Bigg boss 4 Tamil | கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி.. வருந்திய பாலாஜி..

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்டதை அடுத்து சக போட்டியாளர்களிடம் அதைக்கூறி வருந்துகிறார் பாலாஜி.

Bigg boss 4 Tamil | கண்ணாடி அறைக்குள் அடைக்கப்பட்ட ஷிவானி.. வருந்திய பாலாஜி..
பிக்பாஸ் தமிழ் 4
  • Share this:
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 11-ஆம் நாளான நேற்று 16 போட்டியாளர்களுடன் 17-வது போட்டியாளராக அர்ச்சனா வீட்டில் நுழைந்துள்ளார். அவரின் இந்த அதிரடியான வைல்டு கார்டு என்ட்ரி நிகழ்ச்சியின் சுவாரசியத்தை மேலும் கூட்டியுள்ளது என்று கூட சொல்லலாம்.

கடந்த 10 நாட்களாக வீட்டுக்குள் நடந்ததைப் பார்த்துவிட்டு வந்திருக்கும் அர்ச்சனாவுக்கு, வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு பட்டம் கொடுக்க வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் வைக்க, அர்ச்சனா மற்ற போட்டியாளர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதனால் வீட்டுக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

ஷிவானி தனக்கு வழங்கிய கூட்டத்தில் நிற்கும் ஒரு நடிகர் (அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட்) என்ற பட்டத்தைப் பார்த்து அதிருப்தியில் இருக்க, இன்றைய நாளுக்காக ப்ரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், " பிக்பாஸ் வீட்டில் சுவாரஸ்யமும், ஈடுபாடும் குறைவாக இருக்கும் இரண்டு நபர்களை வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் சொல்ல, கலந்து ஆலோசனை செய்யும் போட்டியாளர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஷிவானி ஆகியோரை தேர்வு செய்கின்றனர்.


வீட்டிற்கு புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் அர்ச்சனா இருவரும் இறுதியாக தேர்வு செய்யப்பட்டதாக கூற, பிக்பாஸூம் இருவரது பெயரைச் சொல்லி, அவர்களை கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்ட சொல்லி விடுகிறார். அதனைத் தொடர்ந்து ஷிவானி மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் கண்ணாடி அறைக்குள் வைத்து பூட்டப்படுகின்றனர்.



இதையடுத்து பாலாஜி முருகதாஸ் “பாவம் இந்த பெண்ணை (ஷிவானியை) பிடித்து எதிலாவது போட்டு விடுகிறார்கள் என தனது சக போட்டியாளர்கள் சுரேஷ் மற்றும் ஆஜித்திடம் கூறுகிறார். கண்ணாடி அறைக்குள் ஷிவானி கோபத்துடன் இருப்பதுபோல் முடிவடைகிறது ப்ரமோ வீடியோ.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading