• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலர் இவரா? - வெளியான புகைப்படம்!

பிக் பாஸ் போட்டியாளர் ஐக்கி பெர்ரியின் காதலர் இவரா? - வெளியான புகைப்படம்!

ஐக்கி பெர்ரி

ஐக்கி பெர்ரி

சக போட்டியாளர்களோடு அவ்வபோது பேசும் போது, தன்னுடைய காதலர் பற்றியும் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையும் தெரிவித்திருந்தார்.

  • Share this:
பலரும் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி, பிரம்மாண்டமாக சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்த முறை, பல்வேறு துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவற்றில், கானா பாடும் பாடகி இசை வாணி, மற்றும் ராப் பாடகி ஐக்கி பெர்ரி ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் இத்துறைகளில், தமிழ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுக்கென்ற தனி இடத்தைப் பிடித்தது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

போட்டியாளர்களில், மஞ்சள் நிற கூந்தலோடு, வெளிநாட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் நிகழ்ச்சியில் அறிமுகமானார் ஐக்கி பெர்ரி. ஐக்கி பெர்ரி பாடகி மட்டுமல்ல, ஒரு மருத்துவரும் கூட. இவர் ஒரு காஸ்மெட்டிக் சர்ஜன் ஆவார்.

தோற்றம் மட்டும் தான் வெளிநாட்டுப் பெண் போல. ஆனால், இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்ப்பெண். நிகழ்ச்சியில் நன்றாக தமிழும் பேசுகிறார். போட்டியில் இவர் எந்த அளவுக்கு மக்கள் மனத்தைக் கவர்ந்து வருகிறார் என்பதை தற்போது கணிக்க முடியாத நிலையில், இவரின் காதலர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எப்போதும் போல, பிக் பாஸ் தமிழ் தொடங்கிய முதல் சில நாட்களுக்கு, போட்டியாளர்கள் தங்களைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி அனைவரோடும் பகிர்ந்து கொள்வார்கள். அதில் ஐக்கி பெர்ரியும் தன்னுடைய பெற்றோரால் எப்படி கைவிடப்பட்டார் என்ற தன்னுடைய கசப்பான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், சக போட்டியாளர்களோடு அவ்வபோது பேசும் போது, தன்னுடைய காதலர் பற்றியும் ஒரு கமிட்டட் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையும் தெரிவித்திருந்தார். இவருடைய காதலர் பெயர் தேவ் என்றும், அவருடைய புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியானகியுள்ளது.

ஐக்கி பெர்ரியின் காதலர் என்று வெளியான புகைப்படம் இதோ.



இதனிடையே இந்த வார எலிமிநேஷேன் நாமினேஷனில் ஐக்கி பெர்ரியும் ஒருவர். கடந்த சீசன்களில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்டவர்களால் நாமினேஷன் செய்தால் மட்டுமே போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கு செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு, பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல், ஒரே ஒருவர் நாமினேட் செய்தாலும், அவரும் எலிமினேஷன் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், இந்த வார பிக்பாஸ் வீட்டின் தலைவியான தாமரைச் செல்வி மற்றும், பாவனியை தவிர்த்து, மீதமுள்ள 15 போட்டியாளர்களும் எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள்.

Also read... MGR மட்டும் இதை செய்யலன்னா எங்க குடும்பமே காலியாகி இருக்கும் - பிக்பாஸ் வருண் கூறிய கதை!

நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடியப் போகும் நிலையில், இந்த வார எபிசோடுகளில் எலிமினேஷன் கட்டாயமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலிமினேஷன் இல்லாத முதல் வாரத்திலேயே, அனைவராலும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட திருநங்கை நமீதா மாரிமுத்து திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார்.

பதினெட்டு போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் 5 தற்போது பதினேழு போட்டியாளர்களுடன் நடைபெற்று வருகிறது. இதனிடையே மேலும் ஒருவர் இந்த வாரம் வெளியேறுவார் என்பதால் அது யார்? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: