Home /News /entertainment /

Bigg Boss 5 : அபிஷேக் 2.0 வாக மாறிய பிரியங்கா... அப்ப இத்தனை நாள் அத்தனையும் நடிப்பா?

Bigg Boss 5 : அபிஷேக் 2.0 வாக மாறிய பிரியங்கா... அப்ப இத்தனை நாள் அத்தனையும் நடிப்பா?

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 17 review : அக்‌ஷராவை ஜாடை மாடையாக பேசி சண்டைக்கு இழுத்தார் பிரியங்கா

  பஞ்சந்திரம் டாஸ்க் மூலம் அருங்காட்சியமாக மாறி இருக்கும் பிக் பாஸ் வீட்டில், குரூப்பிஸம் வார்த்தைக்கு மொத்த அர்த்தமும் தெரிந்து விட்டது.

  பிக் பாஸ் 5 வீட்டில் 16 நாள் தொடங்கிய பஞ்சந்திரம் டாஸ்க்கு நேரம் காலம் இல்லை என்பதால் இரவு முழுவதும் டாஸ்க் தொடர்ந்தது. இரவு 2.30 மணியளவில் கார்டன் ஏரியாவில் இருந்த காயினை அபிசேஷ் திருட முயற்சி செய்தார். இசை உடனே சத்தம் போட, உனக்காக தான் எடுக்கிறேன் என கத்தினார் அபிஷேக் ( இவரு என்ன எல்லாரையும் காப்பாற்றும் மகானா). அபியின் வார்த்தையில் மயங்கிய இசை உடனே எடுத்துக்கோன்னு சொல்ல, காயினை கொண்டு ஜெயிலில் இருக்கும் நிரூப்பிடம் கொடுத்தார் அபிஷேக். ஏற்கெனவே காயினை சாதுரியமாக எடுத்து அதை பறிக் கொடுத்த சோகத்தில் இருந்த ஐக்கி, கண்கலங்கி அழ தொடங்கினார். இசைக்கு அந்த காயினை அபிஷேக் தருவதாக சொன்ன காரணம் தான் அந்த அழுகைக்கு காரணம். உடனே இசை, நிரூப்பிடம் போய் காயினை திரும்ப கொடுத்துவிடுங்ள் நாங்கள் தனியாகவே விளையாடுகிறோம் என்றார்.

  ஆனால் நிரூப் இசையிடம் காயினை தருவதாக இல்லை, என்னிடம் கொடுத்தது அபிஷேக் தான் ,அவனை கூட்டிட்டு வா என்று சொல்ல, வீட்டுக்குள் இசை போய் அபிஷேக்கை தேடி கொண்டிருந்தார். உடனே அபிஷேக், உனக்காக தான் இசை பண்ணேன். நீ போய் வாக்குமூலம் கொடுக்குறேன்னு காட்டு கத்து கத்தினான். அதுக்குள்ள ஓவர் ஸ்மார்ட் போல் நிரூப்பிடம் இருந்து பிரியங்கா காயினை வாங்க, அதை வருண் பார்த்துவிட்டு கத்தினான். (இந்த பையன் தான்பா விளையாட்ட புரிஞ்சி ஆடுறான்.)இதுவரை 3 பேர் வருணிடம் பிடிப்பட்டு உள்ளனர். ஆனால் அவரிடம் இருக்கும் காயினை பற்றி யாருக்குமே தெரியாது.

  3.30 மணிக்கு பிக் பாஸ் இடமிருந்து ஆர்டர் வர, பிரியங்காவும், ஸ்ருதியும் ஜெயிலுக்கு போகிறார்கள். அங்கே போய் ஜெயில் வார்டன் போல் அபிஷேக்கும் உட்கார்ந்து கொண்டு புரளி பேச தொடங்கினார். ராஜூ பாற்றி அபிஷேக் பேச தொடங்கியதும், அவனை பற்றி பேசாதே என்று முற்றுப்புள்ளி வைக்கிறார் பிரியங்கா. (வீட்டில் ராஜூ பாய்க்கு இருக்கும் மவுசு இவர்கள் இருவருக்கும் பொறாமையை தருவது அப்பட்டமாக தெரிகிறது). தாமரை செல்வி கார்டன் ஏரியாவில் எடுத்த காயினை வருண் வாங்கினார். ஆனால் அபிநவ் அதை பார்த்தாக கூற, அதற்குள் கேமராவிடம் காயினை சொந்தமாக்கிவிட்டு பெட்ரூமில் மறைத்து வைக்கிறார் வருண். (வருண் சிறைக்கு செல்வாரா? மாட்டாரா? என்ற குழப்பத்திற்கு பிக் பாஸ் பதில் சொல்லவில்லை)

  திடீரென்று லிவிங் ஏரியாவில் இருந்த காயினை எடுத்துக் கொண்ட தலைவர் சிபி, என்னிடம் இந்த காயின் இருக்கட்டும் அதை உங்களுக்கு உரிமையாக்கி கொள்ளுங்கள் என களத்தில் இறங்கினார். ஆனால் இதுவரை எடுத்தவர்கள் எல்லோருமே உங்களுக்காக உங்களுக்காக என்றே சொன்னார்கள். சிபி ஒருபடி மேலே போய், தாமரை செல்வியை தனியாக அழைத்து அந்த காயினை அவரிடம் கொடுத்து கேமராவில் பதிவு செய்ய வைத்தார். அதே போல் பாத்ரூமில் இசைக்கும் காயினை கொடுத்து உரிமையாக்கினார். (தளபதி தளபதி நீதான் என்றும் தளபதி). வீட்டையே அலர வைக்கும் வகையில் ஒலித்த அலாரம் நிரூப்புக்கு சிறை தண்டனை முடிந்ததை அறிவித்தது. சும்மா சொல்லக்கூடாது விடியற்காலை 5.30 மணி வரைக்கும் தூங்காமல் விளையாடினர்கள் ஹவுஸ்மேட்ஸ். பெட்ரூமில் அக்‌ஷராவிடம் என்னை பற்றி பின்னாடி பேசாதே, மூஞ்சிக்கு நேரா பேசு என்று வார்னிங் கொடுத்தார் பாவனி. தலையும் புரியல வாலும் புரியல் என்பது போல் அக்‌ஷரா, ரியாக்ட் செய்ய, பாவனி ஜாடை மாடையாக அக்‌ஷராவை வறுத்து எடுத்தார்.

  பிரியங்காவிடம் உங்கள் பெயர் கெட்டுபோவதாக இமான் அண்ணாச்சி சொல்ல, நீங்க் எங்க டீம்ன்னு நெனச்சி உங்களுக்கு சப்போர்ட் செய்தோம் நீங்க வேறு டீம் என்றார் பிரியங்கா. நான் நடுநிலையானவன் என்று மீண்டும் கேமிராவில் பதிவு செய்தார் இமான் அண்ணாச்சி. (வர வர பிரியங்கா போற போக்கு சரியில்லை என்பதை அவரின் பதிலில்அண்ணாச்சிக்கு தெரிந்தது. எங்களுக்கும் தான்) விடியற்காலை முழுவதும் ஹவுஸ்மேட்ஸ் கேம் விளையாடியதால் 17 ஆம் நாள் காலை 9.30 மணிக்கு பாடல் ஒலித்தது. வாழ்க்கை தத்துவ பாடலான ‘எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா’பாடல் ஒலிக்கப்பட்டது. அக்‌ஷரா, இரவு பாவனி கொடுத்த பூசையை பற்றி வருண், ராஜூவிடம் ஷேர் செய்தார். (ராஜூ பாய் நீ யாரிகிட்டனா பேசுனீயான்னு ஒருமுறை கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டார்)

  குரூப்பிஸம் கேங்குக்கு 5 நாணயங்களும் யாரிடம் இருக்கிறது என தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம். வருணிடம் கூப்பிட்டு போட்டு வாங்கினர். எதிர்பார்த்தது நடக்கவில்லை. அக்‌ஷராவிடம் ஒரு காயின் இருப்பதாக உறுதியாக நம்பினர். ஐக்கியிடம் இருந்து அக்‌ஷரா சுட்டதை, பாவனி அவரிடம் இருந்து சுட்டுவிட்டார் என்பது அவர்களுக்கு தெரியாது. ஜெயிலில் இருந்த ஸ்ருதியிடம் இருந்த காயினை பிரியங்கா நைட்டே எடுத்து விட்டார்.அந்த காயினை இசை தான் ஸ்ருதிக்கு கொடுத்து இருந்தார். அதனால் நிரூப்பிடம் இசை காயின் பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். நிரூப் இல்லையென்று சத்தியம் செய்ய, பிரியங்கா யாருக்கும் தெரியாமல் சந்தோஷத்தில் குத்து டான்ஸ் போட்டார். பிரியங்காவுக்கு அக்‌ஷ்ரா மீது பயங்கர காண்டா, இல்லை அவர் சின்ன பொண்ணுக்கு தருவேன்னு சொன்ன காரணமான்னு தெரியவில்லை. அவருக்கு அக்‌ஷரா காயினை பறிப்பதிலே அதிக கவனம் இருந்தது. இதனால் அபிஷேக்குடன் பிளான் செய்து, சின்ன பொண்ணுவை சோதனை போட பாத்ரூமூக்கு அழைத்து சென்றார். கூடவே, அக்‌ஷராவும் சென்றார். ஆனால் சின்ன பொண்ணுவிடம் காயின் இல்லை.

  சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.. அழகான தமிழ் முகம்! யார் இந்த பிக் பாஸ் ஸ்ருதி?

  ”ஒரு பொண்ணு எப்படி இவ்வளவு நேரல் மறைத்து வைக்கலாம். என்னால் ஏத்துக்க முடியாது. யார் ஜெயிச்சாலும் பரவாயில்லை. அக்‌ஷரா காயின் வேண்டும் என்றார் பிரியங்கா. (அப்ப பிரியங்கா நீங்க பாரு? அபிஷேக் 2.0 வெர்ஷனா?) காயின் கிடைக்காததால் இருவரின்கவனமும் ராஜூ பாய் பக்கம் போனது. கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் சம்மந்தமே இல்லாமல் ராஜூ பாயை மூளை சலவை செய்தனர் அபியும்- பிரியங்காவும். அவர்களின் தேவை அக்‌ஷரா காயின். ஆனால் அக்‌ஷரா காயின் எங்க இருக்குதுன்னு கூட ராஜூ பாய்க்கு தெரியாது. கேமரா ஃபோக்கஸ் செய்வதை நோட் பண்ண அபி, உடனே வசனங்களை அள்ளி தெளித்தார். (யோக்கியனுக்கு கோபம் வரும், உண்மைக்கு குரல் கொடுத்தோம். நல்லவங்களை சேவ் செய்தோம்) அபிஷேக்கோட மைக்கை மியூட் போட்டால் ரொம்ப நல்லா இருக்கும். சைடு கேப்பில் உன்னையும் அக்‌ஷராவையும் 5 நிமிடத்தில் பிரித்துவிடுவென் என்றார் அபிஷேக். இவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு அந்த காயின் வேண்டும் என்றார் ராஜூ. உடனே சிபி உள்ளே வந்து ஐடியா கொடுக்க, யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சைலண்ட் மோடில் போனார்.

  கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்! யாரு சாமி நீங்கெல்லாம்?

  உள்ளே வந்த அக்‌ஷராவை ஜாடை மாடையாக பேசி சண்டைக்கு இழுத்தார் பிரியங்கா. இங்கு தான் இத்தனை நாளாக வெளியில் வராதா பிரியங்கா முகம் தெரிய தொடங்கியது. அக்‌ஷரா மீது இருந்த மொத்த கோபத்தையும் காட்டினார். மதுமிதாவிடம் ரூல்ஸ் மீறி அக்‌ஷரா எழுதி காட்டியது, ராஜூ பாயுடன் சேர்ந்து பொய் சொன்னது என மொத்ததையும் கேமிராவில் பதிவு செய்தார். இன்னொரு பக்கம் அபிநவ், அக்‌ஷரா மற்றும் வருண் பற்றி தன்னிடம் பேசியதை பாவனி போட்டு உடைத்தார். ஆனால் அபிநவ் அதை ஒத்துக் கொள்ளவில்லை. பாவனிக்கு மூக்கு சிவக்க, அபிநவ்வை ஒருகாமையில் பேச தொடங்கினார். கேமிராவில் ரெக்கார்டு இருப்பதாகவும் பாவனி அடித்து சொல்ல, அபிநவ்வின் முகம் மாறுகிறது. (அப்ப இந்த வாரம் ஒரு குறும்படத்தை எதிர்பார்க்கலாம் போல)

  பிக் பாஸ் வீட்டில் கொளுத்திப் போடுவது அபிஷேக் தான் - இமான் அண்ணாச்சி!

  புயல் அடித்தது போல பிரியங்கா கத்தி முடிக்க, அக்‌ஷரா வழக்கம் போல் அழ தொடங்கினார். முதலில் சின்னபொண்ணுவும் தாமரையை அவரை சமாதானம் செய்தனர். அடுத்தது ராஜூ பாய் உள்ளே வந்து தப்பா பண்ணா அழு, தப்பு பண்ணலன்னா அழாதே என்று ஆறுதல் சொன்னார். நிரூப் பாவனி மற்றும் தாமரையிடம் இருந்து 2 காயின்களை வாங்கி அதிக காயின்களை உரிமைப்படுத்தியவர் என்ற பட்டத்தை பிரியங்கா உதவியுடன் பெற முயற்சி செய்தார். இடத்தை விட்டு நிரூப் நகர்ந்த உடன், தாமரையிடம் என்ன நடந்தது என்பதை இமான் அண்ணாச்சியும் ராஜூ பாயும் தெரிந்து கொண்டனர். இதுவரை ஒரு காயினை கூட சொந்தமமாக்கி கொள்ளாதவர்கள் இவர்கள் இரண்டு பேர் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

  அடுத்த செய்தி