சூப்பர் சிங்கர் 8 முடிவடைந்துள்ள நிலையில் அடுத்து தமிழக சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் மிக பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், வரும் அக்டோபர் 3 முதல் ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக இருக்கிறது.
கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் 5-வது சீசன் வழக்கம் போல ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முந்தைய 4 சீசன்களை தொகுத்து வழங்கிய உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்க போகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இதில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எனவே பிக்பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்து அக்டோபர் 3 மாலை 6 மணிக்கு ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாக உள்ள பிக்பாஸ் ஷோவின் தொடக்க நிகழ்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எனினும் பிக்பாஸ் தமிழ் 5-ல் சினிமா பிரபலங்கள் தவிர சில புதுமுகங்களும் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் துவங்க உள்ள இந்த ஷோவில் குக்வித் கோமாளி கனி, விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, பிரபல நடிகை ஷகிலாவின் மகள் மிலா, பாபா பாஸ்கர், இமான் அண்ணாச்சி, விஜே பப்பு, நடிகர் நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன், நடிகை கெளசல்யா, தொழிலதிபர் ரேணுகா பிரவின், உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் ஆன்லைனில் சுற்றி கொண்டிருக்கின்றன.
இதனிடையே கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிக்பாஸ் 5-ன் போட்டியாளர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் என்று கூறி ஷகிலாவின் மகள் மிலா, கோபிநாத் ரவி, சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஷம்மு உட்பட 5 பேர் அடங்கிய ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஷகிலாவின் மகள் மிலா, கோபிநாத் சன் டிவி செய்திவாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஆகியோர் இந்த ஃபோட்டோவில் ஒன்றாக இருப்பதால், இதில் காணப்படும் 5 பேரும் பிக்பாஸ் சீசன் 5-ன் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் சென்னை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்டர்நெட்டில் வைரலாகி வரும் இந்த ஃபோட்டோ, ரசிகர்களிடையே பிக்பாஸ் சீசன் 5 மீதான எதிர்பார்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bigg Boss Tamil 5