• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அக்ஷரா ரெட்டி முதல் கோபிநாத் ரவி வரை - பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரம்!

அக்ஷரா ரெட்டி முதல் கோபிநாத் ரவி வரை - பிக் பாஸ் சீசன் 5-ல் பங்கேற்கும் போட்டியாளர்கள் விவரம்!

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

நடிகை பவானி ரெட்டி ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, பாசமலர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

  • Share this:
விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ம் தேதி தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சமூக வலைத்தளங்களில் சில போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், அக்ஷரா ரெட்டி, நடிகை பவானி ரெட்டி, தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா , சந்தோஷ் பிரதாப் , கோபிநாத் ரவி, மிலா உள்ளிட்டோர்களின் பெயர்கள் உள்ளது. இவர்கள் குறித்த விவரங்களை இங்கு காண்போம்.,

அக்ஷரா ரெட்டி :

அக்ஷரா ரெட்டி பிரபல மாடல் ஆவார். இவர் துபாயில் நடைபெற்ற மிஸ் குளோப் 2019 அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வில்லா டூ வில்லேஜ் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளார்.

நடிகை பவானி ரெட்டி :

நடிகை பவானி ரெட்டி ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை, பாசமலர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாளம் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பிரியங்கா :

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக பிரியங்கா இருக்கிறார். இவர் சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஸ்டார்ட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஜாக்குலின் :

தொகுப்பாளினியும், நடிகையுமான ஜாக்குலின் கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் பிரபலமானவர். ஆண்டாள் அழகர் மற்றும் தேன்மொழி பி.ஏ. உள்ளிட்ட சீரியல்களிலும், கோலமாவு கோகிலா திரைப்படத்தில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

Also read... விஜய் சேதுபதி படத்தின் புதிய நாயகி அனுகீர்த்தி - புகைப்படங்கள்!

சுனிதா :

சுனிதா 3, காஞ்சனா மற்றும் மான் வேட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஜோடி நம்பர் ஒன் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். எனினும் விஜய் டிவியில் நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2ல் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். இவரது வெகுளித்தனமான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

சந்தோஷ் பிரதாப் :

சந்தோஷ் பிரதாப் ஓ மை கடவுளே உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். எனினும் சர்பட்டா பரம்பரையில் நடித்ததன் மூலம் அவர் புகழ் பெற்றார். தற்போது ஏன் கனவே என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். இந்த பாடல் ஆயுத பூஜை அன்று வெளியாகவுள்ளது.

கோபிநாத் ரவி :

கோபிநாத் ரவி ஒரு புகழ்பெற்ற மாடல். இவர் நடிகர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். கோபிநாத் ரவி ரூபாரு மிஸ்டர் இந்தியா 2021 பட்டத்தை வென்றுள்ளார். முன்னணி தொலைக்காட்சியான ‘ஹோம் ஸ்வீட் ஹோம்’ என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

மிலா :

ஷகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரது வளர்ப்பு மகளான மிலா வெளியில் தெரியவந்தார். சிறு வயதிலேயே அவரை தத்தெடுத்த ஷகிலா, தொடர்ந்து தன்னுடன் வளர்த்து வருகிறார். இதற்கிடையில் ஷகிலாவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முயற்சிகள் நடந்ததாகவும், ஆனால் அவர் தான் தனது மகளை பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது. மிலா ஒரு மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர். அவர் தியாகம் மற்றும் மருதானி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் ஷோ 100 நாட்கள் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும். இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: