'வாயாடி பெத்தபுள்ள' பாடலுடன் வரும் வனிதாவின் மகள்கள் - மகிழ்ச்சியில் பிக்பாஸ் வீடு!

news18
Updated: September 12, 2019, 12:35 PM IST
'வாயாடி பெத்தபுள்ள' பாடலுடன் வரும் வனிதாவின் மகள்கள் - மகிழ்ச்சியில் பிக்பாஸ் வீடு!
பிக்பாஸ்
news18
Updated: September 12, 2019, 12:35 PM IST
வனிதாவின் மகள் இருவரும் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் வருகையைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இவர்களில் கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், வனிதா ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவர்.


இந்தவாரத்தின் தொடக்கம் முதலே பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். பத்து வருட இடைவெளிக்குப் பிறகு லாஸ்லியா தனது தந்தையை சந்தித்தார்.

பின்னர் லாஸ்லியாவின் தந்தை மகளுக்கு கொடுத்த அறிவுரை, மகளிடம் அம்மா நடத்திய உரையாடல்கள் அனைத்தும் இயல்பான சென்டிமென்ட் காட்சிகளாக இருந்தன.

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. முதல் புரமோ வீடியோவில் தர்ஷனின் தாயார் மற்றும் சகோதரி பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். அப்போது தர்ஷனின் அம்மாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

Loading...

இரண்டாவது புரமோ வீடியோவில் வனிதாவின் இரண்டு மகள்கள் வாயாடி பெத்தபுள்ள பாடலுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்தனர். அவர்களைப் பார்க்கும் வனிதா மகிழ்ச்சியடைகிறார். இதையடுத்து குழந்தைகளுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் கூடி விளையாடுகின்றனர். குழந்தைகளின் வருகையால் பிக்பாஸ் வீட்டை மகிழ்ச்சி சூழ்ந்துள்ளது என்றே கூறலாம்.வீடியோ பார்க்க: எனை நோக்கி பாயும் தோட்டா? இந்த வாரமும் ரிலீஸாகாதது ஏன்

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...