• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக் பாஸ் 5 : அப்பாவில் தொடங்கி அப்துல்கலாம் வரை சென்ற அபிஷேக் கதை!

பிக் பாஸ் 5 : அப்பாவில் தொடங்கி அப்துல்கலாம் வரை சென்ற அபிஷேக் கதை!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 11 Review : சிபி கதை சொன்ன போது அபிசேஷ் அதற்கு டிஸ்லைக் கொடுத்து, பொறாமை காரணமாக இந்த டிஸ்லைக்கை கொடுப்பதாக குறிப்பிட்டார்.

 • Share this:
  பிக் பாஸ் வீட்டில் நடைப்பெற்று வரும் ’ஒரு கதை சொல்லட்டுமா’ டாஸ்க் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் பொறுமையை சோதித்து பார்க்கிறது.

  காலை 7 மணிக்கே இமான் அண்ணாச்சி பயங்கரமாக வொர்க் அவுட் செய்து கொண்டிருந்தார். அவருடைய ட்ரைனர் ஐக்கி பெர்ரி. பின்பு இரண்டு பேரும் strategy பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். strategy என்றால் என்ன என்று அண்ணாச்சி ஐக்கியிடம் கேட்க அதற்கு அவர் விளக்கம் அளித்தார். 8 மணிக்கு ரவுடி பேபி பாடல் ஒலித்தது. வழக்கத்தை விட போட்டியாளர்கள் கொஞ்சம் நல்லாவே டான்ஸ் ஆடினார்கள். ஐக்கி பெர்ரி சும்மா இறங்கி குத்தினார். பயங்கர எனர்ஜிட்டிக் கேர்ள். காலையிலேயே இசைவாணியுடன் வசைப்பாட தொடங்கினார் சினிமா பையன் அபிஷேக். இசையிடம் ஏதாவது கண்டெண்ட் கிடைக்கும் இதை வச்சி இன்னிக்கு நாள ஓட்டிடலாம் என நினைத்தவருக்கு ஏமாற்றமே மிச்சம். இரண்டு பேரும் என்ன பேசுகிறார்கள் என்பதை தொலைநோக்கு பார்வையுடன் அக்‌ஷரா நோட் பண்ணிக் கொண்டிருந்தார். ராஜூ பாயுடன் பேசிக் கொண்டிருந்த தாமரை செல்வியை பிக் பாஸ் அழைத்தார்.

  பயத்துடன் பரபரப்பாக சென்ற தாமரையை தலைவி மாறி நடந்து கொள்ள அட்வைஸ் செய்தார். விதிமுறைகளை ஹவுஸ்மேட்ஸ் சரியாக கடைப்பிடிப்பது இல்லை எனவும் தேவைப்பட்டால் நீங்களே புது ரூல்ஸ் போட்டுக் கொள்ளலாம் என்றும் அதிகாரம் தந்தார். (தாமரை சொன்ன எல்லாரும் கேட்பாங்கன்னு நினைக்கிறீங்களா பாஸூ) வெளியே வந்த தாமரை பிக் பாஸ் சொன்னதை ஒப்பித்தார். சைடு கேப்பில் தனக்கு மாரியாதை தர வேண்டும் என்ற பிட்டையும் போட்டார். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. திரும்பவும் கதை சொல்லட்டுமா டாஸ்க் தொடங்கியது சினிமா பையன் அபிஷேக் கதை சொல்ல தொடங்கினார். அப்பா பற்றி பேச தொடங்கியவர் அவரின் பாசம், அரவணைப்பு, உதவி, கம்பீரம் என படத்துக்கு ரிவியூ கொடுப்பது போலவே கதையை இண்டர்வல் வரை கொண்டு போனார். நடுவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமும் வந்து போனார். அப்துல்கலாம் அவரின் பெர்சன்ல் மொபையிலிருந்து அபிக்கு மேசேஜ் அனுப்பினாராம். இதுல கேட்கும் போது உண்மையா உருட்டான்னு கூட தெரியல. அப்படி இப்படி யூடெர்ன் போட்டு நான் மீண்டும் வருவேன் டான்னு கதையை முடித்தார். இதில் நோட் பண்ண வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. (சிபி கதை சொன்ன போது அபிசேஷ் அதற்கு டிஸ்லைக் கொடுத்து, பொறாமை காரணமாக இந்த டிஸ்லைக்கை கொடுப்பதாக குறிப்பிட்டார். அதாவது உனக்கு கிடைக்க அப்பா போல் எனக்கு கிடைக்கவில்லை என்றார்) அப்படியென்றால் இப்போது அப்பா தான் எனக்கு ஹீரோ என்கிறார். எது உண்மை என்றே புரிந்து கொள்ள முடியவில்லை. அபியின் கதையை பற்றி அண்ணாச்சியும் ராஜூ பாயும் கிச்சன் ஏரியாவில் டிஸ்கஸ் செய்தனர்.

  வழக்கம் போல் ஹவுஸ்மேட்ஸ் லைக், டிஸ்லைக் கொடுக்க தொடங்கினர். பிரியங்கா கண்ணீருடன் அபியை கட்டியணைத்தார். மழை பெய்ய தொடங்கியது, பாவனியும் இமான் அண்ணாச்சியும் கார்டன் ஏரியாவில் பேசி கொண்டிருந்தனர். பாவனி தனது கணவரை நினைத்து மீண்டும் கண்ணீர் சிந்தினார். மறக்க முடியவில்லை என்றும் தனிமையில் இருப்பது போல் உணர்வதாக கதறினார். கதை சொல்லட்டுமா டாஸ்கில் பாதி தான் சொல்லியதாகவும் இன்னும் சொல்ல நிறைய இருப்பதாக குறிப்பிட்டார். அவரை அண்ணாச்சி தேற்றினார். அடுத்த சில நிமிடங்களில் சிரிக்க தொடங்கிவிட்டார். சீரியல் போலவே இருக்கிறது இந்த காட்சிகள்.

  நெக்ஸ்ட் தாமரை செல்வி தனது கதை சொல்ல ஆரம்பித்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தங்கைகளை பார்த்து கொண்டு வீட்டில் இருந்தவர். அம்மாவின் கஷ்டத்தை போக்க மாமாவின் உதவியால் நாடகத்தில் சேர்ந்தாராம். ஆரம்பத்தில் நாடகம் என்றாலே என்னன்னு தெரியாதவர் படி படியாக அதை கற்றுக் கொண்டு ஜொலிக்க தொடங்கி இருக்கிறார். சிறுவயதிலே முதல் திருமணம் , ஒரு ஆண் குழந்தை குடிகார கணவனிடம் அடி வாங்கி வாழ்ந்தவர் ஒரு கட்டத்தில் குழந்தையுடன் வெளியேறுகிறார். பண்ணி மேய்க்கும் வேலையை பார்த்து இருக்கிறார். அடுத்தது 2 ஆவது திருமணம் இந்த முறை நல்ல கணவர் ஆனால் பொறுப்பில்லாதவர். நல்ல மாமியார். இந்த திருமணத்தின் மூலம் இன்னொரு ஆண் குழந்தை. நாடகத்திற்கு சென்று அதன் மூலம் வருமானம் நீட்டி சொந்த வீடும் வாங்கி இருக்கிறார். அந்த நேரத்தில் தான் முதல் கணவர், தாமரையின் மூத்த மகனை தாயிடம் இருந்து பிரிந்து இருக்கிறார். அம்மா ஏதோ தவறு செய்து விட்டதாக அந்த சிறுபிள்ளை தாமரையை வெறுத்து ஒதுக்கிவிட்டானாம். தப்பு செய்யவில்லை உனக்காக தான் இப்படி செய்தேன் என்று கதறி அழுதார். என்னுடைய வெற்றி மொத்த நாடக கலைஞரின் வெற்றி என்றார். போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்தனர். அதற்குள் அபிஷேக் ஒரு சீனை அரங்கேற்றினார். அதாவது தாமரை வெற்றி பெற்றால் அது ஒரு சரித்திரம் என்றும் நீ வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வதாக கூறினார். ஆனால் போட்டியாளர்களால் தாமரை செல்விக்கு லைக்ஸ், ஹார்ட் கொடுக்க முடியவில்லை. எல்லாமே தீர்ந்து விட்டது போல. 8 டிஸ்லைக் வாங்கினார் தாமரை. கையில் லைக், ஹார்ட் வைத்திருப்பவர்கள் மட்டும் கொடுத்தனர்.

  அடுத்தது வருண் கணேஷ் தனது கதையை தொடங்கினர். மிகவும் ஆச்சரியமாக இருந்தது அவரின் பேச்சுக்கள். தனது தாத்தா ஐசரி வேலன் நடித்து கொண்டிருக்கும் போதே இறந்தது. 7 லட்சம் கடனில் மாட்டிக் கொண்ட குடும்பத்திற்கு எம்.ஜி.ஆர் உதவியது. அதன் பின்பு அவர் இறந்துவிட்டார்.எம். ஜி. ஆர் எங்களுக்கு கடவுள் என்றார். தங்க தட்டில் வளர்ந்த பையன் நானில்லை, காசோட அருமை எனக்கு தெரியும். மொத்த குடும்பத்தையும் இந்தளவுக்கு கொண்டு வந்தது மாமா ஐசரி கணேஷ் தான். 8 வருடங்களாக போராடி தான் பப்பி மூவி செய்தேன் என்று தன்னை பற்றி அனைவருக்கும் தெரிய வைத்தார். லைக், டிஸ்லைக் பற்றி கவலையில்லை எனவும் பஞ்ச் போட்டார். 16 டிஸ்லைக் வாங்கினார். அதே காரணம் தான் யாரிடமும் லைக் ஸ்டிக்கர்கள் இல்லை.

  பிரியங்காவ பிடிக்கும்.. ஆனா அவங்க சொன்ன கதை பிடிக்கல!

  இரவு டின்னரை முடித்துவிட்டு வெசல் வாஷிங் டீ தனது பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது இசைவாணி, இமான் அண்ணாச்சியிடம் மனகசப்புகளை பேசி சரி செய்தார். இன்னும் ராஜூ பாய், நாதியா, நிரூப் கதை சொல்ல காத்துக் கொண்டிருக்கிறனர். அதிலும் டிஸ்லைக் மன்னன் ராஜூ பாய் கதைக்கு தான் மொத்த ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் வெயிட்டிங்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: