• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: புதிய போட்டியாளராக களமிறக்கப்பட்டிருக்கும் அமீர் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 5: புதிய போட்டியாளராக களமிறக்கப்பட்டிருக்கும் அமீர் யார் தெரியுமா?

பிக் பாஸ் அமீர்

பிக் பாஸ் அமீர்

சமீபத்தில் யூடியூபர் அபிஷேக் ராஜா வைல்டு கார்டு மூலம் பிக்பாஸிற்குள் மீண்டும் நுழைந்துள்ள நிலையில், மற்றொரு போட்டியாளராக புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளார் அமீர்.

  • Share this:
    சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவரும் வகையில் பல ரியாலிட்டி ஷோக்கள் தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகி வருகின்றன. ரசிகர்களின் அபிமானம் பெற்ற தமிழ் சேனலாக இருந்து வரும் ஸ்டார் விஜய் பல்வேறு சுவாரசிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமான சேனலாக இருந்து வருகிறது.

    ஒருபக்கம் ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை கவரும் அதே நேரத்தில், மறுபக்கம் கலகலப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அனைவரையும் மகிழ்வித்து வருகிறது. பல ஹிட் சீரியல்களை தவிர எண்ணற்ற கலகலப்பான பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஸ்டார் விஜய் டிவி. டான்ஸ் ரியாலிட்டி ஷோ, காமெடி ரியாலிட்டி ஷோ என வகை வகையாக டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது பிக்பாஸ் தான். சின்னத்திரையிலேயே பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக கருதப்படும் பிக்பாஸ் மூலம் தனி முத்திரை பதித்து இருக்கிறது விஜய் டிவி.

    வழக்கம் போல பிக்பாஸின் இந்த சீசனையும் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அடுத்து அவருக்கு பதில் யார் ஷோவை தொகுத்து வழங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பிக்பாஸின் 5-ஆம் சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 3-ம் தேதி ஆரம்பித்தபிக்பாஸ் சீசன் 5, மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. பிக்பாஸ் சீசன் 5 துவங்கிய போது இசை வாணி, ராஜு, மதுமிதா, பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, திருநங்கை நமிதா மாரிமுத்து, மலேசிய தமிழ் பெண் நாடியா சாங், விஜய் டிவி-யின் பிரபல ஆங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே, மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் - சாவித்திரி ஆகியோரது பேரன் அபிநய், அக்‌ஷரா, ஐசரி வருண், இமான் அண்ணாச்சி, தாமரைச் செல்வி, ஸ்ருதி, பாவனி ரெட்டி, நிரூப், ஐக்கி, சிபி, சின்னப்பொண்ணு உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் இருந்தார்கள்.

    எலிமினேஷன் துவங்குவதற்கு முன்பே நமிதா மாரிமுத்து திடீரென்று தானாகவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். எலிமினேஷன் துவங்கியவுடன் முதல் நபராக மலேசிய தமிழ் பெண்ணான நாடியா சாங் வெளியேற்றப்பட்டார். இவரை தொடர்ந்து பிரபல யூடியூபர் அபிஷேக் ராஜா, சின்னபொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே சமீபத்தில் யூடியூபர் அபிஷேக் ராஜா வைல்டு கார்டு மூலம் பிக்பாஸிற்குள் மீண்டும் நுழைந்துள்ள நிலையில், மற்றொரு போட்டியாளராக புதிதாக களமிறக்கப்பட்டு உள்ளார் ஒருவர்.

    இவர் பெயர் அமீர். இந்த அமீர் யார் என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், அவரை பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. இவர் ஒரு டான்ஸ் கோரியோகிராஃபர் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, டான்ஸ் Vs டான்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், பிக்பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட பல டான்ஸ் ஷோக்களில் கோரியோகிராஃபராக இருந்திருக்கிறார். பல திரைப்படங்களுக்கும் அமீர் கோரியோகிராஃப் செய்திருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: