பிக்பாஸ் சீசன் 5 பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு... விஜய் டிவி லிஸ்டில் உள்ள பிரபலங்கள் பட்டியல்

பிக்பாஸ் சீசன் 5 பேச்சுவார்த்தை தொடங்கியாச்சு... விஜய் டிவி லிஸ்டில் உள்ள பிரபலங்கள் பட்டியல்

பிக்பாஸ் தமிழ் 4

பிக்பாஸ் தமிழ் 5-வது சீசன் நிகழ்ச்சிக்காக பல்வேறு பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகென் ராவும், 4-வதாக நடிகர் ஆரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள், சமூக அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும் அது நிகழ்ச்சிக்கான புரமோஷனாக மாறி விடுகிறது.

தமிழில் முதல் மூன்று சீசன்களும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்பட்ட நிலையில் 4-வது சீசன் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுனால் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனை ஜூன் மாதம் 3 வாரத்திலிருந்து ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த சீசனில் கலந்து கொள்ள குக் வித் கோமாளி கனி, நடிகர் நகுல், கடந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீரியல் நடிகர் அசீம் ஆகியோரிடம் விஜய் டிவி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த சீசனை தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் தெரிகிறது.

கடந்த சீசனில் ரியோ, நிஷா, கேபி, சோம், ஆஜித், ஷிவானி, ரம்யா பாண்டியன், ரேகா என பெரும்பாலான விஜய் டிவி பிரபலங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் இம்முறை போட்டியாளர்களில் மாற்றம் இருக்குமா அல்லது விஜய் டிவி நட்சத்திரங்கள் தான் இடம்பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 
Published by:Sheik Hanifah
First published: