Bigg Boss Tamil 4 | பாச மழையில் மூழ்கிய சுரேஷ் மற்றும் கேப்ரியலா

பிக்பாஸ் வீட்டை பாச மழையால் நனைத்துள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

Bigg Boss Tamil 4 | பாச மழையில் மூழ்கிய சுரேஷ் மற்றும் கேப்ரியலா
பிக்பாஸ் தமிழ் 4
  • Share this:
தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் கடந்த 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் நேற்று 17-வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார் அர்ச்சனா. அவரது வருகை நிகழ்ச்சியின் சுவாரசியத்தை மேலும் கூட்டியுள்ளது என்று கூட சொல்லலாம்.

வீட்டில் இருந்த போட்டியாளர்களின் நடவடிக்கைகளை 10 நாட்களாக கவனித்து வந்த அர்ச்சனா, பிக்பாஸின் கட்டளைப்படி அவர்களுக்கு தனித்தனியாக பட்டமளித்தார். இதையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் புரமோவில்,“பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமும், ஈடுபாடும் குறைவாக இருக்கும் இரண்டு நபர்களை வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, கலந்து ஆலோசனை செய்யும் போட்டியாளர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகியோரை தேர்வு செய்கின்றனர்.


வீட்டிற்கு புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் அர்ச்சனா இருவரும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டதாக கூற, பிக்பாஸூம் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்ட சொல்லி விடுகிறார். அதனைத் தொடர்ந்து ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர்.

இரண்டாவது புரமோவில், “கேப்ரியலாவிற்கு யார் ஆதரவு தர விரும்புகிறீர்களோ, அவர்கள் எழுந்து நிற்கலாம் என பிக்பாஸ் கேட்க சுரேஷ் சக்கரவர்த்தி எழுந்து நிற்கிறார். அப்படி ஆதரவு தருபவர்கள் போட்டியாளரை உப்புமூட்டை தூக்குவது போல், முதுகில் தூக்கி கொண்டு நிற்க வேண்டும். எவ்வளவு நேரம் முதுகில் சுமந்து நிற்கிறார்கள் என்பது தான் டாஸ்க். டாஸ்க் ஆரம்பித்தவுடன் ஆரி தனது முதுகில் வேல்முருகனை தூக்கிக்கொள்கிறார். அடுத்து ரியோவை பாலாஜி தூக்கி வைத்துக் கொள்கிறார். கேபிக்கு ஆதரவு தருவதாக கூறிய சுரேஷ் அவரை முதுகில் சுமந்து கொண்டார்.

மேலும் படிக்க: ’என் தாய் ஈழத்தைச் சேர்ந்தவர்.. போர்க்காட்சிகள் ‘800’ படக்கதையில் உள்ளன‘ - இளவயது முத்தையா முரளிதரனாக நடிக்க மறுத்த ‘அசுரன்’ நடிகர்..அப்போது சுரேஷ் " இதுதான் ஸ்பிரிட் கையை நன்கு பிடித்துக் கொள் விடாதே என்கிறார். ஆனால் கேபியோ வேணாம் தாத்தா.ப்ளீஸ் தாத்தா என்று கூறி இறங்கி விடுகிறார். இறங்கிய பின்னர் சுரேஷை பாசத்துடன் கட்டிப்பிடித்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறார் கேபி. அதெல்லாம் வேண்டாம் என்று சுரேஷ் கூற பின்னணியில் ஆராரோ ஆரிரரோ பாடல் ஒலிக்கிறது.















ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading