சுரேஷ் சொன்னதை முதல் நாளிலேயே அதிரடியாக செய்து காட்டிய அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த முதல்நாளிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் அர்ச்சனா.

சுரேஷ் சொன்னதை முதல் நாளிலேயே அதிரடியாக செய்து காட்டிய அர்ச்சனா
விஜே அர்ச்சனா - பிக்பாஸ் தமிழ் 4
  • Share this:
தமிழில் அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் 10 நாட்களைக் கடந்திருக்கிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 17-வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார் அர்ச்சனா.

இன்று நிகழ்ச்சிக்குழு வெளியிட்ட மூன்று ப்ரமோ வீடியோக்களிலும் அர்ச்சனா இடம்பெற்றிருப்பதைப் பார்க்கும் போது வந்த முதல்நாளிலேயே ஆட்டத்தை தன் பக்கம் திருப்பி விட்டாரோ என்ற கேள்வி எழுகிறது.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக சுரேஷின் சமையல் எத்தனை பேருக்கு பிடிக்கவில்லை எனக் கேட்கிறார். அதற்கு ரியோ சமையல் மட்டும் தான் பிடிக்கும் அதனால் கையை தூக்க முடியவில்லை என்கிறார். அதன் பின் உங்களுக்கு திருஷ்டி பட்டுவிடுகிறது என சொல்லி சுரேஷிற்கு சுத்தி போடுகிறார் அர்ச்சனா.


பின்னர் நீங்க பல வருஷமா ஆங்கராக இருந்திருக்க வேண்டுமே என அர்ச்சனா கேட்க, அதற்கு சுரேஷ் நான் ஆங்கராக இருந்துள்ளேன் என பதில் அளிக்கிறார். அதற்கு சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர். அதனால் சுரேஷ் சக்ரவர்த்தி கோபமாகி அங்கிருந்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் இன்று வெளியான கடைசி ப்ரோமோவில், போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இது வழக்கமான டாஸ்க்காக இருந்தாலும் வெளியில் இருந்து நிகழ்ச்சியைப் பார்த்த பார்வையாளராக அவர் மற்ற போட்டியாளர்களை அணுகுவது, வீட்டுக்குள் இருப்பவர்களிடம் பல்வேறு கேள்விகளை நிச்சயம் எழுப்பும்.

நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட் பட்டம், பாலாஜிக்கும், ஆமாம் சாமி பட்டம் அறந்தாங்கி நிஷாவுக்கும், கூட்டத்தில் நிற்கும் ஒரு நடிகர் (அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்) பட்டம் ஷிவானிக்கும் கொடுக்கும் அர்ச்சனா, ரம்யா பாண்டியனுக்கு சவாலான போட்டியாளர் பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 ட்ரெண்டிங் பட்டம் அனிதாவுக்கு கொடுத்தாலும் பாசிட்டிவ் இல்லை என்று குறைபட்டுக் கொண்ட அர்ச்சனா, நமத்துப் போன பட்டாசு என்ற பதாகையை சனம் ஷெட்டியின் கழுத்தில் மாட்டிவிட்டார். இப்படியாக இன்றைய ப்ரமோக்கள் முடிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு அர்ச்சனா என்ன பட்டம் கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

கடந்த வார இறுதியில் கமல்ஹாசனிடம் பேசிய சுரேஷ் சக்கரவர்த்தி, எல்லாம் நமத்துப் போன பட்டாசுகளா இருக்கிறார்கள் எனக் கூறினார். அவர் சொன்னதை வந்த முதல்நாளிலேயே கொளுத்திப் போட்டிருக்கிறார் அர்ச்சனா.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading