Bigg Boss Tamil: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    பிக் பாஸ் 5-ம் சீசனில் கலந்துக் கொள்ளும் பிரபலங்கள் என சிலரின் பெயர்கள் இணையத்தில் வலம் வருகின்றன. அதை இங்கே குறிப்பிடுகிறோம்.

    'பிக் பாஸ்' நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் டி.ஆர்.பி-யில் உச்சம் தொட்டது. இதையடுத்து 5-ம் சீசன் எப்போது ஆரம்பமாகும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    கொரோனா 2-ம் அலையால் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பிக் பாஸ் ப்ரோமோ ஷூட்டிங் நடந்த விஷயத்தை முன்பே தெரிவித்திருந்தோம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களின் பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை கெவின் டாடி புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக் டாக் ஜி.பி. முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: