#Bigg boss 4 Tamil | கதறி அழுத பாலாஜிக்கு ஷிவானி சொல்லிய ஆறுதல்.. அப்போ ஓகே ஆயிருச்சா?

பிக்பாஸ் வீட்டில் கதறி அழுத பாலாஜியை ஆறுதல் வார்த்தை கூறி தேற்றியுள்ளார் ஷிவானி.

#Bigg boss 4 Tamil | கதறி அழுத பாலாஜிக்கு ஷிவானி சொல்லிய ஆறுதல்.. அப்போ ஓகே ஆயிருச்சா?
ஷிவானி மற்றும் பாலாஜி
  • Share this:
கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ரேகா மட்டுமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் 10-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா என்ட்ரி ஆனதிலிருந்தே அவருக்கும் பாலாஜிக்கும் பிரச்னை ஆரம்பித்துவிட்டது. அர்ச்சனா, ரியோ உள்ளிட்டோர் குழுவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய பாலாஜி, பட்டிமன்றம் டாஸ்க்கில் நடுவராக இருந்த அர்ச்சனா தன்னுடைய வேலையை மட்டும் பார்க்குமாறும் கூறினார்.

அர்ச்சனா - பாலாஜி இடையே மெல்ல மெல்ல புகைந்து கொண்டிருந்த பிரச்னை தற்போது சூடு பிடித்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்த பாலாஜியை எழுப்பி வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லுங்கள் என்று வேல்முருகனிடம் அர்ச்சனா கூற பிரச்னை ஆரம்பமானது. இந்த பிரச்னை இன்றும் தொடர்வதை புரமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது நிகழ்ச்சிக்குழு.


முதல் புரமோவில் அர்ச்சனா, பாலாஜியிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகளும் கடைசியில் பாலாஜி தனியாக அமர்ந்து அழுவதும் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வெளியான புரமோவில், நீங்கள் செய்வது சரிதான் என்றும் அதை தெரிவிக்கும் விதம் தான் சரியில்லை என்றும் பாலாஜியிடம் எடுத்துக் கூறி ஆறுதல் தெரிவிக்கிறார் ஷிவானி. இதைப்பார்த்த சம்யுக்தா ஷிவானி என்ன சொன்னார் ஓகே ஆகிடுச்சா என்று பாலாஜியிடம் கேட்கிறார். எதைக் கேட்டாலும் தெளிவாக கேளுங்கள் என்று பாலாஜி கூற புரமோ முடிவடைகிறது. என்ன நடந்தது என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
First published: October 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading