சாண்டி தள்ளிவிட்டு கீழே விழுந்த லாஸ்லியா? - கவினின் கோபத்தால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

news18
Updated: September 19, 2019, 9:57 AM IST
சாண்டி தள்ளிவிட்டு கீழே விழுந்த லாஸ்லியா? - கவினின் கோபத்தால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!
பிக்பாஸ்
news18
Updated: September 19, 2019, 9:57 AM IST
பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் ஒன்றில் கவினுக்கும் சாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வாரம் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்களைப் பெறும் போட்டியாளர் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து போட்டியாளர்கள் மும்முரமாகவும், முழுவீச்சிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தர்மகோல் பந்துகளை மூட்டையாக தூக்கிச் சென்ற டாஸ்க்கில் முகென் வெற்றி வாகை சூடினார்.


இதையடுத்து நள்ளிரவு 1.30 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போட்டியாளர்களை எழுப்பி ஒவ்வொருவருக்கும் தங்க முட்டை ஒன்று கொடுக்கப்பட்டு அதைப் பாதுகாக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் ஒவ்வொருவரும் காலைவரை தூங்காமல் கண்விழித்து டாஸ்க்கில் ஈடுபட்டு வந்தனர். பிக்பாஸ் கொடுத்த இந்த 7-வது டாஸ்க்கில் வெற்றி பெற்றது யார் என்பது இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தெரிய வரும்.

இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோ ஒன்றை நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது. அதில் டாஸ்க்கின் போது லாஸ்லியாவை துரத்திச் செல்கிறார் சாண்டி. ஒருகட்டத்தில் லாஸ்லியா கீழே விழ, கவின் கோபப்படுகிறார்.

உடனே சாண்டி வேண்டுமென்றே செய்யவில்லை என்று கவினிடம் கூற அதேகருத்தை தர்ஷனும் கூறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த கவின் சாண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Loading...பிகினி உடையில் நடிகை யாசிகா... வைரலாகும் போட்டோஸ்!

First published: September 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...