BIGG BOSS TAMIL நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்கனும் ... கஸ்தூரியிடம் மோதும் வனிதா?

news18
Updated: August 20, 2019, 12:52 PM IST
BIGG BOSS TAMIL நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்கனும் ... கஸ்தூரியிடம் மோதும் வனிதா?
வனிதா விஜயகுமார்
news18
Updated: August 20, 2019, 12:52 PM IST
வாத்து என தன்னை அழைத்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கஸ்தூரியிடம் முறையிடுகிறார் நடிகை வனிதா விஜயகுமார்.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார இறுதியில் நடிகை மதுமிதா, அபிராமி என இருவர் வெளியேற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து இந்த வார டாஸ்க்குக்காக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். அதில் ஆசிரியையாக கஸ்தூரியும், ஆசிரியராக சேரனும் நடிக்கின்றனர். கஸ்தூரியை ஆரம்பத்தில் இருந்தே கேலி செய்து வரும் சாண்டி இந்த டாஸ்க்கில் கஸ்தூரியை டீச்சர் அல்ல சத்துணவு ஆயா என்று கலாய்க்கிறார். அதேபோல் ஷெரின் மாணவியாக இருக்கும்போது தர்ஷனிடம் ரொமான்ஸ் செய்வது, லாஸ்லியாவின் அழுகை, வனிதாவின் அதிரடி நடவடிக்கைகளும் தொடர்கின்றன.


இதற்கான புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் டீச்சராக இருக்கும் கஸ்தூரி, வாத்து பாடலை வனிதா பாடுவார் என்று கூற, தன்னை வாத்து என்று அழைத்ததற்காக கஸ்துரி மன்னிப்பு கோர வேண்டும் என்று சேரனிடம் கூறுகிறார் வனிதா. இதனால் வனிதா - கஸ்தூரி இடையே புதிய பிரச்னை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நகைச்சுவையாக தொடங்கப்பட்ட இந்த டாஸ்க் மீண்டும் சர்ச்சையை கிளப்புமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...