பிக்பாஸ்: யாரும் எதிர்பாராத ரேஷ்மா இன்று வெளியேற்றம்?

news18
Updated: August 4, 2019, 2:22 PM IST
பிக்பாஸ்: யாரும் எதிர்பாராத ரேஷ்மா இன்று வெளியேற்றம்?
பிக்பாஸ்
news18
Updated: August 4, 2019, 2:22 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ரேஷ்மா வெளியேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒருவர் வெளியேற்றப்படுவர். அந்தவகையில் இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா விஜயகுமார், மீராமிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், அபிராமி வெங்கடாச்சலம், சாக்‌ஷி அகர்வால், மதுமிதா, ரேஷ்மா ஆகிய 5 பேர் உள்ளனர். மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இந்த 5 பேரில் ஒருவர் வெளியேற்றப்படுவர்.


இதில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் மதுமிதா காப்பாற்றப்பட்டு விட்டதாக அறிவித்தார் கமல்ஹாசன். அதைத்தொடர்ந்து சேரன் -சரவணன் இடையேயான சண்டையை முடித்து வைத்த கமல்ஹாசன் கவின் பக்கம் திரும்பினார்.

அப்போது இந்த முக்கோண காதலை நீங்கள் வெல்வதற்கான உத்தியாக பயன்படுத்துகிறீர்களா என்று கவின், சாக்‌ஷியிடம் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், அப்படி வெல்வதற்கான உத்தியாக பயன்படுத்தினால் தயவு செய்து அதை கைவிட்டு விடுங்கள் என்றும் கூறினார்.

இதையடுத்து இன்று வெளியேற்றப்படும் நபரை அறிவிக்க உள்ளார் கமல்ஹாசன். இதனிடையே முக்கோண காதல் கதையில் முக்கிய நபராக இருக்கும் சாக்‌ஷி ரகசிய அறைக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்டால் இந்த வாரம் யாரும் வெளியேற்றப்பட வாய்ப்பில்லை.

Loading...

அதேவேளையில் ரேஷ்மா குறைந்த வாக்குகளைப் பெற்ற வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கம் போல் கவின், அபிராமி உள்ளிட்டோர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வீடியோ பார்க்க: நேர்கொண்ட பார்வை படத்தின் வியாபாரச் சிக்கல் தீர்ந்தது எப்படி?

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...