் மைக்கை கழடிவிட்டு தூங்கினார். இதனால் கடுப்பான பிக் பாஸ் விதிமுறைகளை ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து மீறுவதாக வார்னிங் கொடுத்தார். இவை தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  அபிஷேக்குக்கு வருண் ஜெயிக்க கூடாது என எண்ணம் மேலோங்க, வருணிடம் சென்று ஏதோ டீல் பேச, கோபத்தில் வருண் அபிஷேக்கை அசிங்கப்படுத்தினார். கடுப்பான அபி, ஸ்ருதியிடம் போய் கைவரிசை காட்ட பதிலுக்கு ஸ்ருதியும் உன் டீலை பாவனியிடம் ,நிரூப்பிடம் பேசு என அசிங்கப்படுத்த அதற்குள் பஞ்சந்திரம் டாஸ்கின் இரண்டாம் கட்டம் வெற்றிக்கரமாக முடிந்தது. இமான் அண்ணாசி தாமரை செல்வி காயினை கைப்பற்றுவதாக சும்மா நாடகம் செய்து போட்டியாளர்களை இடையில் திசைதிருப்பினார்.

  கொளுத்தி போடும் பிக் பாஸ்... பிரியங்கா, அபிஷேக் வான்டட் லிஸ்டில் சேர்க்கப்பட்டனர்

  டாஸ்கின் மூன்றாவது படி டைனிங் ஏரியாவில் தொடங்கியது. பஞ்ச பூதங்களான நீர், நில, ஆகாயம், காற்று, நெருப்பு சக்தியை தொடர்புபடுத்தி போட்டியாளர்கள் தன்னை பற்றி பேச வேண்டும் என்பதே டாஸ்க். அபிஷேக்கிடம் இருந்து டாஸ் தொடங்க, அதை கெத்தாக முடித்தவர் ராஜூ. பிரியங்கா ராஜூவை காற்று நாற்றம் அடிக்குமா? மணக்குமா?ன்னு தெரியல என  நக்கலாக பாயிண்ட் அவுட் பண்ண, அதற்கு ராஜு பிடித்து ரசித்தால் தென்றல், பிடிக்கலனா சூறாவளி என்னை பார்த்து பத்திரமா யூஸ் செய்யுங்கள் என்றார். அதே போல் பிரியங்காவை நெருப்பு ஆபத்தானது எனவும் நோஸ் கட் கொடுத்தார். பிக் பாஸ் வீட்டில் பிரிய்ங்கா vs ராஜூ பாய் மேலோங்கி விட்டது, இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரில் விஜய் டிவியின் சப்போர்ட் யாருக்கு என்பது கமல் எபிசோடில் தெரிந்து விடும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: