பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்!

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் இரண்டு பிரபலங்கள்!
நடிகை ரித்விகா
  • News18
  • Last Updated: September 23, 2019, 4:05 PM IST
  • Share this:
முன்னாள் பிக்பாஸ் பிரபலங்கள் இருவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 6 பேர் இறுதிக்கட்டத்தில் போட்டியாளர்களாக உள்ளனர். 6 பேரில் முகென் ராவ் இறுதிச் சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளார்.

மீதமிருக்கும் 5 பேருக்கான நாமினேஷன் தொடங்கியுள்ள நிலையில் இந்தமுறை பிக்பாஸ் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில் டாஸ்க்கில் தீவிரமாக செயல்பட்டு வரும் போட்டியாளர்களைச் சந்திக்க 2-வது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகாவும், அந்த சீசனின் ஃபினாலே டிக்கெட்டைப் பெற்ற ஜனனியும் பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளிகளாக செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் பற்றி நான் பேசியதை கட் பண்ணிட்டாங்க... பிகில் வில்லன் ஆதங்கம்...!

நடிகை ஜனனி


Loading...

இதுஒருபுறமிருக்க கடந்த சீசனின் பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறீர்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: பிகில் பட போஸ்டரை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட இறைச்சி வியாபாரிகள்!

வீடியோ பார்க்க: படம் ஓட விஜய் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

First published: September 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...