பிக்பாஸ் : இந்த வாரம் அதிக வாக்குகளைப் பெற்று தப்பிக்கும் 5 பேர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் 11 பேர் இடம்பிடித்திருக்கும் நிலையில் அதில் 5 பேர் அதிக வாக்குகளைப் பெற்று தப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் : இந்த வாரம் அதிக வாக்குகளைப் பெற்று தப்பிக்கும் 5 பேர்
கமல்ஹாசன்
  • Share this:
தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் 25 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் 17-வதாக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அதைத்தொடர்ந்து இரண்டாவது வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்று முதல் நபராக வெளியேற்றப்பட்டார் நடிகை ரேகா.

கடந்த வாரத்தில் ஆஜித் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேற இருந்த நிலையில் தன்னிடம் உள்ள ஃப்ரீ பாஸை வைத்து தப்பித்தார். இதையடுத்து இந்த வார நாமினேஷனில் சனம், ஆஜித், நிஷா, அனிதா சம்பத், ரம்யா பாண்டியன், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், ரியோ, பாலாஜி, ஜித்தன் ரமேஷ் மற்றும் வேல்முருகன் ஆகிய 11 பேரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் நாளை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ரியோ, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா ஆகிய 5 பேரும் அதிக வாக்குகளைப் பெற்று எவிக்‌ஷனில் இருந்து தப்பித்திருப்பதாகவும் இன்றைய எபிசோடில் கமல்ஹாசன் அதை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க: ஆஹா! என்னா லுக்.. நீச்சல் குளத்தில் கிளாமர் காட்டிய பிரியா பவானி சங்கர் - வைரல் போட்டோஸ்

இவர்களைத் தவிர்த்து மீதமிருக்கும் சனம், ஆஜித், அனிதா சம்பத், சுரேஷ் சக்ரவர்த்தி, சோம்சேகர், வேல்முருகன் ஆகிய 6 பேரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் ஆஜித் மற்றும் வேல்முருகன் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading