பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சுசித்ரா... உள்ளே செல்லும் சீரியல் நடிகர்

50-வது நாளை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று 3-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக சீரியல் நடிகர் ஒருவர் வீட்டுக்குள் வர இருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சுசித்ரா... உள்ளே செல்லும் சீரியல் நடிகர்
பாடகி சுசித்ரா
  • Share this:
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது அனிதா, அர்ச்சனா, ரியோ, நிஷா, சோம், ரமேஷ், ஆரி, சனம், சம்யுக்தா, சுசித்ரா, பாலாஜி, ஷிவானி, கேப்ரில்லா, ரம்யா மற்றும் ஆஜித் ஆகிய 15 பேர் உள்ளனர்.

2-வது வாரத்தில் நடிகை ரேகா முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். 3-வது வாரத்தில் ஆஜித் தான் வைத்திருந்த எவிக்‌ஷன் பாஸை பயன்படுத்தி தப்பித்தார். 4-வது வாரத்தில் வேல்முருகனும், 5-வது வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தியும் வெளியேற்றப்பட்டனர்.

6-வது வாரத்தில் தீபாவளி என்பதால் யாரும் வெளியேற்றப்படமாட்டார்கள் என்று அறிவிக்க, தற்போது 7-வது வாரத்தில் ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சுசித்ரா, சோம் சேகர் ஆகிய 7 பேரை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர்.


இதில் நேற்றைய எபிசோடில் ஆரி, ரியோ உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இதையடுத்து இன்று வெளியாகியிருக்கும் புரமோவில் சோம் சேகரும் இந்தவாரம் வெளியேற்றப்படமாட்டார் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறைந்த வாக்குகளைப் பெற்று பாடகி சுசித்ரா வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் ‘பகல நிலவு’ சீரியலில் நடித்த நடிகர் அசீம் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் 3-வது வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் படிக்க: காத்திருந்து காதலியை கரம்பிடித்த ‘மூக்குத்தி அம்மன்’ எடிட்டர் - திரைபிரபலங்கள் வாழ்த்துஏற்கெனவே நடிகர் அசீமை ஷிவானி காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் சீரியலில் இருந்து விலகினார் ஷிவானி. தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் பாலாஜியுடம் நெருக்கமாகி வரும் ஷிவானியின் நடவடிக்கைகள் அசீம் வருகைக்குப் பின்னர் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading