• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss 5 : பிரியங்காவ பிடிக்கும்.. ஆனா அவங்க சொன்ன கதை பிடிக்கல!

Bigg Boss 5 : பிரியங்காவ பிடிக்கும்.. ஆனா அவங்க சொன்ன கதை பிடிக்கல!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5

Bigg Boss Tamil 5 Day 10 Review : வருண் உட்பட சேர்த்து பிரியங்கா கதைக்கு 4 டிஸ்லைக்

  • Share this:
    பிக் பாஸ் வீட்டில் எல்லோருக்கும் செல்ல பிள்ளை போல் சுற்றி திரிந்த பிரியங்காவுக்கு போட்டியாளர்கள் மிகப் பெரிய சம்பவம் செய்துள்ளனர். இதற்கு பிள்ளையார் சுழி போட்டது ராஜூ பாய் தான்.

    பிக் பாஸ் இல்லத்தில் 10 வது நாள் காலை, விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் இருந்து ‘சின்னத்தாமரை’ பாடலை பிக் பாஸ் பிளே செய்தார். ஃபாஸ்ட் பீட் சாங் போட்டாலே போட்டியாளர்கள் தரைக்கு வலிக்காத மாதிரி தான் ஆடுவார்கள். இதிலும் ஸ்லோ பீட் என்றால் கேட்கவே வேண்டாம் வழக்கம் போல் சோம்பலுடன் ஆடி முடித்தனர். பிரியங்காவுக்கு தூக்கம் தெளியவில்லை போல வெளியே கார்டன் ஏரியாவில் தூங்க, நாய் குரைக்க தொடங்கியது. பிரியங்காவுக்கு ஒரே அசிங்கமா போச்சு. தலைவி தாமரை செல்வி ஸ்பாட்டுக்கு வர பிரியங்கா சாக்கு சொல்லி தப்பித்தார். கதை சொல்லட்டுமா டாஸ்கின் தொடர்ச்சி ஆக்டிவிட்டி ஏரியாவில் தொடங்கியது. அக்‌ஷரா கதை சொல்ல தொடங்கினார். ஹீரோவாக இருந்த அப்பா 8 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார், அண்ணன் தான் அப்பாவாக இப்போது இருக்கிறான். மிகவும் செல்லமாக வளர்ந்த குழந்தை நான். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து அண்ணன், அம்மாவை பெருமைப்படுற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையில் பிக் பாஸ் வந்துருக்கிறேன் என்றார்.

    பின்பு போட்டியாளர்கள் லைக்ஸ், டிஸ்லைக்ஸ் கொடுக்க தொடங்கினர். கதை சுமார் ரகம் என்பதால் பிரியங்கா, நிரூப், அபிஷேக் மூவரும் சொல்லி வைத்து போலவே டிஸ் லைக் கொடுத்தனர். அக்‌ஷரா அவர் கதை மீது அவருக்கே நம்பிக்கை இல்லாததால் ”ஓகேவா, நல்லா சொன்னனா”ன்னு பக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்தார். இதில் ராஜூ பாய் செய்கை தான் சிறப்பு. சின்ன பொண்ணு கதை சொன்ன விதம் பிடிக்கவில்லை என டிஸ்லைக் கொடுத்தவர். அக்‌ஷ்ரா கதை பிடித்து போக லைக்ஸ் கொடுத்தார். இதை நோட்ட பண்ண பிரியங்கா நேரா போய் ராஜூ பாய்யிடம் நீ பண்ணது சரியா? அக்‌ஷராவா பிடிக்கும் அந்த ஒரு காரணத்திற்காக லைக்ஸ் கொடுத்து இருக்கன்னு பச்சையா தெரியுது.உன்கிட்ட இருந்து இத எதிர்பார்க்கல” என்றார்.

    ராஜூ பாய் முகம் உடனே மாற தனது தரப்பு நியாத்தை எடுத்துரைத்தார் ஸ்கிரிப்ட் ரைட்டர். அதாவது நீதிபதி பிரியங்கா அவர்களே ,அக்‌ஷரா சொன்ன கதை எனக்கு கணெக்ட் ஆச்சி, அந்த மாதிரி வாழ்க்கை தான் நான் வாழணும் அப்படின்னு ஆசைப்பட்டேன். அதனால் அக்‌ஷ்ரா கதை எனக்கு பிடிச்சு இருக்குன்னு பதில் சொன்னார். ஆனாலும் பிரியங்காவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ராஜூ பாய்க்கும் கேமராவில் இது எப்படி பதிவாகி இருக்கும் என்ற குழப்பம் வேற. தனது மனதில் பட்டதை இமான் அண்ணாச்சியிடம் டிஸ்கஸ் செய்கிறார். குழப்பத்தில் இதுப்பற்றி அக்‌ஷராவிடமும் பேசுகிறார்.

    உங்களுக்கு லைக்ஸ் கொடுத்தது சில குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குன்னு ராஜூ பாய் ஷேர் செய்ய, ஓரமாய் போய் அழ தொடங்கினார் அக்‌ஷரா. இந்த சீசனில் அடிக்கடி தனியா போய் அழுவது அக்‌ஷரா தான். வீட்டை சுற்றி வரும் ராஜூ பாய்யை அபிஷேக் கலாய்க்க டிரை பண்ணி பல்பு வாங்குகிறார். நெக்ஸ்ட், பிரியங்கா கதை சொல்ல தொடங்கிறார். 7 வது படிக்கும் போது பிரியங்கா அப்பா இறந்து போனது , அவருக்கு யாருமே உதவ முன்வராதது, படித்தது, மீடியாவில் சேர்ந்தது தனக்கு பிடித்த வேலையை செய்வது. கடைசி வரை அம்மாவை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதே ட்ரீம் என கதையை முடித்தார். கடைசியில் அவர் சொன்னது கோல் இல்லை, லைஃப் பற்றி பிளான் செய்யவில்லை, லக்கில் எல்லாமே கிடைத்தது என பிரியங்கா பதிவு செய்தை பிடித்துக் கொண்ட ராஜூ பாய் “பிரியங்காவை பிடிக்கும் ஆனா அவர் சொன்ன கதை பிடிக்கல். எல்லோருக்கும் லக் இருக்காது, கோல் கண்டிப்பா இருக்கனும் “ அப்படி இப்படி டயலாக் பேசி டிஸ்லைக் கொடுத்தார். இதை எதிர்பார்த்தது போலவே இருந்தது பிரியங்காவின் ரியாக்‌ஷன். இதை நீ அக்‌ஷரா பற்றி கேட்டதற்காக நான் பண்ணவில்லை என்று பிரியங்காவை நம்ப வைக்க ராஜூ பாய் பட்ட பாடு இருக்கே(பாக்குற எங்களுக்கே பச்சையா தெரிஞ்சுது) , சரி ராஜூ பாய் தான் இப்படி பண்ணாரு பார்த்தா, கூடவே சுத்துரு செவ்வாழை நிரூப் டிஸ்லைக் கொடுத்தார், முதலில் லைக் கொடுத்த ஐக்கி பெர்ரி லக் எல்லோருக்கும் இருக்காது என்று காரணம் சொல்லி லைக்கை டிஸ் லைக்காக மாற்றினார். வருண் உட்பட சேர்த்து பிரியங்காவுக்கு 4 டிஸ்லைக். உடனே இமான் அண்ணாச்சி எப்பவும் பிரியங்காவுக்கு ஹார்ட் தான் என்று முடித்து வைத்தார்.

    விவாகரத்தில் முடிந்த திருமணம்.. பாவனிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! பிக் பாஸ் இசைவாணியின் சொல்லப்படாத கதை

    டைனிங் ஏரியாவில் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியங்காவை, டிஸ் லைக் கொடுத்த ராஜூ பாய், நிரூப் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். ஆனால்  “போங்கடா உங்கள் போய் ஃபிரண்ட்ஸ் நெனச்சேன் பாரு என் முதுகுகிலே குத்திட்டீங்களே டா.பிடிக்கும் பிடிக்கும்ன்னு என்கூடவே சுத்திட்டு இப்படி பண்றீங்களா” இப்படி தான் பிரியங்கா மனதில் ஓடிக் கொண்டிருந்தது முகத்தில் தெரிந்தது. அதை நினைத்து கொண்டே அம்மாவை பற்றி பேசி கண்கலங்கினார். அடுத்தது சிபி தனது சினிமா வாய்ப்பு, குடும்பம் பற்றி பேசினார். யார் இந்த சிபி? என்று தேடியவர்களுக்கு ஒரு விவரமும் கிடைகக்வில்லை. ஆனால் சிபிக்கு கல்யாணம் ஆகிவிட்டது மட்டும் தெரிந்து விட்டது. வழக்கம் போல் ராஜூ பாய் டிஸ்லைக் கொடுத்தார். (எல்லாருக்கும் டிஸ்லைக்கா பாய், உங்க கதைக்கு நாங்க வெயிட்டிங்)

    இரவு டின்னரை முடித்துவிட்டு ஹவுஸ்மேட்ஸ் தூங்க சென்றனர். அக்‌ஷரா தாமரை செல்வியிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். போன வாரம் நடந்து முடிந்த கதையை தூண்டி அதற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். சீசன் 5வில் புரமோ போட கூட கண்டெண்டுக்கு பஞ்சம் இருப்பது பச்சையாக தெரிந்தது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: