பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா ஆஜித்? வெளியான புதிய வீடியோ

எனக்கே என் மீது ஒரு சந்தேகம் எழுகிறது எனவே நானே இந்த வாரம் வெளியேறலாம் என்று கமல்ஹாசனிடம் ஆஜித் சொல்லும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா ஆஜித்? வெளியான புதிய வீடியோ
பிக்பாஸ் தமிழ் 4
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் அக்டோபர் 4-ஆம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஆரி, பாடகர் வேல்முருகன், சனம் ஷெட்டி, ரேகா, கேப்ரியலா, ஆஜித், சம்யுக்தா, சோம் சேகர், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், ரியோ, பாலாஜி, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட 16 போட்டியாளர்களுடன் 17-வது நபராக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார்.

இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த நடிகை ரேகா குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேற்றப்பட்டார். இந்த வாரத்தில் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்தார்கள். இவர்களில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பாலாஜி காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில், கமல்ஹாசனிடம் பேசும் ஆஜித், எனக்கே என் மீது ஒரு சந்தேகம் எழுகிறது. நானே இந்த வாரம் வெளியேற வாய்ப்பிருக்கிறது என்கிறார். ஆனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யாரும் வெளியேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.


அதேபோல் குறைந்த வாக்குகளைப் பெற்ற ஆஜித் தன்னிடம் உள்ள ஃப்ரீ பாஸை வைத்து எவிக்‌ஷனில் இருந்து தப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.
First published: October 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading