Home /News /entertainment /

அடிச்சது ஜாக்பாட்.. 12 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவது இவரா? வெளியானது தகவல்!

அடிச்சது ஜாக்பாட்.. 12 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவது இவரா? வெளியானது தகவல்!

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இவர் இருப்பார் என ஆரம்பத்தில் இருந்தே கணிக்கப்பட்டவர் சிபி தான். இந்த வாரம் முழுவதும் நிரூப்புடன் சிபிக்கு ஏகப்பட்ட சண்டை.

    பிக் பாஸ் 5ல் போட்டியாளர்களில் ஒருவர் 12 லட்சம் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் பரவி வருகின்றன. யார் அவர்?

    பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஃபைனல்ஸூக்கு இன்னும் 1 வாரம் மட்டுமே உள்ளது. இதில் டான்ஸ் மாஸ்டர் அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு சென்று விட்டார். சிபி, நிரூப், ராஜூ, தாமரை, பிரியங்கா, பாவனி ஆகிய 6 பேர் இந்த வாரம் எவிக்‌ஷன் பட்டியலில் இருக்கின்றனர். இதில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவர். இந்த வாரம் வீட்டை விட்டு விட்டு வெளியேற போவது யார்? என்ற பேச்சுகள் ஏற்கெனவே இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முக்கியமான போட்டியாளர் ஒருவர், 12 லட்சம் பணத்துடன் கேம்மை விட்டு வெளியேறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    எல்லா பிக் பாஸ் சீசனிலும் கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படும். போட்டியாளருக்கு விருப்பம் இருந்தால் பிக் பாஸ் குழு ஆஃபர் செய்யும் பணத்தை எடுத்து கொண்டு கேம்மை விட்டு வெளியேறலாம். பிக் பாஸ் முந்தைய சீசனில் கவின், கேப்ரில்லா ஆகியோர் ஸ்மார்ட் மூவாக பணத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கேஷ் பேக் ஆஃபரை சரத்குமார் அறிமுகப்படுத்தினார். 3 லட்சம் பெட்டியுடன் சரத்குமார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார். யோசித்து முடிவு எடுங்கள் என்று போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

    3 லட்சம் என்பதால் போட்டியாளர்கள் யாரை அதை சீண்டவில்லை. ஆஃபர் கொஞ்சம் கொஞ்சமாக எகிறியது, 5 லட்சம் அடுத்தது 7 லட்சம், 9 லட்சம் வரை சென்றது. நிரூப், தாமரையை மூளைச்சலவை செய்து கொண்டிருந்தார். அமீர், பிரியங்காவை அழைத்து, நான் எடுத்துக் கொண்டு செல்லவா? என ஐடியா கேட்டார். ஆனால் பிரியங்கா பெரிய தொகை வரும் வெயிட் பண்ணு என்றார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி ஆல்யா மானசாவை வம்பிழுத்த நெட்டிசன்கள்.. அந்த இயக்குனர் தான் காரணமா?

    இந்நிலையில் பிக் பாஸ் குழு 12 லட்சம் வரை ஆஃப்ர் செய்ததாகவும் அதை எடுத்துக் கொண்டு போட்டியாளர் சிபி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன. பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளராக இவர் இருப்பார் என ஆரம்பத்தில் இருந்தே கணிக்கப்பட்டவர் சிபி தான். இந்த வாரம் முழுவதும் நிருப்புடன் சிபிக்கு ஏகப்பட்ட சண்டை.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    நிரூப் பயந்து விட்டதாக சொல்லி சொல்லியே சிபி அவரின் எனர்ஜியை ஸ்மார்ட்டாக குறைத்தார். மனதில் பட்டதை தைரியமாக பேசக் கூடிய சிபிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் இருக்கின்றனர். “கதவை திறந்து வெளியே போற வரைக்கும் நன் ஜெயிப்பேன்னு நம்பிக்கையோட தான் போவேன்”ன்னு சிபி சொன்ன வார்த்தைகள் இந்த சீசனில் அழிக்க முடியாத வசனங்கள். தன்னம்பிக்கை அதிகமுள்ள சிபிலா 12 லட்சம் பணத்துடன் சென்று விட்டாரா? இல்லை இருக்காது! என அவரின் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
    இன்னும் சிலர் இதுவும் சிபியின் ஸ்மார்ட் மூவ் தான் என்கின்றனர்.

    இதையும் படிங்க.. பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமா? தெறித்து ஓடும் ரசிகர்கள்!

    ஆனால் உண்மையில் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? 12 லட்சம் ஆஃபர் உண்மையாகவே தரப்பட்டதா? வெளியேறியது யார்? என்ற அனைத்து தகவல்கள் இன்றைய எபிசோடில் தெரிந்து விடும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bigg Boss Tamil 5, Vijay tv

    அடுத்த செய்தி