பிக்பாஸ் இன்று வெளியேற்றப்படும் நபரை அறிவிக்கும் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றப்பட இருக்கும் போட்டியாளரை அறிவிக்க கமல் தயாராக இருப்பது போன்ற புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் இன்று வெளியேற்றப்படும் நபரை அறிவிக்கும் கமல்ஹாசன்
ரேகா | கமல்ஹாசன்
  • Share this:
தமிழில் பிக்பாஸ் 4-வது சீசன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆரி, பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, ஆஜித், சம்யுக்தா, சோம் சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ரியோ உள்ளிட்ட 16 போட்டியாளர்களுடன் 17-வதாக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார்.

முதல் வாரத்தில் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று பிக்பாஸ் அறிவிக்க போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா, ஷிவானி, சம்யுக்தா, கேப்ரியலா உள்ளிட்டோர் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களில் யார் வெளியேற்றப்படப் போகிறார் என்பதை அறிய பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ரேகா பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கான இரண்டு புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், எலிமினேட் செய்யப்படுவோரை அறிவிக்க ஸ்டைலான உடையுடன் மேடைக்கு வருகிறார் கமல்ஹாசன்.


மேலும் அகத்தின் அழகு முகத்தில் தெரியாமல் யார் மாஸ்க் அணிந்திருக்கிறார்கள் என்றும் போட்டியாளர்களுக்கிடையே டாஸ்க் கொடுக்கப்பட்டு, அகம் டிவி வழியாக அவர்களுடன் உரையாடியுள்ளார் கமல்.



முன்னதாக நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானி, ரம்யா பாண்டியன் ஆகியோர் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: October 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading