‘ஆணவத்தில் ஆடாதிங்க’... அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி

கணவருடன் அனிதா சம்பத்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் அனிதா சம்பத் குறித்து நடன இயக்குநர் ஒருவர் தெரிவித்த விமர்சனத்துக்கு அவரது கணவர் பதிலளித்துள்ளார்.

 • Share this:
  கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்  அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்.

  முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்வில் நடந்த பல சோகக் கதைகளை கூறி கண்ணீர் விட்டனர். அதில் அறந்தாங்கி நிஷாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

  அதேபோல் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், தான் கடந்த வந்த பாதையை கண்ணீருடன் உருக்கமாகக் கூறினார். இதற்கு நெட்டிசன்கள் சிலர் ஆதரவு அளித்தாலும் சிலர் விமர்சித்தும் கருத்து பதிவிட்டுள்ளனர். அனிதா சம்பத் பேச்சில் சோகம் இல்லை என்று தெரிவித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ், அவர் வேகமாக பேசுவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.  நடன இயக்குநர் சதீஷின் ட்வீட்டுக்கு மறைமுகமாக பதிலளித்திருக்கும் அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன், பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அடுத்தவர்களது பசியை தெரிய வாய்ப்பில்லை. இப்படித்தான் அடுத்தவர்கள் அனுபவித்த பசி மற்றும் வலியைக் கூட கிண்டல் செய்யத் தோன்றும். டான்ஸ் மாஸ்டர் எனில் டான்ஸ் ஆடலாம். ஆணவத்தில் ஆட வேண்டாம் என்று கூறியுள்ளார்.  அனிதா சம்பத் கணவரின் இந்தப் பதிவுக்கு நடன இயக்குநர் சதீஷூம் தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
  Published by:Sheik Hanifah
  First published: