• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Bigg Boss Tamil 5: பிக் பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட்டாகும் நபர் இவரா?

Bigg Boss Tamil 5: பிக் பாஸில் இருந்து இந்த வாரம் எலிமினேட்டாகும் நபர் இவரா?

பிக் பாஸ்

பிக் பாஸ்

நாமினேட் செய்யப்பட்டவர்களில் ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கிறதாம்.

  • Share this:
    பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

    விஜய் டிவி-யில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 இந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, பின்னர் 17 போட்டியாளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது 16 போட்டியாளர் உள்ளனர். இதையடுத்து இந்த வாரம் 9 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். இதில் யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    நாமினேட் செய்யப்பட்டுள்ள 9 பேரில் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்‌ஷரா, தாமரைச்செல்வி மற்றும் இசைவாணி ஆகிய ஐவருக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய நால்வருக்கும் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அபிஷேக் ராஜா மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    இதனால் இந்த வாரம் அபிஷேக், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளியாகும் அத்தனை ப்ரோமோக்களிலும் அபிஷேக் தான் இருக்கிறார். வீட்டில் பிரச்னைகள் வர தூண்டுகோலாகவும் இருப்பதால், அவர் வெளியேற்றப்படுவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: