Home /News /entertainment /

Bigg Boss 5 : அடி வாங்காத ஏரியாவே இல்லை போல.. ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!

Bigg Boss 5 : அடி வாங்காத ஏரியாவே இல்லை போல.. ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பை சம்பாதிக்கும் அபிஷேக்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 15 review : ஸ்கோர் செய்ய நினைத்த ஓவர் டாக் அபி, சிபியை தலைவராக்க வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸை ட்யூன் செய்தான்.

  பிக் பாஸ் சீசன் 5ல் தனது ஓவர் பேச்சால் தொடர்ந்து எல்லா ஹவுஸ்மேட்ஸின் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் அபிஷேக் ராஜா. இந்த வார நாமினேஷன் லிஸ்டிலும் தலைவன் பேரு இருக்கு.

  15 ஆவது நாள் காலை ‘சென்னை சிட்டி கேங்க் ஸ்டார்’ பாடல் ஒலிக்கப்பட்டது. வழக்கத்தை விட பாவனி இந்த பாடலுக்கு ரியாக்ட் செய்தார். பிரியங்கா சம்பந்தமே இல்லாமல் வடிவேல் ஸ்டெப்பை போட்டுக் கொண்டிருந்தார். (குரூப்பிஸம் ராணி கொளுத்தி போடும் வேலையை எப்ப தொடங்குவாங்கன்னு தெரியல) . இமான் அண்ணாச்சி போகும் இடமெல்லாம் பஞ்சாயத்து என்பது போல ஃபிரிட்ஜில் இருந்த சாதம் கெட்டு போய் விட்டதாக ஸ்ருதி, மதுமிதாவுடன் வாக்குவாதம் செய்கிறார். ஆரம்பத்தில் சாதம் நல்லா இருக்குன்னு சொன்ன ஸ்ருதி, எதுக்கு வீண் வம்பு என நினைத்துவிட்டார் போல் இவ்வளவு சாதத்தை வீண் செய்ய முடியாது, வடுகம் போடலாம் என ஐடியா கொடுத்தார். உடனே தாமரை செல்வி, வடுகம் உரிமையை ஸ்ருதியிடம் இருந்து வாங்க அவரின் முகமே கோபத்திற்கு உள்ளானது.

  பாவனிக்கு மெமரி பவர் அதிகம் அதனால் அபிஷேக் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் பாய்ண்ட் பாய்ண்டாக எடுத்து வைத்தார். ஆனால் சினிமா பையனுக்கு ஈஸியா காலில் விழுவது வழக்கம் போல் பாவனியை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சித்தான். ஆனால் பாவனி அதை ஏற்றுகொள்ளவில்லை என்பது அவரின் செயலில் தெரிந்தது. லிவிங் ஏரியாவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வந்து அமர, பிக் பாஸ் முக்கியமான அறிவிப்பை தந்தார். ’கதை சொல்லட்டுமா டாஸ்’கில் விதிமுறையை பின்பற்றியவர்கள், அலாரம் அடித்த உடனே ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு வந்தவர்கள் அடிப்படையில் 4 பேரை தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுத்தார். பிக் பாஸ் லிஸ்டில் இருந்தவர்கள் இசைவாணி, சிபி, பாவனி, ராஜூ. இவர்களுடன் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஜொலித்தவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான் அண்ணாச்சியும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தலைவர் போட்டிக்கான விதிமுறைகளை  தமிழ் கவிஞர் ஐக்கி பெர்ரி வாசித்தார்.

  பெல் அடித்த உடனே, கார்டன் ஏரியாவில் போட்டி தொடங்கியது. அதாவது 5 பேரையும் ஹவுஸ்மேட்ஸ் ஏதாவது உணர்ச்சியில் ரியாக்ட் செய்ய வைக்க வேண்டும். அது சிரிப்பு, அழுகை, கோபம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போன சீசனில் அர்ச்சனா - நிஷாவுக்கு இடையில் மிகப் பெரிய நாடகமே இந்த போட்டியில் நடைப்பெற்றது மறக்க முடியுமா என்ன? போட்டி தொடங்கியது. அபிஷேக் எல்லாரையும் அவரே அவுட் செய்து விடுவது போலவே பில்டப் காட்டினார். ஆனால் தாமரை செல்வி அசால்ட்டாக இமான் அண்ணாச்சியை சிரிக்க வைத்தார். முதல் நபராக போட்டியில் இருந்து விலகினார் அண்ணாச்சி. அடுத்தது சிபியை சிரிக்க வைக்க, பிரியங்கா க்ரஷ் இருப்பதாக கூறினார். சின்ன பசங்களுடன் சேர்ந்து சின்ன பொண்ணுவும் ஏதோ முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் டைம் முடிந்தது. அடுத்தது பாவனியிடம் சென்றனர். அபிஷேக்ம், ஐதராபாத்தில் இருக்கும் பாவனி வீடு வரை போனார். ஆனால் பாவனி கடைசி வரை கதவை திறக்கவே இல்லை. அசிங்கப்பட்டு ரிட்டன் ஆனார். சும்மாவே ராஜூ பாய் பயங்கர சின்சியர். இதுல டாக்ஸ்ன்னு வந்ததும் கஞ்சி போட்ட டிரெஸ் போல விரப்பான நின்னார். ராஜூவை சிரிக்க வைக்க அபியும் தடி மாடு நிரூப்பும் (தடி மாடு என்ற பெயரை நிரூப்புக்கு வைத்தவர் மதுமிதா) பெண்கள் போல் ஆடை போட்டுக் கொண்டுவந்து சிரிக்க வைக்க ட்ரை செய்தனர். நோ யூஸ். கடைசியாக இசையிடம் சென்றனர். இசை ,கதை சொல்லட்டுமா டாஸ்கில் சொன்ன தனது குடும்ப கதையை எல்லோரும் ரிபிட் செய்ய திடீரென்று பொங்கி வெடித்தார் இமான் அண்ணாச்சி. (புரமோவில் காட்டிய கண்டெண்ட்) ஆனால் அண்ணாச்சியின் பேச்சு அனைத்தும் நடிப்பே. போட்டியாளர்களை ரியாக்ட் செய்ய வைக்க, சண்டை போடுவது போல் நடித்தனர். ஆனால் யாருமே அதற்கும் ரியாக்ட் செய்யவில்லை.

  தண்ணீர் குடித்த இசையை அபிநவ் அசால்ட்டாக பயமுறுத்தி போட்டியில் இருந்து தூக்கினார். அடுத்தது டை பிரேக் சுற்று வந்தது. இதில் யார் தலைவராக வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸே தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது,. மாலையை போட்டு தலைவரை தேர்ந்தெடுக்க சொன்னார் பிக் பாஸ். உடனே ஸ்கோர் செய்ய நினைத்த ஓவர் டாக் அபி, சிபியை தலைவராக்க வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸை ட்யூன் செய்தான். அபியை கமலிடம் இருந்து காப்பாற்றுவதாக பிரியங்கா ஸ்மார்ட்டாக காய் நகர்த்தினார். முதலில் பாவனி மற்றும் ராஜூக்கு சமமான மாலைகள் அளிக்கப்பட்டனர். பஸர் அடிப்பதற்கு முடிவை மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டது. ராஜூ பாயிடம் இருந்த மாலைகள் சிபி கழுத்துக்கு போக, போட்டியில் இருந்து விலகப்பட்ட ராஜு பாய் , தன்னுடைய மாலையை சிபிக்கு போட்டு வீட்டு தலைவராக்கினார். கடும் போட்டி தந்த பாவனிக்கும் வாழ்த்துக்கள் பகிரப்பட்டனர்.

  என் அன்புக்குரிய தல... பிரசன்னாவை நெகிழ வைத்த அஜித்!

  புதிய தலைவர், கிச்சன், பாத்ரூம், கிளிங், சமையலுக்கான குழுவை தேர்ந்தெடுத்தார். சந்தோஷமான விஷயம் முடிந்த உடனே எலெக்‌ஷன் புராஸஸ் தொடங்கியது. சிபி தலைவர் என்பதால் அவரின் பெயரை கூற முடியாது. 16 போட்டியாளர்களும் 2 பேர்களை நாமினேட் செய்தனர். போன முறை எவிக்‌ஷனுக்கு வராத பாவனியின் பெயர் இந்த முறை லிஸ்டில் இடம் பெற்றது. பியங்காவுக்கு ஆப்பு ரெடி ஆகியது. கேட்கவே வேண்டாம் அபிஷேக் பெயர், அபிநவ் பெயரும் வந்தது. ஐக்கி பெர்ரி நடிப்பதாக கூறி அவரின் நெருங்கிய தோழிகளான மது, ஸ்ருதி ஓட்டு போட்டனர். கடைசியில் இசை, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, பாவனி, அபிஷேக், அபிநவ், சின்ன பொண்ணு ஆகியோர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். எலெக்‌ஷன் புராஸஸ் முடிந்த உடனே 4 பேர் குழு, நிரூப், பிரியங்கா, அபிஷேக், ராஜூ யார் யாரை நாமினேட் செய்தார்கள் என ஷேர் செய்தனர். இதை தலைமை ஏற்று நடத்தியவர் அபி தான். ஆனால் ராஜூ பாய் சொல்ல முடியாது என்று அடுத்து அபிஷேக்கு நோஸ்கட் கொடுத்தார்.

  கார்டன் ஏரியாவில் இருந்த பாவனியிடம் உங்க டீம் வொர்ஸ்ட். சரியான நேரத்தில் சாப்பாடு தரவில்லை என்றார் அண்ணாச்சி. இதனால் பாவனி முகம் மாறி வழக்கம் போல் கண்கலங்கி கோபித்து கொண்டார். இதனால் அண்ணாசிக்கு சங்கடமாக போனது. அதே போல் ராஜு பாயுடன் பாவனி பேசி சமையல் பிரச்சனை பற்றி விளக்கினார். மொழி பிரச்சனையால் பாவனிக்கு ராஜூ பேசியது தவறாக புரிய அங்கையும் பாவனி அவுட். அபிஷேக்கிடம் மோசமான பெண்கள் பெயரை பிரியங்கா பட்டியலிட்டார். அதில் இருந்தவர்கள் சின்ன பொண்ணு, பாவனி, இசை. இந்த பக்கம் பெட் ரூமில், சிபியை தலைவராக தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி என்று வருணிடம் பாவனி பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிபிக்காக, அபி பேசியதை வருண் பாவனியிடம் ஒப்பிக்க மீண்டும் அபிஷேக் மீது காண்டாகினார் பாவனி. ஆக மொத்தத்தில் அக்கா அக்கான்னு சொன்ன பாவனியும் இப்ப அபி பக்கம் இல்லை, அம்மா அம்மான்னு சொன்ன சின்ன பொண்ணும் அபிக்குஅம்மாவா இனி இருக்க போவதில்லை.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Bigg Boss Tamil 5

  அடுத்த செய்தி