காதல் கடிதமா...? சுக்குநூறாய் கிழித்துப் போட்ட ஷெரின்...!

காதல் கடிதமா...? சுக்குநூறாய் கிழித்துப் போட்ட ஷெரின்...!
ஷெரின் - பிக்பாஸ்
  • News18
  • Last Updated: September 24, 2019, 5:00 PM IST
  • Share this:
பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட யாஷிகா மற்றும் மஹத் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் 3-வது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த முறை டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது 6 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில் முகென் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருப்பதால் மீதமுள்ள 5 பேரும் எவிக்‌ஷனுக்காக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் யாஷிகா மற்றும் மஹத் சென்றிருப்பதால் போட்டியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் நடித்த இவன் தான் உத்தமன் படத்தின் டீசரும் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியாகிறது.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் மூன்றாவது வீடியோவை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மஹத், யாஷிகா இருவரும் ஷெரினுக்கு டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றனர்.

டாஸ்க் என்ன என்று விளக்கும் மஹத், வீட்டில் உங்களுக்குப் பிடித்த நபருக்காக கடிதம் எழுத வேண்டும். அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட மாட்டாது. நீங்கள் மனதில் உள்ளதை எழுதலாம் என்கிறார்.

Loading...இதையடுத்து தனியாக அமர்ந்து கடிதம் எழுதும் ஷெரின், இருண்ட காலத்தின் வெளிச்சம் நீ என்று தொடங்குகிறார். கடிதத்தை எழுதி முடித்த பின் திடீரென தோன்றிய பிக்பாஸ் குரல், மஹத் - யாஷிகா இருவரும் ஷெரின் யாருக்கு கடிதம் எழுதினாரோ அவரிடம் அதை ஒப்படைக்கவும் என்று உத்தரவிடுகிறது.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஷெரின் தனது கடிதத்தை சுக்கு நூறாக கிழிக்கிறார். ஆரம்பத்திலிருந்தே தர்ஷனுடன் நட்பு பாராட்டி வரும் ஷெரின், தர்ஷனுக்கு கடிதம் எழுதினாரா அல்லது வேறு யாருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.வீடியோ பார்க்க: திரைப்பட விழாவில் வண்ண உடையில் ஜொலித்த நாயகிகள்

First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...