வனிதாவிடம் நேரடியாக மோதும் சாண்டி... முகெனுக்கு நடந்தது என்ன?

வனிதாவிடம் நேரடியாக மோதும் சாண்டி... முகெனுக்கு நடந்தது என்ன?
வனிதா விஜயகுமார் | சாண்டி
  • News18
  • Last Updated: August 13, 2019, 4:55 PM IST
  • Share this:
வனிதா வருகையை அடுத்து பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னைகள் எழத் தொடங்கியுள்ளன.

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடப்பது வழக்கம். இந்தமுறை இந்த டாஸ்க்குக்காக பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறியுள்ளது. விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வருகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது நபராக வெளியேறிய வனிதா, நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்திருப்பதால் போட்டியாளர்களை தனது கேள்விகளால் துளைத்தெடுத்தார்.


வீட்டில் நடந்த டாஸ்க்குகளுக்கு கஸ்தூரி நடுவராக இருந்ததில் குறை கண்டுபிடித்த வனிதா விஜயகுமார், பிக்பாஸ் வீட்டில் உதயமான காதல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது நேர்கொண்ட பார்வையை சுட்டிக் காட்டி அட்வைஸ் கொடுத்த வனிதா, “நோ மீன்ஸ் நோ’ என்பதுதான் படத்தின் கதை அதை புரிந்து கொண்டுதான் அபிராமி நடித்தாரா என்பதே தெரியவில்லை. ஒரு பெண் தனது விருப்பம்போல் உடை அணியலாம். அது அவளுடைய வாழ்க்கை. இப்படி ஒரு கதையுள்ள படத்தில் நடித்து விட்டு, இங்கு வந்து உன்னுடைய தனித்தன்மையை தொலைத்துவிட்டு ஒருவன் பின்னால் உன்னால் எப்படி ஓட முடிந்தது” என்றும் கேள்வி எழுப்பினார்.Loading...

மேலும் கவினைப் பார்த்து உன்னிடம் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் நீ அதற்கு வொர்த்தே அல்ல என்றும் கூறினார். வனிதாவின் இந்த பேச்சால் பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்னைகள் உருவாகியுள்ளன. இதுகுறித்த புரமோ வீடியோக்களை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.

அதில், முகெனின் காதலி குறித்து அபிராமியிடம் கூறியுள்ளார் வனிதா. இதனால் இருவருக்குமிடையே மோதல் உருவாகியுள்ளது. ஒருகட்டத்தில் அபிராமியை அடிக்க கை ஓங்கியுள்ளார் முகென். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகெனை சமாதானப்படுத்தும் சக போட்டியாளர்கள், அவருக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கையில் இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான் என்று வனிதாவிடம் நேரடியாக கூறுகிறார் சாண்டி. முன்னதாக தர்ஷன் வனிதாவிடம் நேரடியாக கேள்வி எழுப்பியதால் பிக்பாஸ் வீட்டில் ஹீரோவானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...