நாளை வெளியேற்றப்படும் நபர்... பஞ்சாயத்தை ஆரம்பித்த கமல்...!

news18
Updated: July 27, 2019, 3:27 PM IST
நாளை வெளியேற்றப்படும் நபர்... பஞ்சாயத்தை ஆரம்பித்த கமல்...!
நடிகை மீராமிதுன்
news18
Updated: July 27, 2019, 3:27 PM IST
இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக போட்டியாளர்களிடம் உரையாட உள்ளார் நடிகர் கமல்ஹாசன். 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இருந்து பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா ஆகிய 3 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், சாக்‌ஷி அகர்வால், சேரன், மீரா மிதுன், சரவணன் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் நாளை வெளியேற்றப்படுவார்.


வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்தே வார இறுதியில் வெளியேற்றப்படுவோரை பார்வையாளர்கள் தீர்மானிக்கின்றனர். கீரிப்பட்டி, பாம்புப்பட்டியாக பிரிந்திருந்த பிக்பாஸ் வீட்டில் நடிகை மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதனால் அவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதேபோல் டாஸ்க்கில் யார் சரியாக தனது நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்று பிக்பாஸ் கேள்வி எழுப்பினார். அதற்கு அபிராமியும், லாஸ்லியாவும் தங்களது பெயரை சக போட்டியாளர்கள் மத்தியில் கூறினர். இதை ஒருசிலர் ஆமோதிக்க அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் கவின் மட்டும் சாக்‌ஷி மற்றும் சேரன் பெயரைக் கூறினார். மீராமிதுன் நடிகை ஷெரின் பெயரைக் கூறினார். காரணமாக சாக்‌ஷி மற்றும் ஷெரினின் தமிழ் உச்சரிப்பு காரணமாக கூறப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்டவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

Loading...கடந்த வார கடிகார டாஸ்க் பஞ்சாயத்தில் சாக்‌ஷியை சிக்க வைத்த மீராமிதுன், இந்த முறை மொழிப்பிரச்னையை கையிலெடுத்துள்ளார். இதில் சிக்கிய நடிகை சாக்‌ஷிக்கு குறைவான வாக்குகளே பதிவாகியிருப்பதால், அவர் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க நடிகை மீராமிதுன், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் மீதான விசாரணைக்காக காவல்துறையினர் பிக்பாஸ் வீட்டில் உள்ள மீராமிதுனை சந்தித்து சம்மன் வழங்கியுள்ளனர். அடுதத 10 நாட்களில் உரிய விளக்கமளிக்க இருப்பதாக மீரா மிதுன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீரா மிதுன் வெளியேற்றப்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் தாண்டி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற பிக்பாஸின் கூற்றுப்படியும் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சேரன் - மீராமிதுன் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் கமல்ஹாசன்.

First published: July 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...