Home /News /entertainment /

Bigg Boss 5 : கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்! யாரு சாமி நீங்கெல்லாம்?

Bigg Boss 5 : கேம் விளையாடி பிக் பாஸையே தூங்க வைத்த ஹவுஸ்மேட்ஸ்! யாரு சாமி நீங்கெல்லாம்?

Bigg Boss Tamil 5 Day 16 review : தாமரையை காப்பாற்றினால் மக்கள் மனதை வென்று விடலாம் என்பதே அந்த அரசியல்.

Bigg Boss Tamil 5 Day 16 review : தாமரையை காப்பாற்றினால் மக்கள் மனதை வென்று விடலாம் என்பதே அந்த அரசியல்.

Bigg Boss Tamil 5 Day 16 review : தாமரையை காப்பாற்றினால் மக்கள் மனதை வென்று விடலாம் என்பதே அந்த அரசியல்.

  3 பக்கத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி விடிய விடிய யோசிச்சு பஞ்சதந்திரம் டாஸ்க் கொடுத்த பிக் பாஸை, கேம் விளையாடி தூங்க வைத்துவிட்டனர் பிக் பாஸ் 5 போட்டியாளர்கள்.

  இந்த பையனுக்கு தூக்கமே வராதா? என்ற கேள்வி அபிஷேக் ராஜாவை பார்த்தால் எழாமல் இல்லை. அதிகாலை 3 மணிக்கு கூட ஃபுல் என்ர்ஜியுடன் பிரியங்கா மற்றும் நிரூப்புடன் பேசிக் கொண்டிருந்தார். தாமரை செல்வி, இசை, பாவனி இவர்களை பற்றி தான் பிரியங்கா கொளுத்தி போட்டு கொண்டிருந்தார். அதுவும் ஸ்மோகிங் ஏரியாவில் அமர்தபடியே. பிக் பாஸ் வீட்டில் 16 ஆம் நாள் ’ஏய் சின்ன மச்சான்”  பாடலுடன் தொடங்கியது. தாமரையை பிடித்துக் கொண்டு ஆடினார் ராஜூ. ராஜூ பாய் ஏதோ ஒரு நடிகரை போல் பாடி லாங்வேஜ் கொடுக்க ட்ரை பண்ணினார் ஆனால் அதற்குள் பாடல் முடிந்துவிட்டது.

  கார்டன் ஏரியாவில் அண்ணாச்சி, சின்ன பொண்ணு, அபிநவ், அக்‌ஷ்ரா சங்க மாநாடு ஒன்றை போட்டனர். அதில் சின்ன பொண்ணு வழக்கம் போல் மூத்த கலைஞர் நான், இசை என்னை மதிக்கவில்லை என பேசிக் கொண்டிருந்தார். அப்போது அண்ணாச்சி நீங்களாகவே விளையாடுங்க, ஹவுஸ்மேட்ஸ்க்கு உங்களை பிடிக்கலனா பரவாயில்லை மக்களுக்கு பிடிக்கும் என்றார். (இதுதான் அண்ணாச்சி கேம் ஸ்ட்ராடெஜி போல) நெக்ஸ்ட் நேராக பிரியங்காவிடம் சென்றவர், இலைமறை காயாக ஒரு விஷயத்தை காதில் போட்டார். அதாவது, பிரியங்கா பெயர் வெளியில் மோசமாக மாறி கொண்டிருப்பதாக சேர்ந்திருக்கும் கூட்டம் சரியில்லை என்ற விஷ்யத்தை தெரியப்படுத்தினார்.

  அடுத்து, காலையிலேயே அண்ணாச்சி வெறித்தனம் வெறித்தனம் என்ற பெயரில் நவசரங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருந்தார். அபிஷேக்கும், நிரூப்பும் அந்த ஸ்கிரிப்டை வழிநடத்த, சிபி, அபிநவ், ஐக்கி ஆகியோர் கைத்தட்டி ரசித்து கொண்டிருந்தனர். (இப்படி ஒரு இடத்தில் அபிஷேக் மிஸ்ஸிங்). லிவிங் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வந்து அமர, இமான் அண்ணாச்சி பஞ்சதந்திரம் டாஸ்க் பற்றிய விதிமுறைகளை படித்தார். நேரம் காலம் இல்லாமல் நடைபெறும் இந்த டாஸ்கில் பஞ்ச பூதங்களை குறிக்கும் நிலம், நீர், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய 5 காயின்களை ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் தெரியாமல் திருடி கேமிராவில் காட்ட வேண்டும். ஒருவேளை காயினை திருடும் போது பிடிப்பட்டல் பாதாள சிறைக்கு செல்ல வேண்டும். இந்த காயினை சேவ் செய்பவர்கள் எலெக்‌ஷன் நாமினேஷனில் இருந்து ஒருவரை விடுவிக்கலாம். ஒருவேளை அவர்கள் பெயர் நாமினேஷனில் இருந்தால் அவரையே சேவ் செய்து கொள்ளலாம். சுவாரசியமான இப்படி ஒரு விளையாட்டை குரூப் சேர்ந்து கொண்டு மிகவும் மோசமாக ஆடினார்கள் பிக் பாஸ் 16 போட்டியாளர்கள்.

  பிக் பாஸே கடுப்பாகும் அளவுக்கு இருந்தது ஹவுஸ்மேட்ஸின் கேம் ஸ்ட்ராடெஜி. காயினை திருடும் போது பார்த்துவிட்டால் கத்த வேண்டும் என்பது தான் ரூல். ஆனால் இவர்கள் குழு குழுவாக பேசி வைத்துக் கொண்டு ஒருவரை திருட சொல்லி அதை மற்றவர்கள் பார்க்காதவாறு மறைக்கின்றனர். முதன்முதலாக இமான் அண்ணாச்சி, ஐக்கி, இசை மூவரும் சேர்ந்து பேசி முதல் காயினை திருடுகின்றனர். ஆனால் அந்த காயினை அக்‌ஷ்ரா அவர்களிடம் இருந்து திருடி விடுகிறார். தாமரை செல்வியை காப்பாற்ற போவதாக சொல்லி அபிஷேக் , சின்ன பொண்ணு, பிரியங்கா, தாமரை செல்வி உதவி மூலம் அடுத்த காயினை திருடுகிறார். மதுமிதா யாருக்கும் தெரியாமல் எடுத்த மூன்றாவது காயினுக்கு இசை மற்றும் பிரியங்கா போட்டி போட்டு கொள்கிறார்கள். மதுமிதா பிரியங்காவுக்கே அந்த காயினை தருகிறார். அதை அவர் பெட்ரூமில் மறைத்து வைக்கிறார்.

  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிடா வெட்ட ட்ரை பண்ணும் அபிஷேக், வருணிடம் போய் அக்‌ஷராவை காப்பாற்று என சொல்ல, கடுப்பான வருண் நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது என பல்பு கொடுக்கிறார். போற ஏரியாவில் எல்லாம் இப்படி எண்ட் கார்டு போட்டா எப்படி? என்பது போல் முகத்தை வைத்து கொண்டு சமரசம் செய்ய முயற்சித்த அபியை, அசிங்கமா திட்டிடுவேன் இங்கிருந்து போ என்றார் அக்‌ஷ்ரா.

  வருண் ஒரு காயினை திருட, பாவனியும் யாருக்கும் தெரியாமல் காயினை திருடுகிறார். விளையாட்டை நன்கு புரிந்து கொண்ட பாவனி சாதுரியமாக ஆடி அக்‌ஷரா காயினையும் திருடுகிறார். இப்போது பாவனியிடம் 2 காயின்கள் இருக்க, அதில் அபிநவ் ஒரு காயினை கேட்கிறார். இரண்டு காயினையும் கார்டன் ஏரியாவில் மறைத்து வைக்கும்படி அபிநவ்விடம் பாவனி கூற, அதை அபிநவ் மறைத்து வைத்துவிட்டு வீட்டுகுள் செல்கிறார். அந்த கேப்பில் நிரூப் அந்த காயினை திருட, அபிநவ்விடம் மாட்டிக் கொள்கிறார். இதனால் விதிமுறை படி பாதாள சிறைக்குள் முதல் நபராக நிரூப் செல்கிறார்.

  என் மூஞ்சு டிவி-ல வரணும்ன்னா என்ன வேணும்ன்னாலும் செய்வேன்’ - அபிஷேக்

  பாவனியின் 2 காயின்கள் மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படுகிறது வீட்டையே நோட்டம் இட்ட பாவனிக்கு மீண்டும் ஒரு காயின் கிடைக்கிறது. யாரோ ஒரு இடத்தில் மறைத்து வைத்திருக்க லக்கி கேர்ல் பாவனிக்கு அது கிடைக்கிறது. இன்னொரு காயினை ஸ்ருதியுடன் சேர்ந்து பாவனி திருட முயற்சி செய்கிறார். ஆனால் வருண் அதை பார்த்து விட்டதாக கூறி வாதாடுகிறார்.பாவனி மற்றும் ஸ்ருதி அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.

  அடி வாங்காத ஏரியாவே இல்லை போல.. ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!

  இதில் கவனிக்க வேண்டிய ஒன்று, இதுவரை 3 காயினை திருடியவர்கள் தாமரை செல்வியை தான் காப்பாற்ற போவதாக கூறுகின்றனர். அபிஷேக், பாவனி மற்றும் பிரியங்கா. இது இமான் அண்ணாச்சியின் காதுக்கு போக நேராக பிரியங்காவிடம் ஏன் எல்லோரும் தாமரை செல்விக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் சின்ன பொண்ணுவை ஏன் யாரும் காப்பாற்ற முன் வரவில்லை என்று கேட்க, நான் நாமினேட் செய்ததே சின்ன பொண்ணுவை தான் என்றார் பிரியங்கா. கார்டன் ஏரியாவில் ராஜூ பாய், தாமரையை காப்பாற்றுவதாக கூறும் செயலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை விளக்கி கொண்டிருந்தார். தாமரையை காப்பாற்றினால் மக்கள் மனதில் வென்று விடலாம் என்பதே அந்த அரசியல்.

  மீதம் ஒரு காயின் கார்டன் எரியாவில் இருக்கும் கண்ணாடி தொட்டிக்குள் இருக்க, அதற்கு 4 பேர் கொண்ட குழு பாதுகாவலராக இருக்கின்றனர். இந்த டாஸ்க் இன்றும் தொடரும் போல. ஆனால் சுவாரசியமாக இருக்குமா? என்றால் சந்தேகம் தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி