Bigg Boss Tamil 4 | பிக்பாஸில் இருந்து வெளியேறிய வேல்முருகன்.. அடுத்த டார்கெட்டில் ஆரி, அர்ச்சனா..

அர்ச்சனா , ஆரி

இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது முதல் புரோமோவில் அர்ச்சனா இந்த வீட்டில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ஆரி கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

  • Share this:
    பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது. ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலாஜி, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேருடன் ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி தொடங்கியது.

    பிறகு அர்ச்சனா முதல் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தார். இதுவரை ரேகா, வேல்முருகன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது முதல் புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.

    பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற விருப்பும் இரண்டு போட்டியாளர்களை அறிவிக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார். அப்போது பெரும்பாலானோர் ஆரி, அர்ச்சனாவை தேர்வு செய்கின்றனர். அர்ச்சனா, பாலாஜி, ஷிவானி, சோம், சம்யுக்தா ஆகியோர் ஆரியை தேர்வு செய்கின்றனர். ஆரி, சுஜித்ரா, பாலாஜி, அனிதா ஆகியோர் அர்ச்சனாவை தேர்வு செய்கின்றனர். அர்ச்சனா இந்த வீட்டில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக ஆரி கூறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    வெளியேறிய வேல்முருகன் :

    முன்னதாக கடந்த வாரம் 11 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில் அதில், ஒவ்வொருவராக சேவ் செய்யப்பட்ட பின்னர் இறுதியாக ஆஜித், மற்றும் வேல்முருகன் ஆகியோர் இருந்தனர். குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் வேல்முருகன் வெளியேற்றப்பட்டார்.

    அவர் வீட்டை விட்டு செல்லும் போது பாலாஜி அவரிடம் மன்னிப்பு கேட்டார். அர்ச்சனா உள்ளிட்டோர் அவரை கண்ணீர் மல்க வழியனுப்பினர். மேலும் வேல்முருகன் தனது உண்டியலை உடைத்து அதில் உள்ள காயினை அர்ச்சனாவுக்கு கொடுத்த நிலையில், அர்ச்சனா அந்த காயினை சம்யுக்தாவிடம் கொடுக்குமாறு கூறினார். அதனால் வேல்முருகன் காயினை சம்யுக்தாவிடம் கொடுத்துவிட்டு கண்ணீருடன் விடைபெற்றார்.

    பாடகி சுசித்ரா என்ட்ரி :

    பாடகர் வேல்முருகன் வெளியேறிய நிலையில், வீட்டின் புதிய வரவாக பாடகி சுசித்ரா என்ட்ரி கொடுத்துள்ளார். இவரின் இந்த திடீர் என்ட்ரி கட்டாயம் மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவே இருக்கக்கூடும். முதல் சீசனிலேயே என்னை அழைத்தார்கள், அப்போது சில பிரச்சனைகள் இருந்ததால் நான் கலந்துகொள்ளவில்லை. ஒவ்வொரு சீசனை விடவும் தற்போது போட்டி கடுமையாக இருப்பது போல தோன்றுகிறது,

    ALSO READ | அண்ணே..அண்ணே..பட்டாசு வச்சுருக்கேண்ணே.. இணையத்தை கலக்கும் தீபாவளி மீம்ஸ்..

    ஆனால் வீட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருப்பதால் அதனை மாற்ற நினைக்கிறன் என கமலிடம் சுசித்ரா தெரிவித்தார். அதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு அவர்களது நடவடிக்கை அடிப்படையில் ஸ்மைலி கொடுத்தார்.



    அதில் ரொம்ப திறமையான போட்டியாளர், அவர் அழுவதை பார்க்க எனக்கு பிடிக்காது என்று கூறி ஹார்ட் ஸ்மைலியை அனிதாவிற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published: