பிக்பாஸ்: இன்று வெளியேறும் நபரை அறிவித்த கமல்!

பிக்பாஸ்: இன்று வெளியேறும் நபரை அறிவித்த கமல்!
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 22, 2019, 12:55 PM IST
  • Share this:
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இன்று வெளியேற்றப்படப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களில் கடந்தவாரம் நடந்த டாஸ்க்குகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார் முகென் ராவ்.

இதுஒருபுறமிருக்க இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சேரன், ஷெரின், லாஸ்லியா, கவின் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்படுவார்.


நாமினேஷனில் இருக்கும் நால்வரில் கவினுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், ஷெரினுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்தவாரம் நடந்த டாஸ்க்குகளில் சேரனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை இன்று வெளியேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, ஒருமுறை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சேரன் ரகசிய அறையில் சில நாள்கள் இருந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்சிக்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பார்வையாளர்களைப் பார்த்து கேள்வி எழுப்பும் கமல்ஹாசன் இறுதியாக ஷெரின் பெயரை மேடையில் கூறுகிறார். இதன்மூலம் ஷெரின் காப்பாற்றப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

Loading...



வீடியோ பார்க்க: நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...