நீ நல்ல டைம்ல தான் வந்திருக்க... சாக்‌ஷியுடன் திட்டம் தீட்டும் வனிதா

நீ நல்ல டைம்ல தான் வந்திருக்க... சாக்‌ஷியுடன் திட்டம் தீட்டும் வனிதா
பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 3, 2019, 4:16 PM IST
  • Share this:
மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் சாக்‌ஷி அகர்வால் வந்திருப்பதை அடுத்து பழைய கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் கவின், சேரன், ஷெரின், முகென், லாஸ்லியா ஆகியோர் உள்ளனர்.


இந்நிலையில் தற்போது அபிராமி, சாக்‌ஷி, மோகன் வைத்யா ஆகிய மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திக்கின்றனர்.

இதுகுறித்து வெளியான முதல் புரமோ வீடியோவில், மோகன் வைத்யா தன்னுடைய ட்ரவுசரை சாண்டியிடம் கேட்க, சாக்‌ஷி ஷெரினிடம் கைகுலுக்கி நீதான் வெற்றிபெற வேண்டும் என்கிறார்.

ஏற்கெனெவே கவினுக்கும் வனிதாவுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில் சாக்‌ஷி வீட்டுக்குள் வந்திருப்பதால் பார்வையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

இந்நிலையில் புதிய புரமோ வீடியோ ஒன்றை நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது. அதில், சாக்‌ஷியிடம் நேற்று நடந்தவற்றை தனது பாணியில் விவரிக்கும் வனிதா, சாக்‌ஷியிடம் சரியான நேரத்தில் வந்திருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் அபிராமியைப் பார்க்கும் லாஸ்லியா, தனக்கு இரண்டு பக்கமும் புகைவதாகவும் நீதான் அதை சரிசெய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். அதைத்தொடர்ந்து ஒருவைல்ட் கார்ட் எண்ட்ரிக்கே தாங்க முடியவில்லை. இப்போது 3 பேர் வந்திருக்கிறார்கள் என்கிறார்.

மூவர் வருகையை அடுத்து பிக்பாஸ் களைகட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.வீடியோ பார்க்க: வலுக்கும் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மோதல்!

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...